search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offer"

    • ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் சிற்றுண்டி.
    • சலுகையின் மூலம் லட்சத்தீவின் சுற்றுலா பயணத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்ததையடுத்து அந்த அமைச்சர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    மத்திய அமைச்சரகள் தொடங்கி அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் மாலத்தீவை கண்டித்ததோடு லட்சத்தீவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

    இந்நிலையில் டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள பாதுரா என்ற உணவகம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு லட்சத்தீவு முன்பதிவு அல்லது ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் எனப்படும் ஒரு வகையான காலை சிற்றுண்டி தருவதாக தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், "இந்த சலுகையின் மூலம் லட்சத்தீவின் சுற்றுலா பயணத்தை மேம்படுத்த விரும்புகிறோம். இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்த சலுகையை நீடிக்க விரும்புகிறோம்" என்றார்.

    • பஸ் நிலைய வணிகவளாகம் கடைகள்-குத்தகைதாரர் நலச்சங்கம் கோரிக்கை
    • கோவை மேயர் கல்பனாவுடன் சந்திப்பு

    கோவை,

    கோவை மாநகராட்சி பஸ் நிலைய வணிகவளாக கடைகள், குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர் ராகவலிங்கம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானபால் செல்வராஜ் ஆகியோர் மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்த மான வணிகவளாக கடை களின் வாடகை நிலு வைத்தொகையை அபராத வட்டியுடன் செலுத்தி மாநகராட்சி நிபந்தனைகளை ஏற்று அனைத்து வாடகைக்கடைகளையும் பல கஷ்டங்களுக்கு இடையே நிலுவையின்றி செலுத்தி உள்ளோம்.

    கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முதலாம் அலையின்போ தும், 2-வது அலையின்போ தும் கடைகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த காலத்தில் கடை வாடகை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

    ஆனால் 2 மாதம் மட்டுமே கடை வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 3 மாத கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வி நிறுவனம் தொடர்ச்சியாக தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
    • வி நிறுவனத்தின் 5ஜி சேவை வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

    இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி நிறுவனத்தின் 5ஜி வெளியீடு தாமதமாகி வருகிறது.

    எனினும், வி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய சலுகைகளை அறிவித்தும், அவ்வப்போது சிறப்பான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளை பயனர்கள் வி செயலி மூலம் ரிசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக இதே போன்ற சலுகையை வி நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கி வந்தது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும். 

    • மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • மஹிந்திரா தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் நான்கு மாதங்களாக உள்ளது.

    மஹிந்திரா தார் ஆஃப் ரோடர் மாடலின் ரியர் வீல் டிரைவ் (RWD) வெர்ஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தார் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் RWD வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார் 4WD வேரியண்ட்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. இவற்றில் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 60 ஆயிரம் வரையிலான அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் போனஸ், ரூ. 15 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் இன்சூரன்ஸ் பலன்கள், மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும், இந்த பலன்கள் MY2022 LX பெட்ரோல் AT 4WD வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா தார் 4WD MY2022 LX பெட்ரோல் AT வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இதுதவிர மஹிந்திரா தார் RWD மற்றும் 4WD வெர்ஷன்களின் காத்திருப்பு காலம் முறையே 18 மாதங்கள் மற்றும் நான்கு மாதங்களாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஒவ்வொரு பகுதி, மாடல், விற்பனை மையம் என பல்வேறு விஷயங்களை பொருத்து வேறுப்படும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.

    காதலர் தின ஆஃபர் விவரங்கள்:

    ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.

    இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஆக்டிவா இருக்கிறது.
    • ஆக்டிவா மாடலை வாங்குவோருக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோருக்கு குறுகிய கால சலுகை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா உள்ளது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீதம் கேஷ்பேக் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

    எனினும், இந்த கேஷ்பேக் சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்போர் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் குறைந்த பட்ச பரிவர்த்தனை தொகை ரூ. 40 ஆயிரம் ஆக இருக்க வேண்டும். மற்ற பலன்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு குறைந்த முன்பணம் ரூ. 3 ஆயிரம், 7.99 சதவீதம் வட்டியில் கிடைக்கிறது.

    இந்த சலுகை மார்ச் 31, 2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இரண்டு சலுகைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சலுகை தவிர ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இது பற்றி ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M1 மாடல் எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 30 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
    • 2020 மேக்புக் ஏர் மாடலுக்கு க்ரோமா வலைதளத்தில் சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடல் க்ரோமா வலைதளத்தில் ரூ. 73 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் மேக்புக் ஏர் விலை தொடர்ந்து ரூ. 99 ஆயிரத்து 900 என்றே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. சக்திவாய்ந்த லேப்டாப் வாங்க நினைப்போரின் தேர்வாக ஆப்பிள் மேக்புக் மாடல்கள் விளங்குகின்றன.

    க்ரோமா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 900 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் மேக்புக் ஏர் M1 2020 மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 900 என குறைந்து விடும்.

