search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naomi Osaka"

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.
    • நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    மெல்பர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.

    நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளது. நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் என்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக் குழு அறிவிப்புச் செய்துள்ளது.

    பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.

    இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா, சுலோவாக்கியா வீராங்கனை அன்ன கரோலினா சிமிட்லோவாவை எதிர்கொண்டார். 

    ஒசாகா 0-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் சிமிட்லோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 



    இதேபோல், ருமேனியா நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலியா நாட்டின் டோம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். ஹாலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டோம்ஜனோவிச்சை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-6, 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவில் போர்னா கோரிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரர் போட்டியில் இருந்து விலகினார். இது குறித்து 37 வயதான ரோஜர் பெடரர் கருத்து தெரிவிக்கையில், ‘காலிறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நான் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாததால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து விலகல் முடிவை மேற்கொண்டேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    இன்னொரு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 24-ம் நிலை வீரரான டிகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் (அர்ஜென்டினா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 4-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்திக்க இருந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிகி பெர்டென்ஸ் போட்டியின்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்ததுடன் 500-வது வெற்றியையும் ருசித்தார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸில் நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 12-ம் நிலை வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில் கிகி பெர்ட்டர்ன்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-0, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



    முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் சான்ஸ்னோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். #AusOpen2019 #NaomiOsaka
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது செட்டை கிவிடோவா 5-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஒசாகா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது. #AusOpen2019 #NaomiOsaka
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நவ்மி ஒசாகா, எலீனா சுவிட்டோலினா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #AustralianOpen2019 #NaomiOsaka #ElinaSvitolina
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நான்காம் நிலை வீராங்கனையான நவ்மி ஒசாகா (ஜப்பான்)- சுலெஸ்டானா (லாத்வியா) மோதினார்கள்.

    இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். கடந்த முறை 4-வது சுற்று வரை நுழைந்ததே இதற்கு முன்பு சிறந்ததாக இருந்தது.

    ஒசாகா கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும். எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்சை 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    சுவிட்டோலினா தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சுவிட்டோவா (செக்குடியரசு)- பேர்ட்டி (ஆஸ்திரேலியா), அனஸ்டசியா (ரஷியா)- கோலின்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    இன்னொரு கால்இறுதியில் மோதும் வீராங்கனை விவரம் இன்று பிற்பகல் தெரியும்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா)- மெட்வதேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.

    மற்ற ஆட்டங்களில் நிஷிகோரி (ஜப்பான்)- பஸ்டா (ஸ்பெயின்), கோரிக் (குரோஷியா)- லுகாஸ் பவுலி (பிரான்ஸ்) மோதுகிறார்கள். #AustralianOpen2019 #NaomiOsaka #ElinaSvitolina
    டோக்கியோல் நடைபெற்று வந்த பெண்களுக்கான பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். #NaomiOsaka
    ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4-ம் வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா - 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.



    செரீனாவை வீழ்த்தி அமெரிக்கா ஓபனை கைப்பற்றிய முதல் ஜப்பான் வீராங்கனை என்று பெயரெடுத்த  ஒசாகா சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் கரோலியான பிளிஸ்கோவா சிறப்பாக விளையாடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்றதன் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மூன்று இடத்திற்குள் முன்னேறியுள்ளார் ஜோகோவிச். #Djokovic #NaomiOsaka
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இது அவரின் 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த சாம்பியன் பட்டம் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும் உள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    நியூயார்க்:

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.

    இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.



    இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா. 

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கெய்ஸ் கர்லா சுவாரஸ் நவர்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #USOpen2018
    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் 14-ம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் - 30-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் கர்லா சுவாரஸ் நவர்ரோ பலப்பரீட்சை நடத்தினார்.

    சொந்த மண்ணில் விளையாடிய மேடிசன் கெய்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த ரசிகர்கள் முன்னிலையில் அசத்திய கெய்ஸ்க்கு முன் நவர்ரோவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதனால் கெய்ஸ் 6-4, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


    நவர்ரோ

    நவர்ரோ காலிறுக்கு முந்தைய சுற்றில் மரியா ஷரபோவாவையும், அதற்கு முன் 6-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×