search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panthal vegetable"

    • தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் அனைத்து சீசனிலும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இதில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதியில் விளைநிலங்களில் பந்தல் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்து காய்கறி சாகுபடி செய்யத்துவங்கினர். பந்தல் காய்கறி சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு தற்போது பரவலாக பந்தலில், பீர்க்கன், புடலை, பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பின்னர் சொட்டு நீர் பாசனம் அமைத்து மேட்டுப்பாத்தியில் விதைகளை நடவு செய்கிறோம்.சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒட்டுப்பொறி மற்றும் விளக்குப்பொறி அமைத்து பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கும் முறையை பின்பற்றத்துவங்கியுள்ளோம்.கடந்த சீசனில் தொடர் மழையால் பந்தலில் காய்களை பறிக்க முடியாமல், அழுகி நஷ்டம் ஏற்பட்டது.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது, புடலங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆவணி மாத முகூர்த்த சீசன் துவங்குவதால் பந்தல் காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.நிலையான விலை கிடைக்க பந்தல் காய்கறி விவசாயிகளை ஒருங்கிணைத்து விலை நிர்ணயம் செய்ய, தோட்டக்கலைத்துறையினர் உதவ வேண்டும் என்றனர். 

    ×