search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photo Exhibition"

    • நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளனர்.
    • நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் பக்தர்களை கவரும் வகையில் திருமலையில் கவர்ச்சியான, கருத்துகளுடன் மலர்-புகைப்படக் கண்காட்சி நடப்பது வழக்கம்.

     அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கலை வடிவங்களை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் துரியோதணன் சபையில் திரவுபதி துகிலுரிக்கப்பட்ட காட்சி, புகழ்பெற்ற மாயா பஜார், மகாபாரதத்தில் இருந்து

    பிருஹன்னலா-உத்தர குமார அத்தியாயங்கள் உள்பட இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான கருத்துகளுடன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் என்பவர், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மலர் கண்காட்சியில் காய்கறிகள், ஐஸ், தானியங்கள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு தெய்வ உருவங்களை செதுக்கி வருகிறார். நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளார்.

    ராவணன் ஜடாயுவை கொன்றது, ராமரின் மகன்களான லவ-குசா, ராம ஜனனம், மோகினி-பஸ்மாசூரன், பீமசேனன்-பாகாசூரன், அனந்தாழ்வார் அத்தியாயங்கள் தவிர திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி போன்ற கலை வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் திருமலையில் பல்வேறு புகைப்படங்களும் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    அலிபிரியில் உள்ள கருடன் சிலை, திருமலை கோவில் உள்பட பல்வேறு சிற்பங்களை தேவஸ்தானத்தின் பாரம்பரிய சிற்பக்கழகம் வடிவமைத்து வைத்துள்ளது. அதில் கல், சிமெண்டு, இரும்பு, மரம் மற்றும் வண்ணப்பூச்சு வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேதப் பொருட்கள், மதம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வைத்திருப்பது தேவஸ்தானத்தின் பெருமையை உயர்த்தியது.

    இதுதவிர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள், ஸ்ரீவாரி புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள், சங்கு, சக்கரம் உருவங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலின் தங்க கொடிமரம், பலிபீடம் பிரத்யேக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

    வேலூர்:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்று புகைப்பட கண்காட்சி நடந்தது.

    இந்த கண்காட்சிக்கு வேலூர் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் (பொறுப்பு) இளமுருகன் தலைமை தாங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்து 100 புகைப்படங்கள் இன்று முதல் 10 நாட்களுக்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சுற்றுலா துறை தலைவர் ரவிசங்கர் துணை பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 55 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கோட்டையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம். கல்லூரியில் பேச்சு கட்டுரை கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்
    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றியம், பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்தி ட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை பனையூர் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • தமிழ்நாடு நாள் விழா வருகின்ற ஜூலை 23 வரை நடைபெறுகிறது.
    • மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், செய்தி மக்கள் தொடர் புத்துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18-ஆம் நாளை "தமிழ்நாடு நாள் விழா" குறித்து பொது மக்கள் மற்றும் மாண வர்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், "தமிழ்நாடு நாள் விழா" வருகின்ற ஜூலை 23 வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற வுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், "தமிழ்நாடு நாள் விழா" சிறப்பு புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு உருவான வரலாறு, தமிழ்நாட்டின் சிறப்புகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க செயல் திட்டங்கள், தமிழ்மொழியின் தனித் தன்மை போன்ற பல்வேறு அரிய புகைப் படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி கள் அனைவரும் தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பார்வை யிட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் வருகை புரிந்து ஆர்வமுடன் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் பற்றி தாங்கள் அறிந்து கொண்டதாக கருத்து தெரி வித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரவீனா குமாரி உட்பட பலர் உள்ளனர்.

    • மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1. 11.1956 -ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது. இந்த நிலையில் ஜூலை 18- ம் நாள் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை இன்று( 18 ந்தேதி) முதல் வருகிற 23- ந்தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கூடுதல்கலெக்டர் மதுபாலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டிற்கு “தமிழ் நாடு ” என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
    • இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு " என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி, தமிழ் நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, நாளை காலை 9.30 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேரணி நடைபெறகிறது.

