search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavithrotsavam"

    • ஸ்ரீமலையப்பசாமிகள், தாயாருடன் பவித்ரமாலை அணிந்து மாட வீதிகளில் எழுந்தருளினர்
    • பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு தென்திருமலை திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆவணி மாத பவித்ரோற்சவம் தொடங்கியது. அப்போது மாலை நேரத்தில் புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திரபுஷ்பம், பிரபந்த சாற்றுமுறை, பிரசாத கோஷ்டி, ஏகாந்த சேவை நடைபெற்றது.

    தென்மலை திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் பவித்ரோற்சவத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியான சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பின்னர் புண்ணியாக வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், சாற்றுமுறை, பிரசாத கோஷ்டி மற்றும் மலையப்பசாமி உடன் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூதேவி தாயாருக்கும் ஸ்நபன திருமஞ்சனமும் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ரீமலையப்பசாமிகள், ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் பவித்ர மாலை அணிந்து மாட வீதிகளின் வழியாக வலம் வந்து யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடந்து வந்தது. நிறைவுநாளான நேற்று காலை யாகசாலையில் வைதீக காரியகர்மங்களும், அதன் பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது.

    மாலை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து யாக சாலையில் வேத நிகழ்ச்சிகள், பூர்ணாஹுதி, உற்சவமூர்த்திகள் மற்றும் கும்பத்தை விமான பிரதட்சணைக்கு கொண்டு வருதல், கும்ப ஆவாஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இத்துடன் பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

    • உற்சவர்களுக்கு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனைகள், பூஜைகள், திருவிழாக்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நேற்று உற்சவர்களான சீதா, ராம, லட்சுமணர் விமான பிரகாரமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சாத்துமுறை, ஆஸ்தானம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான சீதா, ராமா், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை யாக சாலை பூஜை, பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் நடக்கிறது.

    14-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள், பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 15-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் மற்றும் பவித்ர பூர்ணாஹுதி நடக்கிறது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. மேற்கண்ட 3 நாட்கள் காலை நேரத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை நேரத்தில் திருவீதி உற்சவமும் நடக்கிறது.

    பவித்ரோற்சவ விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி நேற்று தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதர், கோவில் ஆய்வாளர் சலபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    • பவித்ரோற்சவம் நாளை தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • இன்று மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை, உற்சவங்களில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்கான பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி கோவிலில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதற்காக, இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    30-ந்தேதி உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலசபூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ரா சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 2-ந்தேதி காலை மகா பூர்ணாஹுதி, கலசோத்வாசனம், பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு மூலவர்களுக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரருக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    • 29-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை மற்றும் உற்சவங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகிற தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதம் (பவித்ரம்) பாதிக்கப்படாமலும் இருக்க வேவேண்டி சாஸ்திர முறைப்படி ஆண்டுக்கொரு முறை பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதற்காக 29-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    முதல் நாளான வருகிற 30-ந்தேதி உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலச பூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 2-வது நாளான ஜூலை மாதம் 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ர சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 3-வது நாளான ஜூலை மாதம் 2-ந்தேதி காலை மகாபூர்ணாஹுதி, கலசோற்வாசனம், பவித்ர சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது.

    • சுதர்சன ஹோமம் நடந்தது.
    • நரசிம்மருக்கு அபிஷேகம் நடந்தது.

    திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் வீர நரசிம்மர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பவித்ரோற்சவம் நடந்தது. இதனையொட்டி நேற்று சுதர்சன ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து புனிதநீர் அடங்கிய யாக குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நரசிம்மருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆண்டுக்கு ஒரு முறை ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
    • 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள வேதவல்லி சமேத வேதநாராயணசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆண்டுக்கு ஒரு முறை ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 19, 20-ந்தேதிகளில் நடக்கிறது. 19-ந்தேதி காலை ஆச்சார்ய ருத்விக் வாரணம், மாலை சேனாதிபதி உற்சவம், இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. 20-ந்தேதி காலை உற்சவர்களான வேதவல்லி சமேத வேதநாராயணசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், பவித்ர மாலைகள் சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது. அதன் பிறகு இரவு பூர்ணாஹுதி நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    ேமற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு பவித்ர பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை கல்யாண மண்டபத்துக்குக் கொண்டு வந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6.30 வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது.
    • 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அனைத்துப் பூஜைகளும், திருவிழாக்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    அதையொட்டி பவித்ரோற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டி வெளியீட்டு விழா திருமலையில் உள்ள தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. அதில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டியை வெளியிட்டார்.

    20-ந்தேதி மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம். 21-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 22-ந்தேதி மூலவர், உற்சவர், விமான பிரகாரம், கொடிகம்பம், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. 23-ந்தேதி இரவு பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூலவருக்கு சுப்ர பாதம், தோமால சேவை, அர்ச்சனை நடந்தது.
    • பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவருக்கு சுப்ர பாதம், தோமால சேவை, அர்ச்சனை நடந்தது. அதைத்தொடர்ந்து யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள், பவித்ர பிரதிஷ்டை சாஸ்திர பூர்வமாக நடந்தது.

    பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், சிறப்புப்பூஜைகளும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன.

    நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார்.
    • நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடத்தப்படும்.. இந்த ஆண்டுக்கான பவித்ரஉற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக்கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ரஉற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 12-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்த பேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 10 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ரஉற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×