search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Micromax"

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிதாக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமேக்ஸ் ஐஒன் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் ஐஒன் மாடலில் 5.45 இன்ச் 540x1132 பிக்சல் நாட்ச் டிஸ்ப்ளே, UNISOC SC9863 ஆக்டா-கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.



    மைக்ரோமேக்ஸ் ஐஒன் சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் 540x1132 பிக்சல் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் Unisoc SC9863 பிராசஸர்
    - IMG8322 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, சாம்சங் 5E8 சென்சார்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, சாம்சங் 5E8 சென்சார்
    - 4ஜி, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் ஐஒன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Micromax #smartphone



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டிஸ்ப்ளே நாட்ச் கொண்ட புது ஸ்மார்ட்போனினை டிசம்பர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை மைக்ரோமேக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருந்த நிலையில், இடையே ஸ்மார்ட்போன் சந்தையில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு பின் தீபாவளி சமயத்தில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அக்டோபர் மாதத்தில் அந்நிறுவனம் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன், பாரத் 4 தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.



    புது ஸ்மார்ட்போனின் டீசரை பொருத்தவரை மைக்ரோமேக்ஸ் மாடலில் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே நாட்ச் வடிவமைப்பு முதன்முறையாக ஐபோன் X மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய ஒப்போ ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே நாட்ச் வழங்கப்படுகிறது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக இது அமைகிறது. புது ஸ்மார்ட்போனின் டீசருடன் "Does the powerful excite you?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாயந்த பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், மைக்ரோமேக்ஸ் புதுவித விளம்பர யுக்திகளை பார்க்கும் போது, அந்நிறுவனம் மெல்ல சந்தையில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. #AboveTheRest
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. #androidtv



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடலை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்திருக்கிறது. பெயரிடப்படாத இரண்டு டி.வி. மாடல்கள் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

    கூகுள் சான்று பெற்றிருப்பதோடு, புதிய டி.வி.யில் ஹை-டைனமிக் ரேன்ஜ் (ஹெச்.டி.ஆர்.) இருப்பதால் காட்சி தரம் தெளிவாக இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தொலைகாட்சிகளில் அதிகாரப்பூர்வ கூகுள் பிளே வசதி கொண்டிருப்பதால், செயலிகள், கேம்கள், திரைப்படம் மற்றும் இசை உள்ளிட்டவற்றுக்கான வசதிகள் கொண்டிருக்கின்றன.

    புதிய டி.வி. மாடல்கள் ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி, டி.டி.எஸ். சவுன்ட் சான்று, குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. EMMC ஸ்டோரேஜ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், MHL கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.



    மேலும் கூகுள் அசிஸ்டன்ட் இருப்பதால் குரல் மூலம் தேடலாம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் புதிய டி.வி.யில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சொந்த பியூர் சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டால்பி மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி. ஆடியோ சான்று பெற்றிருக்கிறது. 

    இந்த டி.வி. மாடல்களில் 2x12 வாட் ஸ்பீக்கர்களும், மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும் இகோ எனர்ஜி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்களின் விற்பனை இம்மாதம் துவங்கும் என்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த டி.வி. கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.

    மைக்ரோமேக்ஸ் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K UHD HDR10 டி.வி. மாடல்களின் விலை முறையே ரூ.51,990 மற்றும் ரூ.61,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Micromax #smartphone



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்கள் - பாரத் 4 தீபாவளி எடிஷன் மற்றும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களில் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷனில் 18:9 ரக டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இதை கொண்டு மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் சிப்செட் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படவில்லை.



    மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1 ஜி.பி. ரேம் 
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    மைக்ரோமேக்ஸ் பாரத் 4 தீபாவளி எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1 ஜி.பி. ரேம் 
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விலை ரூ.5,899 என்றும், பாரத் 4 தீபாவளி எடிஷன் விலை ரூ.4,249 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், பாரத் 4 தீபாவளி எடிஷன் விற்Hனை நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது.

    புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையனஅஸ் ஜியோ பயனர்களுக்கு 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ்களை செய்யும் போது 5 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Micromax #smartphone



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஸ்பார்க் கோ என்ற பெயரில் புதிய லஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, குவாட்கோர் SC9832E பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 5 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ சிறப்பம்சங்கள்

    - 5.0 இன்ச் 854x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் SC9832E பராசஸர்
    - மாலி-T720 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன்
    - டூயல் சிம்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 25 ஜி.பி. டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
    யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SMARTTV



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மாட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த முதல் டி.வி. மாடலாக அமைந்திருக்கிறது.

