search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Play-off"

    • நேற்றைய போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
    • பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும்.

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது போட்ட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

    இதன்மூலம் பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் ஆனது. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    கேமரூன் கிரீன் வீசிய 12-வது ஓவரின் 5-வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2-வது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

    இதே போல பியூஷ் சாவ்லா வீசிய 3-வது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் கிரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா ரன் அவுட் செய்தார்.

    இந்த 2 பேரையும் ரன் அவுட்டாக்கிவிட்டதாக கருதப்படும் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், கிரீன் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 3 ரன் அவுட் லக்னோ அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2-வது முறையாக லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியுள்ளது.

    • நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.

    இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
    • ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது.

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்றது.

    வெற்றிபெற வேண்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோற்றதால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் 61 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 101 ரன் எடுத்தார். தொடர்ச்சியாக 2 சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐ.பி.எல்.லில் 7 சதம் அடித்து சாதனை புரிந்தார்.

    விராட்கோலியின் இந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் வீரர் சுப்மன்கில் செஞ்சூரி அடித்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்து பெங்களூரை வெளியேற்றினார்.


    பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது. அவரால் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.

    மற்ற போட்டிகள் முடிந்த பிறகு இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசி சிரித்த விராட் கோலி, இந்த போட்டி முடிந்த பிறகு சோகமாகவே காணப்பட்டார். குஜராத் அணி வீரர்கள் கோலியிடம் ஜெர்சியில் ஆட்டோகிராப் கேட்டனர். ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அவர் சோகத்துடனே காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தரும் விதமாக பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த சீசனில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 ஆட்டத்தில் 639 ரன் குவித்துள்ளார். 2 போட்டியில் அவுட் ஆகாததால் சராசரி 53.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 139.82 ஆக உள்ளது. இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்துள்ளார்.

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது.

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

    இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

    இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    இதில், அதிபட்சமாக 52 பந்துகளில் சுப்மன் கில் சதம் அடித்து 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து, விஜய் சங்கர் அரை சதம் அடித்து 53 ரன்களும், விரிதிமான் சாகா 12 ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்தனர். ராகுல் திவாதியா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இதனால், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது. குஜராத் அணியின் வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    • லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு ரெண்டாவது அணியாக முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின.

    இந்த ஆட்டம் லக்னோவிற்கு மட்டுமல்ல மும்பை, ஆர் சி பி அணிகளுக்கும் முக்கிய போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஆர் சி பி மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக மூன்றாவது நான்காவது இடங்களை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங் சிங் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் கடைசி மூன்று பந்துகளில் 3 சிக்ஸ் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்னும் ஒரு இடம் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு ஆர் சி பி, மும்பை ராஜஸ்தான் 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிந்து விட்டன.

    இன்று மதியம் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ஆர்சிபி குஜராத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.

    ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை முன்னேறிவிடும். இதனால் மும்பை அணி வான்கடேயில் வெற்றி பெற்றாலும் ஆர்சிபி குஜராத் அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை சொந்த மண்ணில் ஆர்சிபி யும், மும்பையும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணியும் இந்த இரண்டு அணிகளும் தலா ஏழு வெற்றிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.

    ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி-யும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் கூட கடைசி போட்டி என்பதால் குஜராத்தை இத்தனை ரன்னுக்கு சுருட்ட வேண்டும் அல்லாத பட்சத்தில் இத்தனை ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு நிலையில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இன்றைய சண்டே ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. அதிரடி பரபரப்பு திரில் மோதலை இன்றைய போட்டியில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும்.
    • மும்பை பெங்களூரு அணிகள் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில் ஐதராபாத்தில் 18-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால் பெங்களூரு அணி கடைசி லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். மும்பை ஒருவேளை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் போதும். ஏனென்றால் மும்பையை விட பெங்களூரு அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளது. இந்த 2 அணியும் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஒருவேளை கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணி தோல்வியடைந்தால் பெங்களூரு மற்றும் மும்பை அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    நேற்று நடைபெற்ற பிளே-ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvSRH #HarbhajanSingh

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 140 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 



    இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: “விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்.@chennaiipl மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா.அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி”.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvSRH #HarbhajanSingh
    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    11-வது ஐ.பி.எல். தொடரில், 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். #IPL2018
    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    அதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ் ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின் ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு சாதகமான பாதகமான முடிவாக அமையும்.

    ‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய விவரம்:-

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:


    ஐதராபாத் அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இன்றைய ஆட்டத்தில் டெல்லியையும், 13-ந்தேதி சென்னையையும், 17-ந்தேதி பெங்களூரையும், 19-ந்தேதி கொல்கத்தாவையும் சந்திக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பை  ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் அதாவது 18 புள்ளிகளை பெற்றால் அதிகாரப்பூர்வமாக நுழைந்து விடும். அபாரமான பந்து வீச்சை வைத்து அந்த அணி முத்திரை பதித்து வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:


    சென்னை அணி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ‘பிளே ஆப்’ சுற்றை உறுதி செய்யலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-ந்தேதி), ஐதராபாத், (13-ந்தேதி), டெல்லி (18-ந்தேதி), பஞ்சாப், (20-ந்தேதி) அணிகளுடன் மோத வேண்டும். இதில் சில ஆட்டங்கள் சவாலாக இருக்கும். டோனி அதிரடியாக விளையாடி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப்:


    அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 வெற்றி 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 4 ஆட்டத்தில் இரண்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.

    பஞ்சாப் அணிக்கு கொல்கத்தாவை 11-ந்தேதியும், பெங்களூரை 14-ந்தேதியும், மும்பையை 16-ந்தேதியும், சென்னையை 20-ந்தேதியும் சந்திக்கிறது. இதில் கொல்கத்தா, மும்பையுடன் மோதும் ஆட்டங்கள் முக்கியமானதாக அமையும். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றால் 14 புள்ளிகளை பெறும். அப்போது மற்ற அணிகளின் ஆட்டத்தை பொறுத்து அந்த அணியின் நிலை இருக்கும்.

    மும்பை இந்தியன்ஸ்:


    5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளுடன் மோத வேண்டும். இந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலை இருக்கிறது.

    தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றதால் ரன் ரேட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த அணி 4-வது இடத்துக்கு தற்போது முன்னேறி இருக்கிறது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:


    மும்பையை போலவே தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தாவும் 10 புள்ளியுடன் (5 வெற்றி, 6 தோல்வி) இருக்கிறது. மும்பைக்கு எதிராக நேற்று மோசமாக தோற்றதால் ரன் ரேட்டில் பாதிப்பு ஏற்பட்டு 5-வது இடத்துக்கு பின் தங்கியது.

    அந்த அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்கள் (பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத்) உள்ளது, இந்த மூன்றிலும் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தானுடன் மோதும் ஆட்டம் முக்கியமானதாகும்.

    ராஜஸ்தான்  ராயல்ஸ்:


    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் 4 ஆட்டங்கள் (சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர்) உள்ளன. இதில் 3 அல்லது 4 ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரன்ரேட்டில் அந்த அணி மைனசில் இருப்பது பாதகமானதே,

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:


    3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 4 ஆட்டம் எஞ்சி உள்ளது. அந்த அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்து 4 ஆட்டத்திலும் வென்றால் தான் 14 புள்ளிகளை பெற முடியும்.

    டெல்லி டேர்டெவில்ஸ்:


    பெங்களூர் அணியை போலவே டெல்லி அணி இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பை பெறுவது கடினம். தகுதி பெறா விட்டாலும் அந்த அணியின் சில வெற்றிகள் மற்ற அணிகளுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தலாம். #IPL2018 #IPLPlayoff
    ×