search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "percentage"

    • 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    • அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா கட்சி இந்த தடவை 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது. இதற்காக மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் தீவிரமாக பா.ஜ.க. தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்து 160 தொகுதிகளில் பா.ஜனதா மிக மிக பலவீனமாக இருப்பதாக பா.ஜனதாவினர் அறிந்துள்ளனர். எனவே அந்த 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 55 சதவீதம் வாக்குகளை பெற்றால் மட்டுமே 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற முடியும். இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 10 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் தென்னிந்தியாவில் உள்ளன. அந்த 160 தொகுதிகளையும் 7 மண்டலங்களாக பிரித்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் அதிகளவில் தென் மாநிலங்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10 சதவீத வாக்குகளை கூடுதலாக பெறுவதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக வருகிற 22-ந் தேதி அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பா.ஜனதா ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள் பற்றி துண்டு பிரசுரங்களை நாடு முழு வதும் வீடுதோறும் கொடுப்பதை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி கோவில் விழாவுக்கு பிறகு ஜனவரி கடைசி வாரம் முதல் பா.ஜக. தலைவர்களின் நாடு தழுவிய பிரசாரம் தொடங்க இருப்பதாகவும் டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறையாக சுற்றுலா துறை விளங்குகிறது.
    • சிறிய நாடான மாலத்தீவு 32 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.

    கும்பகோணம்:

    இந்திய பண்பாடுமற்றும் சுற்றுலா முதுநிலை ஆரா ய்ச்சி துறையின் சார்பில் கும்பகோணம் அரசுஆடவர் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசினர் ஆடவர் கல்லூரி முதல்வர் (பொ) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராமசுப்பிரமணியன், கணிதத்துறை தலைவர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அனைவரையும் இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல்துறை தலைவர் முனைவர் தங்கராஜு வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன், புதுக்கோ ட்டை அரசினர் பெண்கள் கல்லூரியின் சுற்றுலாத்து றை தலைவர் நரசிம்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .

    விழாவில் சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன் பேசியதாவது:-

    ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா மறு சிந்தனை என்பதாகும். அதாவது மாற்றி சிந்திக்க வேண்டும் என்பதே.

    உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறை சுற்றுலா விளங்குகிறது.

    சுற்றுலாதுறை நிலையான வருமானத்தை தரக்கூடியது, சிறிய நாடான மாலத்தீவு 32 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதுநிலை சுற்றுலா ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி பேராசிரியர் லதா நன்றி கூறினார்.

    • மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
    • வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதின மடத்தில் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்–சாரியார் சுவாமிகளை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். அவருக்கு ஆதினம் சார்பில் நினைவு பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சிவன், தருமபுரம் ஆதீனம் நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நமது நாடு விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண் துறை, வேளாண் அறிவியல் துறை ரசாயனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும்.

    தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும், மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்ஷினி முதலிடமும், சவுமியா இரண்டாமிடமும், ஐஸ்வர்யா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாமிதா பானு முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் இரண்டாமிடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீன திருமடத்தால் நடத்தப்படும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தர்ஷினி (474/500) முதலிடமும், சவுமியா (472/500) இரண்டாம் இடமும், ஐஸ்வர்யா (468/500) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உமாமகேஸ்வரி (583/600) முதலிடமும், கங்கா (553/600) இரண்டாம் இடமும், ரெஜீனா (544/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாமிதா பானு (575/600) முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் (460/600) இரண்டாம் இடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் (459/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியி ன் ஆட்சி மன்ற குழுத்த லைவர்ராஜேஷ்,செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், ஆதீன பொது மேலாளர் கோதண்ட ராமன், பள்ளி முதல்வர் ஜெகதீ ஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவ}மாணவியரை தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    • சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×