search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "programme"

    பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் புதுபஸ் நிலைய வளாகத்தில் குழந்தை திருமணங்களே இல்லாத இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்தோ டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முகமது உசேன் தலைமை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கிருஷ்ணா தியேட்டர், மகளிர் கலைக்கல்லூரி, மருத்துவமனை, பள்ளி வளாகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    இந்தோ டிரஸ்ட் சார்பில் குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா என்ற தலைப்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரம், கிராமங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் டிரஸ்ட் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட பிரச்சாரம் செய்தனர். முடிவில் மேலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

    • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள்.

    உடுமலை:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன்,மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி ஆனந்தன் தொடங்கி வைத்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள். ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இதில் உடுமலை தாசில்தார் சுந்தரம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை அமராவதி அணைப்பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார்.

    அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    • புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    • வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

    புதுக்கோட்டை 

    1974-77 ஆம் வருட முன்னாள் மாணவர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்ட 5-வது மகாசங்கமம், குடும்பவிழா இருநாட்கள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தின் வெவ்வெறு பகுதியிலிருந்தும், நாட்டின் வெளி மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த 35 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் படித்து, வெவ்வேறு அரசு, தனியார் மற்றும் பொதுதுறைகளில் பணியாற்றி, ஒய்வு பெற்ற பின் நடைபெறும் இந்த குடும்ப நிகழ்ச்சியில், தாங்கள் பள்ளியில்பயின்ற நாட்களின் நினைவுகள் மற்றும் தங்களுக்குள்ள வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர். திருமயம் கோட்டை, குடுமியான்மலை ஈஸ்வரன்கோவில், சித்தன்னவாசல் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரில் பார்வையிட்டு, வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, 1974-7-ம் வருட புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளி மாணவர்களான அக்ரிஎன்.சர்புதீன், டாக்டர்எம்.கல்யாணகுமார், வெங்கட கோபாலகிருஷ்ணன், கோவிந்தன் மற்றும் உத்தமன் முதலானோர் செய்திருந்தனர்.

    • நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திரா நகர் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையேற்றார். நிகழ்வில் கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விதை பந்து வழங்கப்பட்டது.

    மேலும் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    • காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீரன்பாசறை சாார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ஈரோடு அரசு குழந்தைகள் காப்பக முன்னாள் மருத்துவர்.அசோக் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கலந்து கொண்டு கருத்துக்களை கூறினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

    தீரன்பாசறை செயலாளர் துளசிமணி நன்றி கூறினார். 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆலத்தூர் வட்ட வழங்க அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்தும், செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்தும், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும் பொழுது தரமான பொருட்களாகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரேஷனில் வழங்கப்படும் அரிசியினை எக்காரணத்தை கொண்டும் கால்நடைகளுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் தக்க நடவடிக்கை அரசு அதிகாரிகளால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, எரிவாயு சிலிண்டரை நுகர்வோர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியை- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    மதுரை

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையின ருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதை கள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்து ரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறையினர் தங்களது உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் புகையிலையால் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவ தோடு சமூகம் எவ்வாறு பாதிக்கப் படுகிறது? என்ப தையும் எடுத்துரைத்தார்.

    காவல் துணை ஆணையர் தலைமையிடம் மங்க ளேஸ்வரன், போக்கு வரத்து திட்ட கூடுதல் காவல் துணை ஆணையர் திருமலைக்குமார் ஆகி யோர் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர். 

    • பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வாலிகண்டபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் உள்படமொத்தம் 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை டி.வி. உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    • சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கரூர் கலெக்டர் அலுவலகத்தில்

    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டுசமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, தனித் துணை கலெக்டர் சைபுதீன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மின் நூலகத்தை பயன்படுத்தும் முறை குறித்த நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை மின் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் முறை பற்றிய விரிவுரையை ஏற்பாடு செய்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார். அவர் பேசுைகயில், மின் நூலகத்தின் நன்மைகளையும், அதைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இணைய நூலகத்தில் உள்ள புத்தகங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யும் முறை? அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார். இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப்பேராசிரியை சூர்யா நன்றி கூறினார்.

    உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

    • தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது
    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் குறித்து

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெகடர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில், இன்று ஆண்டிமடம் பேருந்து நிலையம், மீன்சுருட்டி பேருந்துநிலையம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் தா.பழூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியிகள் நடைபெறுகிறது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிந்து பயன்பெற வேண்டும் என்றார்.

    பின்னர், அவர் அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தரம் பிரித்து வழங்குவதற்காக

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நகர்ப்புற தூய்மைப்படுத்தி திட்டம் மட்டும் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு 2 வழங்கப்பட்டு அதன் மூலம் வீட்டில் இருக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வைப்பதற்கு கூடை வழங்கினார்கள்.

    நகராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக வைத்திருந்தால், துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் குப்பை கூடைகள் கூடைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை தாங்கினார். மற்றும் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் வைத்தனர். ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ஆர் முருகன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முன்னாள் தலைவர்கள் குமணன் செந்தில்வேல் விஜயகுமார் கிருபாநிதி மற்றும் உறுப்பினர்கள் கார்த்தி செந்தில் வேல் சிலம்பு செல்வன் சிவகார்த்திகேயன் சரவணன் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×