    தற்போது க்ரோமா தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் விலை ஆப்பிள் தளத்தில் இருப்பதை விட ரூ. 16 ஆயிரம் குறைவு ஆகும். அந்த வகையில், கூடுதலாக ரூ. 10 ஆயிரம் சேர்க்கும் பட்சத்தில் மேக்புக் ஏர் 2020 மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அம்சங்கள்:

    ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், மேக் ஒஎஸ் வெண்டுரா, 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா, டச் ஐடி சென்சார், 49.9 வாட் ஹவர் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் வைபை, ப்ளூடூத் 5.0, 2x யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், பிளேபேக், 3-மைக் அரே, வைடு ஸ்டீரியோ சவுண்ட் கொண்டுள்ளது.

    • அமேசான் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கும் Great Republic Day சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • அடுத்த வாரம் துவங்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அமேசான் வலைதளத்தில் Great Republic Day Sale நடைபெற இருக்கிறது. அடுத்த வாரம் அதாவது ஜனவரி 17 ஆம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கத்தை போன்றே சிறப்பு விற்பனை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு ஒரு நாள் முன்பே துவங்கி விடும்.

    புதிய சிறப்பு சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், அக்சஸரீக்கள், ஸ்மார்ட்வாட்ச், வீட்டு உபயோக மின்சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் அமேசான் சாதனங்களான கிண்டில், அலெக்சா, ஃபயர் டிவி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுவதாக அமேசான் அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி, லேப்டாப்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம், ஹெட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு முறையே 75 சதவீதம் மற்றும் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    டிவி மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 65 சதவீத தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. டிவி-க்களுக்கு மாதம் ரூ. 900-இல் இருந்து துவங்கும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வீடு மற்றும் அடுப்பறை பொருட்களுக்கு முறையே 70 சதவீதம் மற்றும் 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று ஆடைகள், அமேசான் அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் கிண்டில் உள்ளிட்டவைகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    தள்ளுபடி, சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அமேசான் நிறுவனம் எஸ்பிஐ கார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இதே போன்று பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. 

    • சாம்சங் நிறுவன ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
    • சிறப்பு விற்பனையில் சாம்சங் டாப் எண்ட் டிவி வாங்குவோருக்கு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய பயனர்களுக்கு "Big TV Days" பெயரில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கேஷ்பேக் சலுகை, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நிச்சயிக்கப்பட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்குவோருக்கு சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி A23 போன்ற ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    டிசம்பர் 24 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை ஜனவரி 31, 2023 வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நாடு முழுக்க செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட ரிடெயில் ஸ்டோர் மற்றும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் சாதனங்களை வாங்குவோருக்கு பொருந்தும்.

    சிறப்பு சலுகை விவரங்கள்:

    சாம்சங் நிறுவனத்தின் உயர் ரக மற்றும் பிரீமியம் டிவி மாடல்களை வாங்குவோருக்கு கேலக்ஸி Z ஃபோல்டு 4 (12 ஜிபி, 256 ஜிபி) மாடல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 98 இன்ச் நியோ QLED 4K டிவி அல்லது 85 இன்ச், 75 இன்ச் நியோ QLED 8K டிவி வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

    இத்துடன் டிவி-க்களுக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. வழக்கமாக ஸ்மார்ட் டிவிக்களுக்கு ஒரு வருட வாரண்டியே வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட நியோ QLED 8K டிவி மாடல்களுக்கு அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், எந்தெந்த மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என சாம்சங் அறிவிக்கவில்லை.

    ஸ்மார்ட்போன் வரிசையில், 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ QLED டிவி, 75 இன்ச் தி ஃபிரேம் டிவி, 85 இன்ச் மற்றும் 75 இன்ச் அல்ட்ரா HD 4K QLED டிவி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 40 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் HW S801B சவுண்ட்பார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 65 இன்ச் நியோ QLED 8K டிவி, 65 இன்ச் மற்றும் 55 இன்ச் நியோ QLED டிவி, 65 இன்ச் UHD 4K QLED டிவி, 85 இன்ச் மற்றும் 75 இன்ச் க்ரிஸ்டல் 4K UHD டிவி வாங்குவோருக்கு ரூ. 18 ஆயிரத்து 499 மதிப்புள்ள கேலக்ஸி A23 (6 ஜிபி, 128 ஜிபி) மாடல் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவை தவிர எந்த வித டிவி-க்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 630 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    2023 புத்தாண்டை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2023 விலையில் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. புத்தாண்டை குறிக்கும் ரூ. 2023 விலையில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரூ. 2023 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.

    பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 2023 விலை சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா (மொத்தத்தில் 630 ஜிபி), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு சலுகையாக ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை 23 நாட்கள் நீட்டித்து இருக்கிறது. அதன்படி ரூ. 2999 விலையில் கிடைக்கும் ஜியோ சலுகையில் தற்போது 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 912.5 ஜிபி டேட்டா (தினமும் 2.5 ஜிபி), 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதற்கு பயனர்கள் குறைந்த பட்சம் ரூ. 239 விலை சலுகை அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின்தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது.

    இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவ ண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் இறக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா குத்துவி ளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியும், சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி. வாடிக்கை யாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

    தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் விற்பனை நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.

    விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் குமார் செய்திருந்தார்.

    ×