search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PBKSvDC"

    • முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சண்டிகர் முல்லான்புரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுடன் 25 வயதான அவர் பஞ்சாப் அணிக்காக 59 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முகமது ஷமியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முகமது ஷமியின் சிறந்த பந்து வீச்சு 15/3 ஆகும். அர்ஷ்தீப் சிங்கின் சிறந்த பந்து வீசு்சு 32/5 ஆகும்.

    பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சந்தீப் ஷர்மா 61 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அக்சார் பட்டேல் 73 போட்டிகளில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • சாம் கர்ரன் 47 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லிவிங்ஸ்டன் 21 பந்தில் 38 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசன் 2-வது போட்டியில் (இன்றைய முதல் போட்டி) பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த பிராப்சிம்ரான் சிங் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 11.3 ஓவரில் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான விளையாடியது. குறிப்பாக சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் 3-வது பந்தில் சாம் கர்ரன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் ஷஷாங்க் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹர்ப்ரீத் பார் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். இதனால் அந்த பந்தில் பஞ்சாப் அணிக்கு இரண்டு ரன் கிடைத்தது.

    இந்த ஓவரில் கலீல் அகமது 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சுமித் குமார் கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். 2-வது பந்தை லிவிங்ஸ்டன் சிக்கசருக்கு தூக்க பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார்.
    • அபிஷேக் பொரேல் 10 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.

    அதன்படி டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றபோதிலும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. டேவிட் வார்னர் 21 பந்தில் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 12 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த ஷாய் ஹோப் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    ரிஷப் பண்ட் அவுட்டாகும்போது டெல்லி அணி 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் டெல்லி அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தடை ஏற்பட்டது.

    அக்சார் பட்டேல் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாட டெல்லி அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.

    அபிஷேக் பொரேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பொரேல் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ரிஷப் பண்ட்

    ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதல் 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.

    பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-

    1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.

    • பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ரிஷப் பண்ட் வழி நடத்துகிறார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்துள்ளார். டெல்லி அணியில் ரிஷப் பண்ட் களம் இறங்கியுள்ளார். 14 மாதங்களுக்குப் பிறகு அவர் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கர்ரன், ரபடா ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப் ஸ்டப்ஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.

    பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-

    1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.

    ×