    யு யுஃபோரியா டி.வி.யில் 40-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் தரவுகளை டி.வி. திரையில் பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் யு யுஃபோரியா ஸ்மார்ட் டி.வி.யில் ஆப்டாய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிளே ஸ்டோரில் இருந்து பயனர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான செயலிகளை பயன்படுத்த முடியும். இதில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனினை டி.வி.யுடன் இணைத்து கேமிங் அனுபவிக்க முடியும்.



    மேலும் ஸ்மார்ட்போன்களில் சில பட்டன்களை கிளிக் செய்து முழு டி.வி.யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் சாதனங்களில் இருந்து தகவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு யுஃபோரியா டி.வி.யில் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் 1 வி.ஜி.ஏ. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 வாட் சவுன்ட் அவுட்புட் கொண்டுள்ளது.

    இந்தியாவில் யு யுஃபோரியா ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. விலை ரூ.18,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் ஹெச்.டி., 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 50 இன்ச் ஃபுல் ஹெச்.டி. வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஆப்டொய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் வயர்லெஸ் கன்ட்ரோல் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை டி.வி.யுடன் எளிமையாக இணைத்து, முழு டி.வி. மற்றும் கேம்களை விளையாட முடியும்.



    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் (1366x768 பிக்சல்) ஹெச்.டி. ரெடி 
    - 40 இன்ச் / 50 இன்ச் (1920x1080) ஃபுல் ஹெச்.டி. டைரக் எல்.இ.டி. பேனல்
    - குவாட்-கோர் பிராசஸர் டூயல் கோர் GPU
    - 1 ஜிபி ரேம்
    - 5.5 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டி.வி. சார்ந்த ஆன்ட்ராய்டு 7.0
    - வைபை 802.11b/g/n, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட் போர்ட்
    - 24W இன்பில்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் வேரியன்ட் விலை ரூ.13,999 என்றும், 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 50 இன்ச் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 
    மைக்ரோமேக்ஸ் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #YuACE



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. யு ஏஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    யு ஏஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் விஆர் ரோக் GE8100 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    யு ஏஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே, எலெக்ட்ரிக் புளு மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 2 ஜிபி ரேம் கொண்ட யு ஏஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜிபி ரேம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் யு ஏஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்ட் ஆன யு டெலிவென்ச்சர்ஸ் நீண்ட இடைவெளிக்கு பின் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. #smartphone


    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு டெலிவென்ச்சர்ஸ் இந்திய சந்தையில் மிகவேகமாக பிரபலமானது. தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்கு பின் யு பிரான்டு ட்விட்டரில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    யு பிரான்டு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் போடப்பட்டிருக்கும் பதிவில் புதிய யு பிரான்டு ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. ஆன்லைன் பிரான்டான யு முன்னதாக யு யுரேகா 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    அதிரடி டீசர்களை வெளியிடுவதில் பெயர்போன யு பிரான்டு இடைவெளிக்குப் பின் களமிறங்கி இருப்பது புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் யு ஏஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    எனினும் புதிய யு ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதால், வரும் நாட்களில் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் ட்விட் மூலம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டு யு 2014-ம் ஆண்டு துவங்கப்பட்டது. யு பிரான்டின் முதல் ஸ்மார்ட்போனாக யு யுரேகா அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யு யுரேகா 2 ஸ்மார்ட்போனில் மெட்டல் பாடி கொண்ட 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 2.5D கிளாஸ் கொண்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், 3930 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவில் யுரேகா ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ், 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.12um பிக்சல்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் மேட் பிளாக் மற்றும் ஜெட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. 

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 (2018) ஸ்மார்ட்போனும் அந்நிறுவன வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கேன்வாஸ் 2 பிளஸ் போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் கேன்வாஸ் 2 (2018) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏர்டெல் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் வெளியாகும் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் ஆகும். 

    சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த பாரத் 3 ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் புதிய பாரத் கோ ஸ்மாப்ட்போனில் 5 எம்பி பிரைமரி மற்றும் முன்பக்க கேமரா மற்றும் இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.



    மைக்ரோமேக்ஸ் பாரத் கோ சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 854x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737M பிராசஸர்
    - மாலி-T720 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா எல்இடி ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் விலை ரூ.4399 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ரூ.2399 விலையில் வாங்கிட முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏர்டெல் சார்பில் ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ×