என் மலர்

  நீங்கள் தேடியது "Nana Patole"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநிலத்தில் எரிபொருள் மீதான விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
  மும்பை :

  மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளையடிப்பதுடன், வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்த முயற்சி செய்வதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டியுள்ளார்.

  மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது:-

  ஜி.எஸ்.டி. தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்தி வைத்ததன் மூலம் மராட்டிய அரசுக்கு மத்திய அரசு முதல் அடி கொடுத்தது.

  இந்தநிலையில் மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்க, எரிபொருள் மீது மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் செஸ் வரி விதித்தது.

  இதன்மூலம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வரை மாநில அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் தட்டிபறிக்கப்பட்டுள்ளது.

  அதுமட்டுமின்றி மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்க பல்வேறு சட்ட வழிமுறைகள் மற்றும் நிர்வாக ரீதியான ஓட்டைகளை பயன்படுத்தி உள்ளது.

  இதுபோன்ற செஸ் வரி இல்லை என்றால் மராட்டிய அரசின் கருவூலத்தில் அந்த பணம் சேர்க்கப்பட்டு இருக்கும். இது பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும் பயன்படுத்தி இருக்கலாம்.

  சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

  மாநிலத்தில் எரிபொருள் மீதான விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

  காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு ஏற்கனவே மதிப்பு கூட்டு வரியை(வாட்) குறைத்துள்ளது. முதல்-மந்திரி அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வருவதால் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.

  விரைவில் அவரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை தெரிவிப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பாஜக முன்னாள் தலைவர்களில் ஒருவரான நானா படோலே அறிவிக்கப்பட்டு உள்ளார். இது நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. #NanaPatole #NitinGadkari
  பண்டாரா- கோண்டியா தொகுதி எம்.பி.யான நானா படோலே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

  இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் நானா படோலே நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது பாஜக மூத்த தலைவரான மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சொந்த தொகுதியாகும். நாக்பூர் மண்ணின் மைந்தரான நிதின் கட்காரி இந்த தடவையும் அந்த தொகுதியிலேயே போட்டியிட உள்ளார். இதனால் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்கு பலத்த போட்டியாக நானா படோலே விளங்குவார் என்று கருதப்படுகிறது.

  நானா படோலே நாக்பூரில் போட்டியிடுவது குறித்து நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது.  இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

  இது நல்லது தான். எந்த வேட்பாளரும் யாரையும் எதிர்த்து போட்டியிட உரிமை உள்ளது. எந்த ஒரு வேட்பாளரையும் பற்றி விமர்சிப்பதிலும், குறைகூறுவதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

  நான் மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை எடுத்துக்கூறி ஓட்டுகேட்பேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பா.ஜனதாவில் இருந்தபோது ஒருமுறை நானா படோலே, நிதின் கட்காரியிடம் ஆசி பெற்றார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்காரி, “ஒருவர் கட்சியில் இருந்து விலகியதால் நான் அவருக்கு வழங்கிய ஆசிர்வாதம் விலகி போய்விடாது.

  நான் அரசியலில் ஒருபோதும் பகைமை உணர்வை கடைப்பிடிப்பதில்லை. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். #NanaPatole #NitinGadkari 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நானா படோல், ராஜ் பாப்பர், பிரியா தத் உள்ளிட்ட 21 பேர் கொண்ட 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #ParliamentElection #Congress #SecondList #NanaPatole #RajBabbar #PriyaDutt
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா  மாநிலங்களில் போட்டியிடும் 21 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 16 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 பேரும் அடங்குவர்.

  இதில், மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் நானா படோலும், வடக்கு மத்தியில் பிரியா தத்தும், உ.பி.யின் மொராதாபாத் தொகுதியில் ராஜ் பாப்பரும், பஹ்ரெய்ச் தொகுதியில் சாவித்ரி புலேவும் போட்டியிடுகின்றனர என தெரிவித்துள்ளது. #ParliamentElection #Congress #SecondList #NanaPatole #RajBabbar #PriyaDutt
  ×