search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police seized"

    • கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறியது.
    • இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்பு லியூர் சிக்னல் அருகே டி.எஸ்.பி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரத்தி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறி யது. இதனைப் பார்த்த போலீசார் சந்தேகமடைந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த காரில் பின்பக்கம் சீட் பகுதியில் இரும்பு குவிந்து இருந்த தை பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் கடலூர் திருப்பாதி ரிப்புலி–யூர் போலீஸ் நிலையத்தில் கார் மற்றும் 2ேபர்களை பிடித்து சென்று ஒப்படை–த்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர்கள் கடலூர் திருச்சோபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 62)நடுவீரப்பட்டை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவர்கள் கடலூர் அருகே உள்ள தனியார் கம்பெனி–யில் இருந்து ஒரு டன் இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சென்னையில் நீண்டநாட்களாக சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் - வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் நீண்டநாட்களாக பலர் தங்களது பழுதான கார் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அந்த பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ள கார்களை உடனடியாக அப்புறப்படுத்த சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் இன்று சென்னை மாநகர் முழுவதும் சிறப்பு சோதனை என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சாலையோரமாக குப்பைகள் போல தேங்கிக் கிடந்த ஏராளமான கார்-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வண்ணாரப்பேட்டை பகுதியில் வேன் மற்றும் கார் ஆகியவற்றை போக்குவரத்து போலீசார் அங்கிருந்து கிரேன் மூலம் அகற்றி எடுத்துச்சென்றனர்.

    இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காரின் சொந்தக்காரர்கள் தங்களது காருக்கான உரிய அவணங்களை காட்டி பறிமுதல் செய்யப்பட்ட கார்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    எனவே நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது வாகனங்களை பொதுமக்களே அப்புறப்படுத்தி அபராத நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் தவறவிட்ட 19 பவுன் நகையை கண்டெடுத்து அதை அடகுவைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 49). இவரது கணவர் சம்பத்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்கிறார். இவர்களின் மகன் சந்தோஷ்குமார் என்ஜினீயரிங் மாணவர். கடந்த 4-ந்தேதி அன்று ஸ்ரீபிரியா தனது தாயாருடன் திருத்தணிக்கு சென்றார்.

    அன்றைய தினம் இரவே ரெயில் மூலம் சென்னை திரும்பினர். சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்ரீபிரியா தனது தாயாருடன் ஆட்டோவில் சென்றார்.

    ஆட்டோவை விட்டு இறங்கிய பின்னர் தனது மணிபர்ஸ் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்ஸ்க்குள் 19 பவுன் தங்க நகைகளும், ரூ.1,500 பணமும் இருந்தது. இது குறித்து அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தான் ரெயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்குள் நுழையும் வரை பர்ஸ் எனது கையில் இருந்தது. எனவே எனது வீட்டுக்கு செல்லும் பகுதியில் தான் மணிபர்ஸ் கீழே விழுந்திருக்கக்கூடும் எனவும் போலீசாரிடம் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மணிபர்சை தவறவிட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் தவறவிட்ட மணிபர்சை சரக்குவேனில் வந்த 2 பேர் எடுத்தது தெரியவந்தது. மேலும் சுற்றும் முற்றும் பார்த்த அவர்கள் அந்த பர்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வேனில் செல்லும் காட்சிகளும் கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபோக கேமராவில் பதிவான கூடுதல் காட்சிகளையும் ஸ்ரீபிரியாவின் மகன் சந்தோஷ்குமார் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அவர்கள் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதி (34). சரக்கு வேன் டிரைவர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்(49). கிளனர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அந்த நகைகளை அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளனர்.

    இதனால், அவர்கள் இருவர் மீதும் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நகைகளை பத்திரமாக மீட்டுக்கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ஸ்ரீபிரியாவும் அவரது கணவர் சம்பத்குமாரும் நன்றி தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஸ்ரீபிரியாவிடம் அவரது நகையை போலீசார் ஒப்படைத்தனர்.

    அப்போது, ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். இதற்காக என் பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதால்தான் எனது நகை பத்திரமாக திரும்ப கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.
    ×