search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planning"

    • பாதுகாப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
    • ஒரு மாற்று பயணத்திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது.

    பயணங்கள் நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாதவை. நீங்கள் மேற்கொள்ளும் பயணம், சூழ்நிலை, நேரம், காலம் போன்ற பல்வேறு காரணிகளால் சற்று கடினமானதாக மாறலாம். ஒவ்வொரு பருவகாலத்தில் பயணம் செய்யும்போதும் அதற்கு ஏற்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பயணம் இடையூறுகள் இன்றி வெற்றிகரமாக அமையும். அந்த வகையில் குளிர் காலங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில பயனுள்ள குறிப்புகள்.

    குளிர்காலத்தில் பயணம் செய்யும்போது கதகதப்பை தரக்கூடிய பாதுகாப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். மாற்று உடை ஒன்றை உடன் கொண்டு செல்வது எப்போதும் பயன் தரும் பழக்கமாகும். பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி மேலும் குளிரை உண்டாக்கும். எனவே கம்பனி மற்றும் தோல் ஆடைகள் குளிர்கால பயணத்தின்போது அணிவதற்கு ஏற்றவையாகும்.

    குளிர்கால பயணத்தில், வழுக்கும் வகையிலான காலணிகள், ஹீல்ஸ் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உடலின் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய காலணிகளை அணிவது நல்லது.

    பயணத்தின்போது குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் நிரம்பிய பிளாஸ்க்கை உடன் எடுத்துச்செல்வது பலவிதங்களில் உங்களுக்கு பயன்படும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழியும். இந்த காலத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.

    அடிக்கடி மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இந்த சமயங்களில் நீங்கள் பயணம் மேற்கொண்டால் குடை, ரெயின்கோட் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்வது அவசியமானதாகும். பயண காலத்தில் எப்போதும் புதிதாக தயாரித்த, சூடான உணவுகளையே சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.

    குளிர்காலங்களில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களை உடன் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    மருந்துகள், பால் பவுடர் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை போதுமான அளவு கொண்டு செல்ல வேண்டும். குளிர்கால பயணத்தின் போது உங்கள் உடமைகளை கொண்டு செல்ல துணியால் தயாரிக்கப்பட்ட பையை பயன்படுத்தாமல், பாதுகாப்பான பெட்டிகளை உபயோகிப்பது சிறந்தது.

    குளிரில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும். மாய்ஸ்சரைசர், லிப் பாம் ஆகியவற்றை பயணத்தின்போது பயன்படுத்த வேண்டும். குளிர், மழை, பனி இவையெல்லாம் நீங்கள் முன்கூட்டியே போட்டுவைத்த பயண திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே. எப்போதும் ஒரு மாற்று பயணத்திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது.

    • உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம்.
    • முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

    காலையில் எழுந்தது முதலே வீட்டு வேலைகளை வேகமாக முடிப்பதற்கு சுழலும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை காட்டுவது அவசியம். அப்போதுதான் சோர்வின்றி எந்த வேலையையும் மேற்கொள்ள முடியும். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தால் உடல் நலனுடன் மற்றொரு கவலையும் எட்டிப்பார்க்கும். தங்களால் நேர்த்தியாக அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்கு செய்ய வேண்டிய திட்டமிடல்கள் குறித்து பார்ப்போம்.

    இரவிலே தயாராகுங்கள்:

    காலையில் எழுந்ததுமே சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வது என கவனம் முழுவதும் வேலையின் மீதுதான் பதிந்திருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும்.

    அதிலும் வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவியாக இருந்தால் அவசர கதியில் புறப்பட வேண்டியிருக்கும். அதனால் கவன சிதறல்கள் ஏற்படும். ஒருசில வேலைகளை செய்து முடிக்க முடியாமல் போகலாம். அவசரத்தில் தவறு நடக்கலாம்.

    அதனால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முந்தைய தினம் இரவே `நாளை என்ன சமையல் செய்ய வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், அதற்கு ஏற்ற அலங்கார பொருட்கள் என்னென்ன? என்பதை தேர்வு செய்து வைத்துவிட வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 15 நிமிடங்கள்தான் செலவாகும். மறுநாள் காலையில் வேலைகளை சுலபமாக முடித்துவிட்டு நீங்களும் பணிக்கு செல்ல தயாராகிவிடலாம். காலை நேர பரபரப்பையும், தேவையில்லாத டென்ஷனையும் தவிர்த்துவிடலாம். சருமமும் சோர்வுக்கு ஆளாகாது. அலங்காரத்திற்கும் போதுமான நேரம் செலவிட்டு விடலாம்.

