என் மலர்
நீங்கள் தேடியது "men Health"
- ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது.
- கடுமையான உடற்பயிற்சிகளால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்துவதற்கு முயற்சி செய்தாலே போதும். உடல் எடையை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது. அதிலும் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையில் இயந்திர கதியில் சுழன்று கொண்டிருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அது இயல்பாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.
1. உணவுத்திட்டம்: உடல் எடையை குறைப்பதற்கு பல உணவு முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவை உடல் எடையை குறைப்பதற்கு வழிவகுத்தாலும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் பெறுவதற்கு வழிவகை செய்யாது. மேலும் குறுகிய காலத்திற்குள் உடல் எடையை குறைய வைத்து விடும். ஆனால் அது தற்காலிகமானதுதான். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான, நிலையான எடை இழப்புக்கு வழி வகுக்காது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடும் உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்ற உணவு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. பசியை கட்டுப்படுத்துங்கள் : நீண்ட நேரம் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் பசி அதிகம் எடுக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட தோன்றும். அந்த சமயத்தில் குறைவாக சாப்பிடுவதும் முடியாது. அதற்கு இடம் கொடுக்காமல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். ஒரு வேளை உணவு உட்கொண்டால், மறு வேளை ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வகைகளை உட்கொள்ளலாம். இது பசியை கட்டுப்படுத்த உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும் சாப்பிடலாம். மாலை 3 மணிக்கு சிற்றுண்டியும், இரவு 7 மணிக்குள் இரவு உணவையும் உட்கொள்ளலாம்.
3. சரிவிகித உணவை உண்ணுங்கள் : உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொண்டாலும் அதில் 40 சதவீதம் புரதம், 35 சதவீதம் கார்போஹைட்ரேட், 25 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இது உடல் எடை குறைப்புக்கு உதவும். பசியை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.
4. தண்ணீர் அதிகம் பருகுங்கள் : எல்லா உயிர்களுக்கும் நீர் தான் உயிர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான நன்மைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பருகும் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்பாடுகளின் வேகத்தையும் அதிகப்படுத்த முடியும். மந்த உணர்வை போக்கவும் முடியும். சீரான இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் பருகி வந்தால் நீரிழப்பு ஏற்படாது. உடலில் நீரின் அளவு குறைந்தால் தலைவலி, சோர்வு, சோம்பல், குழப்பம் மற்றும் மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனை தடுக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
5. உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள் : உட்கொள்ளும் உணவின் மூலம் பெறப்படும் அதிக கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து. உண்மை என்னவென்றால், தினசரி 30 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையோ மேற்கொள்வது கூட எடை இழப்பு பயணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. தோட்டக்கலை மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, நாயுடன் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நண்பர்களுடன் நடைப்பயிற்சி, ஜாக்கிங் செய்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவையும் கூட உடல் எடை குறைப்பு செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
- ஆண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை.
- வயதாகும் போது மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
40 வயதை கடந்த ஆண்களில் பெரும்பாலானோர் இளமையை தக்க வைப்பதற்காக அதிக முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியம் இல்லாமல் இருந்தால் சரும அழகையும் இழக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். சரும அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம். அதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தேர்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம்.
* 40 வயதை கடந்தவர்கள் உடல் நலத்தை சீராக பேணுவதற்கு போதுமான அளவு நார்ச்சத்து அவசியமானது. அது குடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. செரிமான சக்தியை அதிகரிக்க செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. முழு தானிய வகைகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அவைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் நல்லது. ஆரோக்கியத்தை பேணுவதற்கு நட்ஸ் வகைகள் அவசியம். அதில் நார்ச்சத்து, புரதம், செரியூட்டப்படாத கொழுப்பு, ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. நட்ஸ் வகைகளை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.
* எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமானது. பாலில் கால்சியம் நிறைந்திருக்கிறது. இதயத்தின் நலனையும் காக்கும். தினமும் ஒரு கப் பால் பருகலாம். அது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நலனை மேம்படுத்தும்.
* `கிரீன் டீ'யும் 40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்ற பானம்தான். அதில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள் உள்ளடங்கி இருக்கிறது. நல்ல கொழுப்பின் அளவை சீராக பராமரிக்க உதவும். ரத்தத்தை சுத்தப்படுத்தி நச்சுகளை வெளியேற்றும். தொடர்ந்து கிரீன் டீ பருகிவருவதன் மூலம் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.
* வயதாகும் போது மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சின்ன சின்ன வியாதிகளுக்கெல்லாம் மாத்திரைகளை நாடுவது நல்லதல்ல. மூலிகை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆண்களுக்கு வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.
இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.
பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சனைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது.
ஆண்களின் 60, 70 வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
பொதுவாக ஆண்கள் கட்டுகோப்பான உடலையே மிகவும் ஆசைப்படுவர். சிக்ஸ் பேக் வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதனை வைத்த பின், மெயின்டெயின் செய்வது அதை விட கடினம்.
சிக்ஸ் பேக்கின் மோகம் குறையாமல் ஆண்களிடம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை பலர் அறியவில்லை.
சிக்ஸ் பேக் மெயின்டெயின் செய்வதற்கு உடற்பயிற்சி மட்டுமல்லாமல் ஸ்டிராய்டு உட்கொள்கின்றனர். ஸ்டிராய்டு எடுத்து கொள்வதால் ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு போன்றவற்றை ஏற்படும்.
உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலின் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து புரதசத்தை அதிகரிக்க வைக்கின்றனர். இப்படி புரதசத்தை அதிகரித்தால் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பம் அதிகமாகும். வலிமையான தசைநார்கள் தான் அவசியம். அது இருந்தால் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.
சிக்ஸ் பேக் வைப்பதற்கு மேற்கொள்ளும் உடற்பயிற்சி கடுமையான உடல் வலி, பிரச்சனைகளைதான் கொடுக்கும். அழகுக்கு ஆசைப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள்!
சிக்ஸ் பேக் என்றால் என்ன? பொதுவாக உடலில் சேரும் கொழுப்புக்கள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால் சில கொழுப்புக்கள் கரையாமல் ஆங்காங்கு தங்கிவிடும். அப்படி தங்கும் கொழுப்புக்களைக் கரைத்து வயிற்றுப் பகுதியில் தசைகளாக உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, சிலர் ஸ்டீராய்டு மருந்தை எடுத்து கொள்கிறார்கள்.
ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால், உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்.

சிக்ஸ் பேக் வைப்பவர்கள், உடலில் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து, புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி புரதச்சத்தை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்புள்ளது. மேலும் சிக்ஸ் பேக் வைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பமும் அதிகமாகும் என்கிறார்கள்.
சிக்ஸ் பேக் வைப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சியை செய்யும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மிகவும் வலிமையான தசைநார்கள் தான் அவசியம். ஏனெனில் தசைநார்கள் தான் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மேற்கொள்ளும் உடற்பயிற்சியினால், கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடும்.
சிக்ஸ் பேக் அழகு என்றாலும், அழகுக்கு ஆசைப்பட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உடல் கட்டமைப்புடன் இருக்க தினமும் உடற்பயிற்சியுடன், போதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.
நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.
ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.
இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.