search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pookkuzhi"

    • வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 47-ம் ஆண்டு பூச்சொரி தல் விழா நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி னர். பின்னர் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர்.

    பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ராமமுர்த்தி, தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், மாடசாமி, சேகர், கூடல்மற்றும் எஸ்.ஏ.பி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டா டப்படும்.

    வருசாபிஷேகம்

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி காலை 8 மணிக்கு வருசாபி ஷேகத்துடன் தொட ங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பா ஞ்சலி,நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திரு விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு மேளதாளம் வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு7 மணிக்கு பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீப ஆரா தனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    நேற்று காலை 9 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடந்தது.

    இன்று நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல். நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், நாளை (4-ந் தேதி) இரவு 8 மணிக்கு கேரள புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி , 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, இரவு12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • மாரியம்மன் கோவில் பூக்குழி விழா இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந் 4-ந் தேதி விழா தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டி, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் களை செலுத்தினர்.

    நேற்று பெண்கள் உள்பட திரளானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பின்னர் பால்குட ஊர்வலமும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை காமன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் பாண்டியன், ஊர் தலைவர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
    • சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் பாத்திமா அஸ்ஸனா உஸ்ஸனா தர்காவில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இதில் பங்கேற்பார்கள். 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த விழாவானது இப்பகுதி மக்களால் சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாராப்பூரில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் புனித நீராடினர். தொடர்ந்து ஆண்கள் மட்டும் 3 முறை (நெருப்பு தணலில்) பூக்குழியில் இறங்கினர். பின்னர் சந்தனம் பூசுதல் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நடந்தது.

    திருழாவை முன்னிட்டு தப்பாட்டம், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வாராப்பூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிநாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நோய் தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இத்திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆடி கொடை விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
    • கோவில் முன்புறம் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி சட்டியுடன் இறங்கி தீ மிதித்து வலம் வந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற சிவசக்தி பத்திரகாளி அம்மன் மலையாளத்து சுடலை மகாராஜா ஆலய ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

    முக்கிய நிகழ்வான அக்னி சட்டி மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக ஊர் சுற்றி விளையாடி, பின்னர் கோவில் முன்புறம் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி சட்டியுடன் இறங்கி தீ மிதித்து வலம் வந்தனர்.

    தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக வில்லுப்பாட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை சங்கர் சாமிகள் செய்திருந்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி தெளித்து கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

    • கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடங்கியது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.

    இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். 

    ×