என் மலர்

  நீங்கள் தேடியது "Men Beauty"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை.
  • சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

  ஆண்களின் உடைகள், பைகள் இல்லாமல் முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகளில் பைகள் வைத்து தைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை?

  பெண்கள் காலம்காலமாக தோள்களிலும் கைகளிலும் பைகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோள் பைகள் ஒருபோதும் சட்டை பைகளுக்கு இணையாகாது. இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை. எனவே இந்தக் கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய வரலாற்றில் இருந்தே கண்டறிய முடியும். முந்தைய காலத்தில் ஆண்களும், பெண்களும் கையில் எடுத்துச் செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

  கி.பி.476 முதல் 1500-ம் ஆண்டு வரையிலான காலத்தில் எடை குறைவான பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். திருடர்களிடமிருந்து பணத்தை பாதுகாப்பதற்காக, சட்டையின் உட்புறமாக பைகளை தைக்கும் வழக்கமும் தொடங்கியது. பெண்களும்கூட சில ரக ஆடைகளில் இப்படி உள்பைகளைத் தைத்துக்கொண்டார்கள்.

  17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், வெயிஸ்ட் கோட், பேன்ட் என்று எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாகப் பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்களின் ஆடைகளுக்கு இந்த வாய்ப்பு அமையவில்லை. 18-ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. எனவே பெண்கள் தங்களது உடைகளுடன் பைகளை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது.

  இந்த காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு கூடிய பெண்களுக்கான பிரத்யேக பர்ஸ் பிரபலமானது. ஆனால், சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.
  • ராயல் லுக் தரும் கிளன் பிளைட் பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

  ஆண்கள் அணிகின்ற சட்டையில் இடம் பெறும் பேட்டர்ன்கள் என்பது தனிசிறப்பு கொண்டவை. அதில் ஒவ்வொரு பேட்டர்ன்களும் ஒவ்வொரு விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டர்ன்கள் என்பது பிரபலமானதாக மாறிவிட்ட பிறகு அதற்கென தனித்துவம் ஏற்பட்டு விடுகிறது. உலகமெங்கும் சட்டை உற்பத்தியாளர்கள் இந்த பேட்டர்ன்களில் ஏதேனும் ஒன்றை கொண்டே சட்டையை உருவாக்கி தருகின்றனர். அதுபோல் மிக முக்கியமான சட்டை பேட்டர்ன்களை அடிப்படையாக கொண்டே விதவிதமான வண்ணக் கலவையுடன் சட்டைகள் உலா வருகின்றன.

  பிரபலமான சட்டை பேட்டர்ன்கள்

  உலகெங்கும் பிரபலமான சட்டை பேட்டர்ன்கள் என்றவாறு பல உள்ளன. அவை ஜின்கெம், மெட்ராஸ், டார்டன் பிளைட், ஷெப்பர்ட செக், ஹவுண்ட்ஸ் டூத், கிளன் பிளைட், விண்டோ பேன் செக், கிராப் செக், டாட்டர்ஸ் சால், மினி செக், பின் செக், அவனிங் ஸ்டிரிப், பெங்கால் ஸ்டிரிப்ஸ், கேண்டி ஸ்டிரிப்ஸ், பென்சில் ஸ்டிரிப், ஹேர்லைன் ஸ்டிரிப், பார்கோடு, ஷேடோ போன்றவாறு பல பேட்டர்ன்கள் உள்ளன.

  ஜின்கெம் பேட்டர்ன்

  ஜின்கெம் என்பது பொதுவாக கட்டம் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. வெள்ளை மற்றும் வண்ணம் இணைந்தவாறு பெரும்பாலும் சதுர கட்டங்கள் பெரிய அளவில் உள்ளவாறு இதன் வடிவம் இருக்கும். நீளம் மற்றும் குறுக்குவாட்டில் பட்டை கோடுகள் என்பது இரட்டை வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்படும்போது சதுரமான கட்டம் போன்று காட்சியளிக்கும். நீளவாக்கில் 17-ம் நூற்றாண்டில் அறிமுகமான ஜின்கெம் பேட்டர்ன் என்பது 18-ம் நுற்றாண்டில் கட்டம் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட இந்த பேட்டர்ன் சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.

  மெட்ராஸ் பேட்டர்ன்

  கோடை காலத்தில் அணிய ஏற்றவாறு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் உருவாக்கிய பேட்டர்ன் தான் மெட்ராஸ். வண்ணமயமான கோடுகள் மற்றும் கட்டங்கள் உள்ளவாறு ஒரே சீரான இல்லாத மாறுபட்ட அளவுகளில் காணப்படும். மெட்ராஸ் பேட்டர்ன் கேஷ்வல் சட்டைகளாகவும், அரைகால் சட்டைகளாகவும் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.

  கிளன் பிளைட்

  கிளன் பிளைட் என்பது வேல்ஸ் ராஜா கட்டம் என்றவாறு அழைக்கப்படுகிறது. இந்த பேட்டர்ன் பெரும்பாலும் சூட் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இரட்டை சாயல் கொண்ட வெட்டுப்பட்ட கட்டங்கள் கொண்டவாறு இருக்கும். அதுபோல் டார்க் மற்றும் லைட் வண்ண கோடுகள் மாற்றி மாற்றி உள்ளது போன்ற பேட்டர்ன் அமைப்பு. ராயல் லுக் தரும் இந்த பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

  அவனிங் ஸ்டிரிப்ஸ்

  அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது அகலமான வடிவில் நீள கோடுகள் உள்ளது போன்று இருப்பது. வெள்ளை பின்னணியில் டார்க் மற்றும் லைட் வண்ண பட்டை கோடுகள் வருவது இதன் சிறப்பு அதாவது ¼ இன்ச் அளவிற்கு இந்த பட்டை கோடு உள்ளவாறு சீரான இடைவெளி அமைப்புடன் இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் பேட்டர்ன் உள்ளது. இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது கேஸ்வல் ஆடை வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

  பென்சில் ஸ்டிரிப்ஸ்

  பென்சில் அளவுள்ள சிறிய கோடுகள் உள்ள அமைப்பு. சீரான இடைவெளியின்றி வரிசைகிரமமாக கோடுகள் நீளவாக்கில் இருப்பது இதன் அமைப்பு. இதுவும் வெள்ளை நிற பின்னணியில் வண்ண கோடுகள் நீளவாக்கில் வரும்.

  ஷேடோ ஸ்டிரிப்ஸ்

  ஷேடோ ஸ்டிரிப்ஸ் என்பது நீளவாக்கில் கோடுகள் போல அமைந்திருக்கும். ஒரு வண்ணத்திற்கு மற்றது மார்டன் போல காட்சியளிக்கும். மேலும் ஏதேனும் வண்ணக்கோடுக்கு ஏற்ப அதே வண்ண சாயல் பரவியுள்ளவாறு தோன்ற செய்யப்படும். பெரும்பாலும் மூன்று (அ) இரட்டை வண்ண சாயல் பின்னணியில் இந்த பேட்டர்ன் உருவாக்கம் அமைகிறது.

  ஹியரிங் போன்

  மேல் மற்றும் கீழ் நோக்கி 'க்ஷி' வடிவில் இந்த பேட்டர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கும். மீனின் உள்முள் வடிவில் உள்ள இந்த பேட்டர்ன் சூட் மற்றும் வெளிநிகழ்வு ஆடைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அணிகின்ற சட்டைகள் எந்த வகையான பேட்டர்ன் என்பதை அறிந்து அணியும்போது அதன் சிறப்பும் பெருமையும் அறிய முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
  • ஆண்கள் பெண்களை போல் முறையான சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை.

  பெண்களுக்கு இணையாக ஆண்கள் பலரும் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பெண்களை போல் முறையான பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை. ஒருசில விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே சரும அழகை மெருகேற்றிக்கொள்ளலாம். முதுமை எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போட்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

  * பொதுவாகவே ஆண்கள் எந்தவொரு கிரீமையும் சருமத்தில் தடவுவதற்கு விரும்பமாட்டார்கள். இதனால் சருமம் எளிதில் வறட்சி அடைந்துவிடும். மென்மை தன்மை நீங்கி கடினமானதாகவும் மாறிவிடும். மென்மை அழகை பேணுவதற்கு மாய்ஸ்சுரைசரை தினமும் தடவி வரலாம். இது சரும வறட்சியை போக்கக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

  * சன்ஸ்கிரின் கிரீம்களை பெண்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஆண்களும் பயன்படுத்தலாம். அது சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கக்கூடியது என்பதால் இருபாலரும் தாராளமாக உபயோகிக்கலாம். சன்ஸ்கிரினையும் முறையாக உபயோகிக்க வேண்டும். வெளியே புறப்பட்டு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்வது நல்லது.

