search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Program on Banned Plastics"

    • கோபியில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மக்கும் கழிவுகளை கையாளும் முறை குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கையேடு வெளியிடப்பட்டது.

    கோபி:

    கோபியில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார்.ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

    திருப்பூர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் மற்றும் செயலாளர் டாக்டர். கே வீரபத்மன் அவர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகரில் உள்ள வணிக நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக கிழங்கு மாவு மற்றும் கரும்பு சக்கை மூலம் தயாரிக்கப்பட்ட டம்ளர்கள், தட்டுகள், ஸ்பூன் மற்றும் பைகள் காட்சிப்படுத்தபட்டது.

    இதில் மக்கும் கழிவுகளை கையாளும் முறை குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கையேடு வெளியிட–ப்பட்டது. இதன் முதல் பிரதியை நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியின் இறுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

    நகராட்சியின் சுகாதார அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர் சவுந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×