என் மலர்

  நீங்கள் தேடியது "Moti Bali"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமகிரிபேட்டைக்குச் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
  • மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சடையன் என்கிற சரவணன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). தச்சுத் தொழிலாளி.

  இவர் நேற்று இரவு நாமகிரிபேட்டைக்குச் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அவர் நாமகிரிப்பேட்டை-ராசிபுரம் சாலையில் உள்ள நாமகிரிபேட்டை அரசு பள்ளி, மெக்கானிக் பட்டறை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது.

  இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி–ரியில் வைக்கப்பட்டுள்ளது.

  ×