  * சன்ஸ்கிரின் போலவே முதுமை தோற்றத்தை தள்ளிப்போடும் 'ஆன்டி ஏஜிங் கிரீம்'களை ஆண்களும் அவசியம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவாகவே முதுமை தோற்றத்தை எதிர்கொள்வதை தடுத்துவிடலாம்.

  * ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு இதமளிக்கும். ஈரப்பதத்தையும் தக்கவைத்துக்கொள்ளும். சிலரோ கிரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்வார்கள். அது சரும வறட்சிக்கு வழிவகுத்துவிடும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். வெட்டு காயங்களை எதிர்கொள்ளவும் நேரிடும். அதனை தவிர்க்க ஷேவிங் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஷேவிங் செய்த பிறகு லோஷனையும் தவறாமல் தடவ வேண்டும்.

  * ஆண்களில் பலர் குளிக்கும்போது உடலுக்கு பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கும் உபயோகிப்பார்கள். அப்படி சோப்பை பயன்படுத்துவது சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மையை நீக்கிவிடக்கூடும். அதனால் சருமம் வறட்சியடையும். சரும செல்களும் பாதிப்பை எதிர்கொள்ளும். அதனை தவிர்க்க சோப்புக்கு பதிலாக 'பேஸ் வாஷ்' பயன்படுத்துவது சிறந்தது.

  * பெண்களின் சருமத்தில் மட்டுமே அழுக்குகள், இறந்த செல்கள் படிவதில்லை. ஆண்களின் சருமத்திலும் இத்தகைய பாதிப்புகள் நேரும். அதனால் ஆண்களும் அவ்வப்போது 'ஸ்கரப்' செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி முகம் புதுப்பொலிவோடு காட்சியளிக்கும். பால்-பாதாம், தயிர்-லவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய்-புரவுன் சுகர், ஓட்ஸ்-கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி எளிதாக 'ஸ்கிரப்' செய்யலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
  ஷேர்வானி, கோட்சூட், பிளேஸர்ஸ் - இவை மட்டுமே ஆளுமை தரும் ஆடைகள் என்று நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை இப்பொழுது முதல் மாற்றிக் கொள்ளலாம். ஆம், ஆடவர்கள் அணியும் பேன்ட் மற்றும் ஷர்ட்டுகளும் அணியும் விதத்தில் அணியும் பொழுது அது ஆளுமையைத் தரும் ஆடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

  * காண்ட்ராஸ்ட் நிறத்தில் அணியப்படும் பேன்ட்டும் ஷர்ட்டும் மிகவும் கம்பீரமாகவும் அதே சமயம் ட்ரெண்டியாகவும் இருக்கும். பொதுவாகவே மென்மையான பிங்க் நிறச்சட்டைக்கு அடர்த்தியான நீல நிறப்பேண்ட் அணியும் பொழுது அது அணிபவருக்கு முறையான தோற்றத்தைத் (ஃபார்மல் லுக்) தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

  * சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

  * மிகவும் மென்மையான நிறமுடைய பேண்டிற்கு அடர்த்தியான வண்ணங்களில் அணியப்படும் சட்டைகள் பொருத்தமானதாக இருக்கும். இவை அலுவலகத்திற்கு மட்டுமல்லாது விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஏற்ற ஆடையாக இருக்கும்.

  * மென்மையான கிரே நிறமுடைய பேண்ட்டிற்கு மிகவும் பொருத்தமானது கருப்பு நிறமுடைய சட்டை என்றால் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். இது போன்ற சேர்க்கையில் பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது ஷர்ட்டிலிருக்கும் பொத்தான் வெண்ணை நிறத்தில் இருந்தால் அது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவற்றை அணியும் பொழுது தனித்துவமாக தெரிவோம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

  * ஃபார்மல் பேன்ட்டிற்கு ஷர்ட், டி-ஷர்ட் மற்றும் போலோவை அணிவது டிரெண்டியிலும் டிரெண்டியாக உள்ளது.

  * வேஷ்டிக்கு ஜிப்பா அல்லது குர்த்தா அணிவதும் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருக்கும். தென்னிந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக வேஷ்டி சட்டையைச் சொல்லலாம். வேஷ்டி அணியும் பொழுது வேஷ்டியின் கரையானது வலதுபுறமாக இருக்க வேண்டும். அதேபோல் கணுக்காலுக்கு மேலே வேஷ்டி இருந்தால் அது அழகான தோற்றத்தைத் தராது. லெதர் ஷூ அல்லது ஸ்னீக்கரை வேஷ்டி அணியும் பொழுது போட்டுக் கொண்டால் அது ஆண்களின் ஆளுமையை அட்டகாசமாக வெளிப்படுத்தும்.

  * பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது எதை செய்யக்கூடாது? எதைச் செய்யலாம்? என்பதை தெரிந்து கொண்டு திருத்தமாக அணியும் பொழுது அவை ஆளுமை தோற்றத்தைத் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

  * டை அணியும் நேரம் தவிர ஷரட்டின் மேல் பட்டனை போடாமல் இருப்பது அழகான கேஷூவலான தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.

  * அதே போல் கூலர்ஸ்களை தலையில் அணிவதை விட ஷர்ட்டில் தொங்க விடுவது பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

  * டையானது பேண்ட்டின் பெல்ட் நுனியை தொட்டவாறு இருக்க வேண்டும். பேண்ட்டின் மேலோ அல்லது கீழோ தொங்குவது ஆளுமைத் தோற்றத்தைத் தருவதாக இருக்காது.

  * ஃபார்மல் உடைகளில் பெல்ட் மற்றும் ஷூஸ் மேட்ச்சாக அணியும் பொழுது அவை அட்டகாசமாக கெத்தான தோற்றத்தைத் தரும்.

  * நம் உடல் வாகுக்கு ஏற்றாற்போல் உடை அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

  * அதே போல் நிகழ்வுக்கு ஏற்றாற் போன்ற ஆடைகளை அணிவதும் அணிபவருக்கு ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை கூட்டும்.

  * ஆயத்த ஆடையோ அல்லது வாங்கித் தைக்கும் ஆடையோ எதுவாக இருந்தாலும் நம் உடலுக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் ஆடைகளை அணிவதும் மிகவும் உற்றுநோக்க வேண்டிய ஒன்றாகும்.

  * நாகரீகமான ஆடை என்பதற்காக நமக்கு பொருத்தமில்லாத ஆடையை அணிவது மிகவும் தவறான தேர்வாகும்.

  * ஜீன்ஸ் பேண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றுடன் நேர்த்தியான ஜாக்கெட்டுகளை அணிவதும் கிளாசிக்கான தோற்றத்தை நிச்சயம் தரும் என்று நம்பலாம்.

  * சரியான உடைகளுக்கு சரியான பாதணிகள், கைக்கடிகாரம் போன்றவற்றை தேர்ந்தெடுத்து அணிவது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

  பேண்ட், சட்டை அணிவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளதா என்பது தெரிந்து கொண்ட யாரும் ஆண்களுக்கென்ன ஒரு சட்டையையும் பேன்ட்டையும் போட்டால் நிமிஷத்தில் தயாராகி விடலாம் என்று இனிமேல் சொல்ல மாட்டார்கள். ‘ஆள் பாதி ஆடை பாதி’யை சிறிதே மாற்றி ‘ஆள் பாதி ஆளுமை பாதி’ என்று சொல்லுமளவுக்கு நாம் அணியும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியமாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்கள் ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
  பர்சனாலிட்டியை வெளிப்படுத்துவதில் முதன்மைவகிப்பது தலைமுடிதான். ஆண்கள் தலைமுடி பராமரிப்பில் பல தவறுகளைச் செய்கிறார்கள். இருக்கும்போது பத்திரமாகப் பார்த்துக்கொள்ளாமல், கொட்டிய பிறகு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. அதனால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்தத் தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா எனப் பாருங்கள். ஆம் எனில், அவற்றை உடனே திருத்திக்கொள்ளுங்கள்.

  ஆண்கள் தலைக்குக் குளிக்கும்போது, அழுக்குப் போக வேண்டும் என்பதற்காக விரல்களால் நன்கு தேய்ப்பர். அதேபோல, குளித்த பிறகும் துணியால் அழுத்தித் தேய்ப்பர். இப்படி ஈரமான முடியைக் கடினமாகத் தேய்த்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான முடி உதிர்ந்துவிடும். அதனால், எப்போதும் ஈரமான தலையைக் கடினமாகத் தேய்ப்பதைத் தவிருங்கள். அதேபோல, நிறைய ஆண்கள் சீக்கிரம் குளிக்கிறேன் என்ற பெயரில், தலைக்கு ஷாம்பு போட்டு நீரில் சரியாக அலசாமல், நுரை போகும் அளவில் மட்டும் தலையை அலசிவிட்டு வருவார்கள். இந்தப் பழக்கம் இப்படியே நீடித்தால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் படிந்து, ஆரோக்கியமான முடிக்கு ஆப்புவைத்துவிடும்.