    ஜடை பின்னல்:

    இரவில் தூங்க செல்லும்போது இறுக்கமாக ஜடை பின்னுவதை தவிர்க்க வேண்டும். கூந்தல் முடி தளர்வாக இருக்கும்படி பின்னுவதுதான் சரியானது. காலையில் எழுந்திருக்கும்போது சிக்குமுடி பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும். சிரமமின்றி எளிமையாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்வதற்கும் வழிவகை செய்யும். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் சிறிதளவு லோஷனை கூந்தலில் தடவலாம். அப்படி செய்தால் அலங்காரத்திற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது.

    ஐ லைனர்:

    தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படும். ஐ லைனர் உபயோகித்து இதை அழித்து விடலாம். வீட்டில் அலங்காரம் செய்வதற்கு நேரம் இல்லையெனில் கைப்பையில் அலங்கார பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அலுவலகம் செல்லும் வழியிலோ, அலுவலகம் சென்ற பிறகோ எளிமையான ஒப்பனையை செய்துவிடலாம். அதற்கான சூழல் இல்லாதபட்சத்தில் பளிச்சிடும் நிறம் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். அது அலங்காரம் இல்லாமலே உங்களை அழகாக காண்பிக்கும்.

    இரவு நேர குளியல்:

    இரவில் சாப்பிட்டுவிட்டு சமையல் அறை வேலைகளை எல்லாம் முடித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இந்த குளியல் தூக்கம் கண்களை தவழ வைக்கும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்க உதவி புரியும்.

    • நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது.
    • கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

    சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

    இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    • இருட்டணை வருவாய் கிராமங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை சென்னை விதைசான்று மற்றும் அங்ககச்சான்ற–ளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குநர் அசீர்கனக–ராஜன் மேல்சாத்தம்பூர், இருட்டணை வருவாய் கிரா–மங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டார். வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட திட்டப்பணிகளான பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்ப்பாய்கள் விநியோகம் குறித்து மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தோட்டக்கலை துறையின் சார்பாக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி–னார்.

    இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ராஜகோபால் (மாநிலத்திட்டம்), முருகன் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தோட்டக்லைத்துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

    • தெற்கு குளத்தூர் பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.
    • பணி முடிவடையும்போது 4.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    விளத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மந்திகுளம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு குளத்தூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதமர் விவசாய நீர் பாசன திட்டம், நீர்வடி பகுதி மேம்பாட்டின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.

    2.70 ஏக்கர் பரப்பளவில் இயறகை வள மேம்பாட்டு பணியின் கீழ் நடைபெற்று வரும் ஊரணி சீரமைக்கும் பணியினை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார்.

    அப்போது பணி முடிவடையும்போது 4.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பூசனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.86 லட்சம் மதிப்பில் 0.39 ஏக்கர் பரப்பளவில் தடுப்பணை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். இப்பணி முடிவடையும்போது 2.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும்.

    வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மந்திக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கீழ் மந்திக்குளத்தில் காசிநடாருக்கு சொந்தமான நிலத்தில் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியிணை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் மந்திக்குளம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் உத்தர விட்டார்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர்கள், வேளாண்மை, உழவர் பயிற்சி நிலையம், நுண்ணீர் பாசனம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், கோவில்பட்டி ஆர்.டிஓ. ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    உத்தரபிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். #UttarPradesh #GaneshChatruthi #TerroristAttackPlan
    லக்னோ:

    வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா ஒரு வாரத்துக்கு மேல் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். உத்தரபிரதேச மாநிலத்திலும் நேற்று தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் சாகேரி பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி காமர் உஸ்சாமா (வயது 37) என்பவரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த அவரை கடந்த 10 நாட்களாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக கூறிய டி.ஜி.பி. ஓ.பி.சிங், இதுபற்றி விரிவாக தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் டி.ஜி.பி. ஓ.பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அவர் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானில் பயிற்சி பெற்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்தார். ஏற்கனவே 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருந்தார். பி.ஏ. 3-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த அவர், கம்ப்யூட்டரை கையாளுவதில் திறமையானவராக இருந்தார்.

    சமூக வலைத்தளத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த காமர், கடந்த ஏப்ரல் மாதம் ஏ.கே.47 துப்பாக்கியுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அன்று முதல் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருந்தார்.

    தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் கான்பூர் போலீசார் உதவியுடன் தீவிரவாத தடுப்பு படையினர் அவரை கைது செய்தனர். பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும், அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்தும் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    அவர் கான்பூரில் ஏன் தங்கியிருந்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத ஒற்றுமையை குலைப்பதற்காக அவர் இங்கு தங்கியிருந்தாரா? அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் இங்கு வந்தாரா? என தீவிர விசாரணை நடைபெறுகிறது.

    இவ்வாறு டி.ஜி.பி. சிங் கூறினார்.  #UttarPradesh #GaneshChatruthi #TerroristAttackPlan
    ×