search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushroom"

    • போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.
    • காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதைக் காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் விளைகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதைக்காளானும் ஒரு வகையாகும். இவை மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும் இங்கு இயற்கையாகவே கிடைக்கிறது.

    போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக உள்ளது.

    இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறையால் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் போதைக்காளான் குறித்த தகவல் வந்தால் அவர்களும் இதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே போதைக் காளான் கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    • அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.
    • இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.

    ஈரோடு:

    பவானிசாகர் வட்டார த்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தொப்ப ம்பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறி யாளர் சண்முக சுந்தரம் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றியும் எடுத்து கூறினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குநர் பிருந்தா காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சத்துகள் பற்றி எடுத்துறைத்தார். இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.

    கால்நடை மருத்துவர் முருகானந்தம் கால்நடை பராமரிப்பு பற்றி எடுத்து க்கூறினார். வீர லட்சுமிகாந்த் மற்றும் தமிழ்செல்வன், வேளாண் வணிகத்துறை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீப்குமார், மற்றும் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அன்ப ரசன் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி பேசினர்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்புராஜ் நன்றி கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் வள்ளி பயிற்சி க்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்பயிற்சி யில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் முடிவில் காளான் வளர்ப்பிற்கான வழிமுறைகள் நேரடி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.

    விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×