என் மலர்

  நீங்கள் தேடியது "Manipur landslide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிப்பூரில் இன்று மேலும் 3 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
  • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.

  இம்பால்:

  வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்தது. ஜூன் 30 அன்று அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.

  ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

  இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் 3 உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 8 பேரை தேடும் பணிகள் நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.
  • இதில் 27 ராணுவ வீரர்களும் அடங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

  ராய்ப்பூர்:

  மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பூபேஷ் பாகல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினென்ட் கர்னல் கபில் தேவ் பாண்டே வீரமரணம் அடைந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவர் கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் தலைமை தாங்கினார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது.
  • மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

  இம்பால்:

  வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.

  ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

  இந்நிலையில், நேற்று 3-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 28 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
  • காணாமல் போன 38 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  மணிப்பூர் மாநிலத்தின் நானி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 தொழிலாளர்களை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது, மேலும் காணாமல் போன 38 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்றன. நான்கு பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

  மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஒப்பந்த பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ரயில்வே கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர்களின் பெயர்களை அசாம் அரசு வெளியிட்டது. இவர்களில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர், ஐந்து பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
  • நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

  இம்பால்:

  மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

  இந்நிலையில், மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பேர் ராணுவ வீரர்கள்.

  மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

  நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
  • ராணுவம் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது.

  இம்பால்:

  மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

  இந்நிலையில், மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிருடன் புதைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், முதல் மந்திரி பிரேன் சிங்கிடம் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்துவித உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என தெரிவித்தார்.

  மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வரும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
  இம்பால்:

  மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவினால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், தாமங்லாங் மாவட்டம் நியூ சேலம் கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மலையடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது. மலை உச்சியில் இருந்த சில வீடுகள் இடிந்து விழுந்தன.


  இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.

  கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடும் என்றும், இதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. #ManipurLandslide
  ×