    பெரியார் சிலை அருகே பேரணி தொடங்கி, திரு வள்ளுவர் சிலை வழியாக சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவடைய வுள்ளது.

    தொடர்ந்து கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

    அதேபோன்று, சேலம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புப் புகைப்படக்கண் காட்சி அரங்கினை பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிடும் வகையில் நாளை முதல் 23-ந் தேதி வரை அமைக்கப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர், நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
    • 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்த ப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
    • 21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, 

    கடந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் 73 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அரசின் மக்கள் நலன் திட்டங்கள் மக்களை சென்றடைவது மற்றும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது. இந்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வருங்கால சந்ததியினர் வாழ தகுயில்லாத சூழ்நிலைஉருவாகும். மேலும் மாணவர்கள் அனைவரும் பாடபுத்தகத்துடன் பொது அறிவு புத்தகங்களையும் சேர்த்து படித்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல வேலைக்கு செல்ல முடியும். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசுகையில், 

    21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். இவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு குடும்ப உறுப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த படிப்பும், பொது அறிவையும் வளர்த்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழலாம் உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டும் இருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம் என கூறினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
    • கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்ப கத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகாதினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ஆகிய மையக்கருத்துக்களில் இந்த ஒருங்கிணைந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று நடைபெறும் கண்காட்சி தொடக்க விழாவில் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் கவுதம சிகாமணி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் சுப்பராயுலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் 14- ந் தேதி காலை ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கான சிறப்பு கருத்தரங் கமும், மாலை நகராட்சி தூய்மைப் பணியாளர் களுக்கான சிறப்பு கருத் தரங்கமும் நடைபெறு கின்றது. 15- ந் தேதி தேதி முற்பகல் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான சிறப்பு அமர்வும், மாலை அங்கன்வாடி பணியா ளர்கள், வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு அமர்வும் நடைபெறுகின்றது. 16- ந் தேதி காலை கல்லூரி மாணவர்களுக்கு பூமியைக் காப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும், மாலை பள்ளி மாண வர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டி யும் நடைபெறுகின்றது. கண்காட்சியில், ஊட்டச் சத்து அரங்கு, ஆதார் திருத்த அரங்கு, காசநோய் அரங்கு, சுகாதாரத் துறை அரங்கு, மகளிர் திட்ட அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, மருத்துவ மூலிகை அரங்கு ஆகிய வைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார். அப்போது மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்கு னர் முனைவர் சிவக்குமார், கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி (புதுச்சேரி), போஸ்வெல் ஆசீர் (மதுரை), தியாகராஜன் (தருமபுரி) ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கி வைத்தார்.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியை பா.ஜ.க.வினர் தொடங்கி தீவிரமாக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தற்போதே தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், நிர்வாகிகள் முருகன், சங்கீதா, குமரன், பாலமுருகன், நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு திட்டங்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-

    ஓயா உழைப்பில் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி எனும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கடந்த 10 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், உள்ளூர் கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    மேலும் அரசு திட்டங்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும், இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பத்திரிகையாளர்களுக்கும், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்திய பரதாலயா, புருஷோத்தமன் நாட்டி யக்குழு, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் கலெக்டர் பரிசு, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் சுப்பையா, தென்காசி செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் இளவரசி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வ.உ.சி. பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சி பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும், புகைப்படக் கண்காட்சி பேருந்து இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்தது.

    அதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடியாக சென்று ஏராளமான மாணவ - மாணவிகளால் பார்வையிடப்பட்டு வருகிறது.

    இந்த பேருந்தானது இன்று நமது மாவட்டத்திற்கு   வந்துள்ளது. இன்று முதல் வருகிற  3-ந் தேதி வரை நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் வ.உ.சிதம்பரனார் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, நூலகர் (ஓய்வு) முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×