search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMGSY scheme"

    • ராகுல் காந்தி தனது மூன்று நாள் கேரள பயணத்தின் கடைசி நாளான இன்று இரவு டெல்லி திரும்புகிறார்.
    • மலப்புரம் வண்டூர் பகுதியில் இருந்து பல அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் தொடக்க விழா நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்றார். மலப்புரம் வண்டூர் பகுதியில் இருந்து பல அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (பிஎம்ஜிஎஸ்ஒய்) திட்டத்தின் கீழ் ஒவ்வொறு மாநிலத்தின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என்றும் அதை மறுபரிசீலனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் அதை சாதகமாக பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், கிளமோரா மாநாட்டு மையத்தில் சம்ஸ்காரிகா சாஹிதியால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, உதவியைப் பெறத் தகுதியுள்ள ஒரு பெண் அவளுடைய மாறுபட்ட சித்தாந்தத்தின் காரணமாக அசாங்கம் வீடு வழங்கவில்லை. அந்த பெண் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதுதான் அதற்கு காரணம். அதனால் நாங்கள் அவருக்கு உதவி செய்தோம் என்றார்.

    ராகுல் காந்தி தனது மூன்று நாள் கேரள பயணத்தின் கடைசி நாளான இன்று இரவு டெல்லி திரும்புவதற்கு முன் மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    ×