search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaria Day"

    • ராமநாதபுரத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறை பற்றி மாவட்ட மலேரியா அலுவலர் பேசினார்.

    பரமக்குடி

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ஹரிகரன் வரவேற்றார். மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களையும், கொசுப்பழுக்களையும் ஒழிக்கும் முறை பற்றியும், மலேரியா காய்ச்சலுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை பற்றியும் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் பேசினார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமையில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மருத்துவ அலுவலர் மாலினி, சுகாதாரத்துறை துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கீர் முகமது நன்றி கூறினார்.

    • இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
    • மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும்.

    இன்று உலக மலேரியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    மனிதர்களுக்கு வாழ்க்கையில் நோய், பிரச்சினை என எதுவாக இருந்தாலும் வந்தபின் காப்பதைவிட, வரும்முன் காப்பதே என்றும் சிறந்தது. அந்த வகையில் உலகில் மனிதர்களை ஏராளமான தொற்று நோய்கள், வைரஸ் காய்ச்சல்கள் அச்சுறுத்துகின்றன. இதில் மலேரியா காய்ச்சலும் ஒன்றாகும். அனாபிளஸ் வகை பெண் கொசுக்கள் கடிக்கும்போது மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. அதாவது, அனாபிளஸ் வகை பெண் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது 'பிளாஸ்மோடியம்' என்ற 5 வகையான ஒட்டுண்ணிகள் மனிதனின் ரத்தத்துடன் கலந்துவிடுகிறது. இதையடுத்து அந்த ஒட்டுண்ணிகள் ரத்தத்தின் சிவப்பணுக்களை தாக்கி மலேரியா காய்ச்சலை உண்டாக்குகிறது. மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக தலை சுற்றல், வாந்தி, சுவாசித்தலில் சிரமம், கடுங்குளிர் ஏற்படும்.

    இந்த காய்ச்சலின் தீவிரத்தால் மரணம்கூட ஏற்படும். ஆனால் மலேரியா காய்ச்சலை முன்னரே அறிந்து தகுந்த சிகிச்சை பெற்றால் குணப்படுத்திவிடலாம். ஊட்டச்சத்து உணவுகள், பழங்கள் சாப்பிட்டு ரத்த சிவப்பணுக்களை வலுவடைய செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மலேரியா காய்ச்சலை விரட்டலாம். இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் 2010-ல் ஒரு ஆண்டில் மட்டுமே உலகளவில் 6,55,000 பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆவர்.

    எனவே, மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும். இதற்கு நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழைகாலங்களில் டயர், பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் மருந்து தெளித்து மூடிவைக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். இரவு தூங்கும்போது அவர்களுக்கு கொசுவலை பயன்படுத்துவது நல்லது.

    2007-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, ஏப்ரல் 25-ந்தேதியை உலக மலேரியா தினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்தது. இதைதொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    • அரசு நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் திட்டம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதம் இன்று மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ. ரிச்சர்ட் தலைமை தாங்கி மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சி மற்றும் கொசு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் திட்டம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாதம் இன்று மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தொகுதி

    எம்.எல்.ஏ. ரிச்சர்ட் தலைமை தாங்கி மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சி மற்றும் கொசு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வினி மலேரியா நோய் பற்றியும் அதன் தடுப்புமுறை மற்றும் சிகிச்சை பற்றியும் விவரித்தார்.

    தேசிய நோய் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகள் காட்சி அமைப்பினை கண்டு களித்த னர். சுகாதார ஆய்வாளர் யசோதா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை சுகாதார உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், சுதாகர், விசாலாட்சி, மற்றும் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×