  ஸ்டைலான தோற்றத்துக்காக, ஆண்கள் தினமும் தலைக்குக் குளிப்பர். இப்படித் தினமும் தலைக்குக் குளிப்பதால், ஸ்கால்ப்பில் உள்ள ஈரப்பசை முற்றிலும் வெளியேறி, அதிக வறட்சியைச் சந்திக்கும். இது இப்படியே தொடரும்பட்சத்தில், தலை இருக்கும். ஆனால், முடி இருக்காது.  இன்று பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகமான ஹேர்ஸ்டைல்கள் டிரெண்டாகிக்கொண்டிருக்கின்றன. அடிக்கடி ஸ்மார்ட்போனை மாற்றுவதுபோல் ஹேர்ஸ்டைலையும் டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அது பொருத்தமாக இருந்தால் பிரச்சனையில்லை. பொருத்தமில்லாத ஹேர்ஸ்டைலைச் செய்துகொண்டால், அது முடி உதிர்வதை அதிகப்படுத்திவிடும். குறிப்பாக, சில்கி ஹேர் தன்மையுள்ளவர்கள், நீளமான ஹேர்ஸ்டைல்களை வைக்காமல் இருப்பது நல்லது. தற்காலிக அழகுக்கு ஆசைப்பட்டு, முடியை மொத்தமாக இழக்க வேண்டாமே!

  ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, கண்ட கண்ட பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

  ஒருசில ஆண்கள் எப்போதும் தலையை சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார்கள். இது, முகத்தின் தோற்றத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், முடிக்கு நல்லதல்ல. சீப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினாலும், முடி பாதிப்புக்குள்ளாகி உதிர ஆரம்பிக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஓரிரண்டு முறைக்குமேல் சீப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமெனில், விரல்களால் அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். தலைக்குக் குளிப்பதற்கு முன்பு சீப்பினால் முடியைத் திருத்தம் செய்துகொள்வது, குளிக்கும்போது முடி உதிர்வதைத் தடுக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  “ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை.
  “ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. அழகு மற்றும் அழகு நிலையங்கள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்டது. நமக்கும், அதற்கும் ரொம்ப தூரம் என்று முக்கால்வாசி ஆண்கள் ஒதுங்கிவிடுகிறார்கள்.

  அதுவும் திருமணம் ஆன ஆண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நமக்கு தான் கல்யாணம், குழந்தை, என்றாகிவிட்டதே என்று சலிப்புடனேயே இருப்பார்கள். நாம் ஏன் தோற்றத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்று நினைத்தீர்களேயானால், நீங்கள் “உற்சாகமில்லா மனநிலை” என்ற படிக்கட்டில் ஏற ஆரம்பித்து விட்டீர்கள், இல்லை, இல்லை, இறங்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்க்கை தொடங்குவதே திருமணத்திற்கு பின்பு தான் என்பதை உணருங்கள். உங்கள் செல்ல குழந்தை “எனது அப்பா” என்று நண்பர்களிடமும், உங்கள் அன்பு மனைவி “எனது கணவர்” என்று உற்றார், உறவினர்களிடமும் அறிமுகம் செய்வதில் எப்போதும் ஆனந்தம் அடைவார்கள். அப்போது நீங்கள் பார்க்க நன்றாக இருந்தால் தானே அவர்களுக்கும் பெருமை.

  “நீங்கள் சொல்வதை பார்த்தால் நானும் சிலரை போல பணத்தை அழகு நிலையங்களில் செலவு செய்யவேண்டுமா? காசை கரியாக கரைக்கணுமா?” என்று கேட்பீர்களேயானால் அதுவல்ல நான் கூற நினைப்பது. சாதாரணமாக முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் என்று ஆரம்பித்து உங்களால் முடிந்ததை, இயன்றதை மாதம் தோறும் தவறாமல் செய்துகொள்ளுங்கள். இதை செலவு என்று ஒருபோதும் நினைக்காதீர், முதலீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளியுங்கள். ஆம், எப்பொழுதும் சிடுசிடு என்று இருப்பவர்களை யார் தான் ரசிப்பார், சொல்லுங்கள்? இதனால் உங்கள் தன்னம்பிக்கை மட்டுமல்ல செயல்திறனும் கூடும். உங்கள் மனைவி மக்களும் பெருமை கொள்வர்.

