search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitishkumar"

    • பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பாட்னா:

    மாநிலங்களவை தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் பா.ஜ.க. சார்பில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகாரில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் சஞ்சய் குமார் ஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைவர் நிதிஷ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

    • தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
    • 18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு பிரச்சனையால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரும் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இதனால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பாக்டோக்ராவில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.


    18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார். 2-வது கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி மும்பையிலும் நடந்தது.

    இந்த 3 கூட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததால் பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை எதிர்த்து போராட நிதிஷ்குமாரை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் உள்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 16 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்தி உள்ளன. மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    என்றாலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களை நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் வருகிற 12-ந்தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 12-ந்தேதி வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதால் பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கார்கேவும் ராகுலும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் இருவரையும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு நிதிஷ்குமார் பல தடவை தொடர்ந்து வலியுறுத்தி அழைத்து விட்டார். என்றாலும் கார்கே, ராகுல் இருவரும் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.

    கார்கே, ராகுல் இருவரும் 12-ந்தேதி கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜூன் 23-ந்தேதி நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    ஆனால் அதை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கவில்லை. ஜூன் 12-ந்தேதி கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதால் கூட்டத்தை ஒத்தி வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் முதல் ஆலோசனை கூட்டம் இது தான். முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் பங்கேற்காதது நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

    கார்கே, ராகுலுக்கு பதில் காங்கிரசில் உள்ள மிக முக்கிய மூத்த தலைவரை 12-ந்தேதி கூட்டத்துக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முதல்-மந்திரிகளில் ஒருவரை ஆலோசனை கூட்டத்துக்கு அனுப்புமாறு சரத்பவார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    எனவே காங்கிரஸ் சார்பில் ராகுலுக்கு பதில் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமே ராகுலால் முழுமை பெறாமல் போய்விடுமோ என்று பேசப்படுகிறது.

    குறிப்பாக மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லல்லு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி ஜூன் 12-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்வார்கள்.

    என்றாலும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களையும் நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.

    என்றாலும் ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 38 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.

    மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். குறிப்பாக மொத்தம் உள்ள 543 எம்.பி. தொகுதிகளில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளிலாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    450 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக பாரதிய ஜனதாவை தனி பெரும்பான்மை பெறவிடாமல் செய்ய முடியும் என்று நிதிஷ்குமார் மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் மாநில கட்சி தலைவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிராக இருப்பதால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? என்று சந்தேகம் நீடிக்கிறது.

    • முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.
    • பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

    பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

    மத்திய மந்திரிகளாக இருந்த நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் பீகாருக்கு செய்தது என்ன?

    காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த முதல் மந்திரி நிதிஷ்குமார், பிரதமர் பதவி மீது கொண்ட பேராசை காரணமாக சோனியாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, லாலுவின் ஜாதி வெறி மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக போராட வேண்டிய நிதிஷ்குமார் பிரதமர் பதவி மோகத்தில் லாலுவின் மடியில் அமர்ந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

    • நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    • தேஜஸ்வி யாதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது.

    பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்த புதிய மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    துணை முதல்வராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இருவருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் என்று பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமது டூவிட்டர் பதிவில், நிதிஷ்குமாருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் தம்மிடம் வலியுறுத்தி வந்தனர், அவர் குடியரசு துணைத் தலைவர் ஆனால், நீங்கள் பீகார் முதலமைச்சராகலாம் என பேரம் பேசினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் ஜக்தீப் தன்கரை இந்த தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்தது. அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். 

    தற்போதைய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளது. அதன் விளைவாக அவர் சிறைக்கு செல்லலாம் என்றும் சுசில்குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    நிதிஷ்குமார் எங்களுக்கு துரோகம் செய்தது போன்று ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும் துரோகம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் அல்லாத அரசியல் என்ற கூறி வந்த நிதிஷ்குமாரின் அரசியல் நிறைவு பெற்று விட்டதா என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி உள்ளார். 

    ×