search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahela Jayawardene"

    • பார்டர் கவாஸ்கர் தொடரில் 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
    • இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம்.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.

    2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.

    அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது

    என்று அவர் கூறினார்.

    • கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.
    • விராட் கோலி மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.

    துபாய்:

    உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. சமீபகாலமாக அவர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை.

    3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.

    33 வயதான விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இதுவரை சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. மோசமான 'பார்ம்' காரணமாக இந்திய அணி விளையாடிய சில தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

    அவரது பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

    இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியின் அடிப்படையில் தான் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.

    இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி தற்போது எதிர் கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அவர் தரமான ஆட்டக்காரர். அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.

    கடந்த காலங்களில் அவர் இது மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளார். அதே போல விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான்.

    இவ்வாறு ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

    விராட் கோலி சர்வதேச போட்டியில் மொத்தம் 23, 726 ரன்கள் (டெஸ்ட் 8074, ஒரு நாள் ஆட்டம் 12,344, 20 ஓவர் போட்டி 3308) எடுத்துள்ளார். 70 சதங்களை (டெஸ்ட் 27+ ஒருநாள் போட்டி 43) அடித்துள்ளார்.

    ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், ஹால் ஆப் பேம் என்ற அந்தப் பட்டியலில் புதியதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2014ல் இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும், ஐசிசி நடத்திய 4 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முரளீதரன், சங்ககராவை தொடர்ந்து ஹால் ஆப் பேம் விருது பெறும் 3வது வீரர் ஆவார்.

    இதேபோல், தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டரான ஷான் பொல்லாக்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 
      
    மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனையான மறைந்த ஜானெட் பிரிட்டின் பெயரும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
    ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி என்று இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

    இலங்கை அணி தொடக்க சுற்றோடு வெளியேறிய நிலையில் பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. ஆசிய அணிகளில் இந்தியாதான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பேலன்ஸ் கொண்ட அணி என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘இந்திய ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் வெளிப்பாடு கேப்பையை வெல்ல தகுதியுடையதாக இருந்தது. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட ஏராளமான போட்டிகள் மிகவும் நெருக்கமாக வந்து பரபரப்பு ஏற்படுத்தின.

    வங்காள தேச அணி தமிம் இக்பால் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்கள் வங்காள தேசத்திற்கு தலை நிமிர்ந்து செல்ல முடியும். எனினும், நல்ல தொடக்க கிடைத்தும் வெற்றி பெற முடியாமல் போனதே என்ற பெரிய ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கும்.



    வங்காள தேசம் 260 ரன்களுக்கும் மேல் அடித்திருக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

    மிக்க மகிழ்ச்சியோடு இந்தியா சொந்த நாடு திரும்பும். புதிய வீரர்கள் மற்றும் புதிய கம்பினேசன்களை இந்த தொடர் செய்து பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பைக்கு அவர்கள் தயார் ஆகி வருவதை காட்டியது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி ’’ என்றார்.
    இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோசகர் பதவி தனக்கு வேண்டாம் என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார்.

    தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை ஏற்கனவே கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.



    இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆலோசனைக் குழு முடிவு குறித்து முரளிதரன் கூறுகையில், ‘இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது கிரிக்கெட் நிர்வாகம் கேவலமான ஒரு நிலையில் இருக்கும் போது எங்களைப் பயன்படுத்தப்பார்க்கிறது’, என கூறினார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில், ‘இந்த சிஸ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole
    ×