  ஆண் அலங்காரத்தில் அடுத்த முக்கிய பிரச்சினை தொந்தி. திருமணமான பின்பு ஆண்கள் விளையாட்டு, உடற்பயிற்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேலை, வேலை என்று அலைவார்கள். நீரிழிவுநோய், ரத்தகொதிப்பு என்று வந்த பின்பு தான் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். ஏன் அதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டும்?. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் கூற்றிற்கேற்ப தினமும் குறைந்தது ஒரு முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்து நீங்கள் உடல்நலத்துடனும், மனநலத்துடனும் மட்டுமின்றி தொந்தி இல்லா புற அழகுடனும் இருக்கலாமே.

  அடுத்து உடல் துர்நாற்றம். புறஅழகை காக்க நம் மேல் எந்தவித துர்நாற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். தினமும் உண்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தினமும் குளிப்பது. வெயில் காலங்களில் அவசியம் ஏற்பட்டால் இருமுறை குளிப்பதும் தப்பில்லை. அதேபோல் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இருமுறை பல்விளக்குதல், உணவு உண்ட பின்பு, வாய் கொப்பளித்தல், ஏலக்காய் சாப்பிடுதல் என்று சில செயல்களால் அதை தவிர்க்கலாம்.

  “கூழ் ஆனாலும் குளித்து குடி, கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு” என்று பழமொழிக்கேற்ப ஆடைகளை துவைத்து அணியவேண்டும். ஆடையின் நிறம் மற்றும் அளவு நமக்கு தகுந்தாற் போல் பார்த்து கொள்வது முக்கியம். பொத்தான்கள் இல்லாமல் அணிவது, கிழிந்த ஆடைகளை அணிவது என்று இல்லாமல் நாம் அதனை உடனுக்குடன் சரி செய்து அணிதல் வேண்டும். வெயில் காலங்களில் மட்டுமின்றி முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிவது உடல் நலத்திற்கும் நல்லது, பார்க்கவும் நன்றாக இருக்கும். இதை நம்பி இருக்கும் நெசவாளர்களும் மகிழ்வர்.

  புற அழகில், நாம் நமது தனிப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து பேணுதல் மிக முக்கியம். நகம் வெட்டுதல், முடி வாருதல், முகம் கழுவுதல் என்று நம்மை நாமே கவனித்து செய்துகொள்ள வேண்டும். காலணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து கருப்பு பூச்சு அணிந்து செல்ல வேண்டும்.

  எனது நண்பர் ஒருவர், “பல மேடை பேச்சுகளை கேட்டும், நம்பிக்கை தரும் நூல்களை படித்தும் கிடைக்காத தன்னம்பிக்கை, முடிவெட்டி, சவரம் செய்த பின்பு கண்ணாடியை பார்க்கும் போது கிடைக்கிறது. அதற்கு அந்த சவரதொழிலாளிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்பார். உங்கள் புற அழகை பேணுவதால் உங்கள் தனித்துவம் மேம்படும் என்பதை மறவாதீர். நேர்காணலில், பணி இடங்களில் வெற்றி பெற, வாடிக்கையாளரிடம் நன்மதிப்பை பெற என்று மட்டும் இல்லாமல் உங்களுக்குள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் நாள் முழுக்க பெருக்கெடுத்து ஓடவைக்கும் வித்தை இது என்பதையும் மறவாதீர். தினமும் சிலநிமிடம் கண்ணாடி முன்பு நின்று உங்களை நீங்களே பார்த்து ரசியுங்கள், உங்களுக்கு நீங்களே முதல் ரசிகனாய்.

  கமலேஷ் சுப்பிரமணியம்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. உங்களுக்கு வழுக்கை விழுந்தால், அதனை மறைக்க என்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
  தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டதோடு, ஃபேஷனாகியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே ஆண்கள் பலரும் தங்களின் முடிக்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுத்து வருகின்றனர்.

  இருப்பினும், அதையும் மீறி சிலருக்கு வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு அவர்களின் ஜீன்கள் தான் காரணம். உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் விரைவில் வழுக்கை விழுந்திருந்தால், உங்களுக்கும் வழுக்கை விரைவில் ஏற்படக்கூடும். அப்படி உங்களுக்கு வழுக்கை விழுந்தால், அதனை மறைக்க என்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

  உங்களுக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், கைத்தேர்ந்த சிகை ஒப்பனையாளரை சந்தித்து, அவர்களின் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் சிகை ஒப்பனையாளருக்கு உள்ள அனுபவத்தால், நிச்சயம் உங்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல வழியைக் காட்ட முடியும். எனவே அவர்கள் சொல்வதை தவறாமல் பின்பற்றி உங்கள் வழுக்கைத் தலையை மறைத்துக் கொள்ளுங்கள்.

