search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moto"

    • மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்‌ஷிப்போனின் பெயர் மோட்டோ X30 ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    மோட்டோ நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஃபிளாக்‌ஷிப்போனின் பெயர் மோட்டோ X30 ப்ரோ என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் கேமரா தான் என கூறப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 200 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை இந்த மோட்டோ X30 ப்ரோ பெற உள்ளது.


    இந்த ஸ்மார்ட்போன் 6.73 இன்ச் pOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியும், 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    ×