search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab CM"

    • மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான்
    • டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    "மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காங்கிரஸ் தலைவரான அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தார். அதன் பின்னர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். பஞ்சாபில் காங்கிரஸின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா, "முதலமைச்சர் பகவந்த் மானுக்கு 'நன்றி' தெரிவித்து, இதைத்தான் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

    அந்த வகையில், இன்று தமிழகத்திற்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் சிங்கும் பங்கேற்றார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " நான் டெல்லி செல்லும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதுண்டு. டெல்லியில் மாடல் பள்ளி போன்று தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்" என்றார்.

    பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முழு சுதந்திரம் இல்லையென்றால் அரசை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்" என்றார்.

    • பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில் பாதுகாப்பு.
    • மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

    சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஒதுக்கிய நிலையில், பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பகவந்த் மான் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும், மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம் ஆத்மி அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது.
    • இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தற்போது பஞ்சாப் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரின் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #AmritsarTrainAccident #CaptainAmarinderSingh
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள நிலையில் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அமன்தீப் மற்றும் குருநானக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்த அமரிந்தர் சிங், விபத்து நிகழ்ந்த ரெயில்வே கேட் பகுதியையும் பார்வையிட்டார்.



    இந்த விபத்து பற்றி விசாரிக்க உயர்மட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிள்ளது. இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி இன்னும் 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

    முன்னதாக, இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என நேற்றிரவு அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் இந்த தொகையை உடனடியாக அளிப்பதற்கு வசதியாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் அமரிந்தர் சிங் இன்று தெரிவித்தார். #AmritsarTrainAccident  #CaptainAmarinderSingh 
    பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற பஞ்சாப் மந்திரிசபை இன்று தீர்மானித்துள்ளது. #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில அரசின் மந்திரிசபை கூட்டம் முதல் மந்திரி கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் நடமாட்டமற்ற மாநிலமாக மாற்ற இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    போதைப் பொருட்களை கடத்தும், விற்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பஞ்சாப் அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். #PunjabCabinet #deathpenalty #drugpeddlers
    ×