  உங்கள் தலையில் ஆங்காங்கு மட்டும் முடி இருப்பதைப் பார்க்க உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், மொட்டை அடித்துக் கொள்ளுங்கள். மேலும் தற்போது மொட்டைத் தலையுடன் ஆண்கள் இருப்பது ஃபேஷனும் கூட. எனவே அவ்வப்போது உங்கள் தலையை ஷேவ் செய்து, மொட்டைத் தலையுடன் சுற்றுங்கள்.  உச்சந்தலையில் நிறமூட்டல் (Scalp Pigmentation)

  இந்த முறை மிகவும் விலை அதிகம் கொண்ட செயல்முறை தான் உச்சந்தலையில் நிறமூட்டல். வழுக்கைத் தலையுள்ள பல்வேறு பிரபலங்களும் இந்த செயல்முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த முறை உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சரியான இடத்தைத் தேடி கண்டுப்பிடித்து பின்பற்றுங்கள்.

  முடி மாற்றம் (Hair Transplants)

  இது வழுக்கைத் தலையை மறைப்பதற்கு எளிதில் கிடைக்கும் ஓர் சிகிச்சை. இந்த சிகிச்சை சற்று விலை அதிகமானது மட்டுமின்றி, கடுமையான வலியைத் தரக்கூடியதும் கூட. இதனால் தலையில் தழும்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் பல ஆண்கள் இதனை தேர்வு செய்கின்றனர். உங்களுக்கு விருப்பமிருந்தால், இதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.

  தலையில் விக் பயன்படுத்தலாம்

  கடைசியாக மேற்கூறிய வழிகள் எதுவும் உங்களுக்கு பொருந்தாவிட்டால், கடைசியில் தலைக்கு விக்கை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி தலைக்கு விக் பயன்படுத்துவதாக இருந்தால், உங்களுக்கு பொருத்தமாக உள்ளதைப் பார்த்து பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் அது நீங்கள் விக் வைத்துள்ளீர்கள் என்பதை நன்கு வெளிக்காட்டிவிடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது.
  ஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது. எனவே, ஒவ்வொரு ஆண் மகனும் அணிய ஏற்ற ஸ்டைலான ஷூ எனும்போது ஏழு வகையான ஷூக்கள் கட்டாயம் ஒவ்வொரு ஆணிடமும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு விழாக்கள் மற்றும் அலுவலகப்பணிகள் என்பதுடன் தினசரி ஜாக்கிங், ரன்னிங் போன்றவைக்கு அணிய ஏற்றவாறும் ஷூ இருத்தல் வேண்டும். வெவ்வேறு விதமான ஷூ வகைகள் என்பது ஒவ்வொரு விதமான வடிவமைப்பு மற்றும் சிறப்பு மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன.

  லேஸ் கொண்டு கட்டக்கூடிய பிரோக்

  இன்றைய நாளில் அனைவரும் விரும்பி அணியும் பிரோக் வகை ஷூ என்பது லேஸ் கயிறு கொண்டு இறுக கட்டும் அமைப்பிலான ஷூ வகை. இதனை பெரும்பாலும் பார்மல் மற்றும் கேஸ்வல் வகை ஆடைகளுக்கு இணையாக அணிந்து கொள்ளலாம். பிரவுன் பிரோக் ஷூக்கள் பார்மல் நிகழ்வுகளுக்கும், லைட் பிரவுன் கேஷ்வல் நிகழ்வுகளுக்கும் அணிந்து கொள்ளலாம். கருப்பு நிற பிரோக் ஷூக்கள் சூட் போன்ற ஆடைகளை அணியும்போது அணிய ஏற்ற ஷூவாக உள்ளது. எப்படி இருப்பினும் ஒரு பிரோக் வகை ஷூ வைத்திருப்பது நமக்கு உதவிகரமாக இருக்கும்.

