search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening ceremony"

    • காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    திண்டுக்கலில் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது.

    பாபா ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
    • இதில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக ஆர்சிபி அணியினர் இன்று சென்னை வந்தடைந்தனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகள் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னையில் இதுவரை இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளனர். இதில் ஒரு முறை ஆர்சிபியும் 7 முறை சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளது.

    • 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
    • பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.

    சென்னை:

    சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.

    இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
    • பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

    மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் 4-ந்தேதி நடக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வருகிற 4.11.2023 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடை பெற உள்ள, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாலிபன்பொத்தை, டி.என்.எச்.பி காலனி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு, களக்கோடித் தெரு, பாறையடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    கலெக்டர் திறந்து வைத்தார்

    இதில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, உதவி செயற் பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்ரியா, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரன், கார்த்திகா, நாகூர் மீரான், ரெஜினா, சீதாலெட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்கலநாயகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்து.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா சிவ கங்கையில் கொண்டாடப் பட்டது. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், பழனிச்சாமி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வ மணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்தி ணரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் சிவதேவ்குமார், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் தேவ ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாணவ ரணி அன்பு, சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உடுமலை:

    .தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வாலாஜாவில் உள்ள அரசினர் ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விமல்குமார், அமுதாமணி, பெல் பொது மேலாளர் சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் சீனிவாசன்.

    விடுதி காப்பாளர் மாலதி உள்பட கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.
    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.

    விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ்,வார்டு உறுப்பினர்கள் யுவராஜ்,முருகேஷ், குமார், ராசப்பன் மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் குறிச்சி முக்கு அருகே நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த முன்னோடி குமார சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலுவல கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்றார்.

    இதில் மேயர் சரவணன், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், அருள்மணி, போர்வெல் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் அவைத்தலைவர் சுப சீதாராமன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அறங்கா வலர் குழு உறுப்பினர் வெயிலப்பன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், மாநரக பொருளாளர் பூக்கடை அண்ணா துரை, கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், நித்திய பாலையா, மாவட்ட பிரதி நிதி இசக்கி பாண்டி யன், இளைஞரணி ஆறுமுக ராஜா மற்றும் நிர்வாகிகள் வீரபாண்டியன், அலிப் மீரான், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் ஆகியோர் மைதீன்கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது.
    • இந்த வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட உள்ளனர்.

    நெல்லை:

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள மகளிர் பல்வேறு விதமான உற்பத்தி சார்ந்த பொரு ளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் மகளிரின் வாழ்வாதா ரத்தினை முன்னேற்றம் அடைய செய்திடும் விதமா கவும், மாவட்ட அளவில் பூமாலை வணிக வளா கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்காக மாவட்ட ங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்தது. தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அமையப் பெற்றுள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மேம்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    இந்த வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி மற்றும் சந்தைப்படுத்திட உள்ளனர்.

    12 கடைகள்

    புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பனை ஓலை பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், பனங்கருப்பட்டி, கருவாடு வகைகள், பாக்கு மட்டைகள், ஆயத்த ஆடைகள், பத்தமடை பாய் பொருள்கள் மற்றும் பேன்சி பொருட்கள் என மொத்தம் 12 கடைகள் அமைக்கப்பட்டு விற்ப னைக்காக பொரு ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×