  சூப்பரான சுக்கா ஷூ

  சுக்கா ஷூக்கள் தற்காலத்தில் மிக பிரபலமாக உள்ளது. முன்பு 40-களில் அதிக பிரபலமானதாக இருந்தது. இந்த ஷூ குறுகிய குழல் வடிவ உள்நுழைவு பகுதி மற்றும் கணுக்கால் வரை நீண்ட பூட் அமைப்பில் மூன்று அல்லது இரண்டு லேஸ் ஐலெட் உள்ளவாறு உள்ளது. கேஸ்வல் வகை ஆடைக்கு மிக கச்சிதமான ஷூ சுக்கா. ஜீன்ஸ் மற்றும் சினோஸ், போலோ ஷார்ட் போன்றவை அணியும்போது சுக்கா ஷூ சரியானதாக இருக்கும்.

  லெதர் பூட்

  அனைத்து ஆடைகளுக்கு ஏற்ற வகை ஷூ எனும்போது லெதர் பூட் சிறப்பானதாக அமையும். பூட் வகை ஷூக்களை சேகரிப்பதில் பல ஆண்களும் ஆர்வமாகவே உள்ளனர். ஒவ்வொரு வண்ண பூட்ஸ்களும் ஒவ்வொரு விதமான அழகை தரும். கணுக்கால் மேல் வரை நீண்ட பூட்ஸ் மற்றும் நிறைய லேஸ் ஐலெட்களுடன் காணப்படும் பூட்ஸ் கருப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் வழவழப்பான வடிவமைப்புடன் காணப்படுகிறது. இதில் தோல் வகையை பொருத்து அதன் ஆயுட்காலம் மற்றும் பளபளப்பு வரையறை செய்யப்படும்.  ஒயிட் லோ டாப் டிரையனர்

  மிக அழகிய கேஸ்வல் போன்ற தோற்றத்தை தருவதுடன் பார்த்தவர் அனைவரும் மூக்கில் மேல் விரல் வைக்கக்கூடியது இந்த ஒயிட் லோ டாப் டிரையனர். கருப்பு ஜீன்ஸ் பேண்ட்களுக்கு அணிய ஏற்ற வகையில் ஒயிட் டிரையனர் சிறந்த அழகுடன் திகழ்கிறது.

  பல வண்ணங்களில் கிடைக்கும் லோபர்ஸ்

  ஸ்கான்டிவிபனின் அடிப்படையில் உருவான நவீன லோபர்ஸ் தற்போது அதிக விருப்பமான ஷூ ஆகும். கீழ் இறக்கப்பட்ட அமைப்பு மற்றும் லேஸ் இல்லாத ஷூவான லோபர்ஸ் நவீன வகை ஆடை அனைத்திற்கும் ஏற்ற அமைப்பாகும். பிரவுன் நிற லோபர்ஸ் கேஸ்வல் மற்றும் பார்மல் நிகழ்வுகளுக்கு ஏற்றதாகும். மிகச்சிறந்த வெள்ளை, பீஜ் மற்றும் பச்சை நிறங்களுடன் பார்கெண்டி நிறமும் கிடைக்கின்றன.

  ழகிய ஆக்ஸ்போர்டு ஷூ


  ஆக்ஸ்போர்டு ஷூக்கள் மூடப்பட்ட லேஸ் அமைப்புடன் உள்ளது. அதாவது பிளைன் ஷூ வகையான இது தோலால் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளில் பல துணிகள் மற்றும் சிறந்த வடிவமைப்புகளில் ஆக்ஸ்போர்டு ஷூ உருவாக்கப்படுகின்றன. டேன் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் ஆக்ஸ்போர்டு ஷூக்கள் பார்மல் மற்றும் கேஷ்வல் ஆடைக்கு ஏற்றதாகவும், அழகாகவும் உள்ளது.

  ரன்னிங் ஸ்நிக்கர்ஸ்

  பிரகாசமான வண்ண கலவையுடன் கிடைக்கும் ரன்னிங் ஸ்நிக்கர்ஸ் மிக கச்சிதமான ஷூ வகையாக உள்ளது. மிக சிறந்த மிருதுவான ஷூ என்பதுடன் அதிக நாள் உழைக்கக்கூடியதாக உள்ளது. எந்த வகை ஆடைகளுக்கும் ஏற்ற ரன்னிங் ஸ்நிக்கர்ஸ் என்பது அனைத்து வகை நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்ற வகையாக உள்ளது. ஆண்களுக்கான ஷூக்கள் என்பதில் மேற்கூறிய ஷூ வகைகள் கட்டாயமாக இருக்க வேண்டியதாக உள்ளன. 
  ×