என் மலர்

  நீங்கள் தேடியது "MK Stalin"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் முதலமைச்சர் ஆய்வு.
  • தீர்வு காணப்பட்டது குறித்து பொது மக்களிடம் உறுதிப்படுத்தவும் வலியுறுத்தல்.

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 


  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  இந்த ஆய்வின்போது, மின்னகத்தில் புகார் அளித்தவர்களில் 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதனுடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார்

  மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். என்று மின்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

  இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்ற சரத்கமலுக்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வழங்கினார் முதல்வர்
  • கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷ்-க்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

  சென்னை:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தில் (Elite Sportsperson Scheme) ஏ.சரத்கமல், சத்தியன் செல்வி பவானி தேவி ஆகியோருக்கும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (Mission International Medals Scheme) சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் தொடர் பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

  அந்த வகையில், கடந்த 28.7.2022 முதல் 8.8.2022 வரை இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ. சரத்கமலுக்கு மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி, ஒற்றையர் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி, என மொத்தம் 4 பதக்கங்களை வென்றதற்காக உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடியே 80 இலட்சம் ரூபாயும்,

  மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டியில் 1 தங்கம், இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி மற்றும் ஒற்றையர் போட்டியில் 1 வெண்கலம், என மொத்தம் 3 பதக்கங்களை வென்றதற்காக ஜி. சத்தியனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாயும்,

  ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக் உயரிய ஊக்கத்தொகையாக 40 இலட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 20 இலட்சம் ரூபாயும் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக 51 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 91 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

  மேலும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ஊக்கத்தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.

  இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா. ப. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • உயர்தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளும், இந்த நவீன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும்.
  • நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

  சென்னை:

  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை உறுதி செய்யும் விதமாக தேசிய பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 17,422 சதுர அடி பரப்பளவில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக தரபரிசோதனை செய்து திறந்து வைத்தார்.

  இவ்வாய்வகத்தில் உயர்தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளும், இந்த நவீன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஒழுங்கு முறை ஆணையங்களின் விதிகளுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கான தர பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும். இதன்மூலம், நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

  மேலும், சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, இளநிலை செயல்பணியாளர் (அலுவலகம்), இலகுரக வாகன ஓட்டுநர், தொழில்நுட்பர் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • பொதுமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்கிட வழிவகை ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.

  சென்னை:

  எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

  மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா.இராமச்சந்திரன் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  மேற்கூறிய 258 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்கிட வழிவகை ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
  • பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார்.

  சென்னை:

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார்.

  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

  இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார்.

  இந்த சூழலில் இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார். அதன் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

  செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

  அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்வதையொட்டி இன்றே அதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
  • மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

  சென்னை:

  மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இம்மாதம் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

  இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.

  தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

  மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.
  • ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்பு.

  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

  இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார்.

  காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் திமுக வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
  • அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்.

  சென்னை:

  சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  குமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்த இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒரு தாய் மக்களாக உணர்ந்து பாடுபட்டதால் கிடைத்தது இந்த விடுதலை. ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமை உணர்வால் தான் காக்க முடியும். இதுதான் உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

  75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை - மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து - ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்.

  வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!

  இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.
  • தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

  சென்னை:

  சுதந்திர தினம், குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.

  அந்த வகையில் சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.

  இந்த தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

  தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் கடந்த தமிழ் புத்தாண்டு அன்றும் தேனீர் விருந்து அளித்திருந்தார். அப்போது தமிழக அரசு தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்கவில்லை.

  தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தனர்.

  நீட் மசோதாவை நீண்ட நாட்களாக கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை சுட்டிக்காட்டி இதன் காரணமாகவே தேனீர் விருந்தை புறக்கணித்துள்ளோம் என்று அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

  இந்த நிலையில்தான் கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல-இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக்கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

  சென்னை:

  இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றினார். அது போல மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடி ஏற்றினார்கள்.

  தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

  நமது இந்திய நாடு, ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

  எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது!

  நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை-போராளிகளைக் கண்டிருக்கிறது!

  அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது!

  அதனால்தான் உலக அரங்கில் நாம் நெஞ்சு நிமிர்த்தி 'இந்தியர்கள்' என்று பெருமையோடு சொல்கிறோம்!

  இந்தப் பெருமை என்பது, 'அகிம்சைப் பாதை' என்னும் அறவழியை நமக்குக் காட்டிய 'தேசத்தந்தை' அண்ணல் காந்தியடிகளையே சாரும்!

  அதனால்தான் முதலில் நாட்டு விடுதலைக்காகவும்-பின்னர் சமூக விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், மகாத்மா காந்தி மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்த நாட்டிற்கு 'காந்தி தேசம்' என்று பெயரிட வேண்டும் என்று கூறினார்.

  இன்று விடுதலை நாளில், நமது தேசியக்கொடியை ஏற்றும்போது, இந்த வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

  அதேபோல், இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநில முதல்-அமைச்சர்கள் அனைவருக்கும் தேசிய கொடி ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

  பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்!

  இன்று நம் முன் பறக்கும் இந்தக்கொடியை, 1947-ம் ஆண்டு ஜூலை மாதம் அரசியல் நிர்ணய அவையில், உணர்ச்சிகரமான ஓர் உரையை ஆற்றி, தீர்மானமாக முன்மொழிந்தவர் பண்டிதர் நேரு அவர்கள். அப்படித்தான் இம் மூவண்ணக்கொடி தேசியக்கொடி ஆனது.

  அதேபோல, இந்தியா விடுதலை அடைந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நள்ளிரவுப் பொழுதில், பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம், இந்திய நாட்டின் பெண்கள் அனைவரின் சார்பாகவும் முதல் கொடியை வழங்கியவர் ஹன்ச மேத்தா! விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணிதான் வழங்கினார்.

  அத்தகைய மூவண்ணக்கொடியை வணங்குவதன் மூலமாக நாட்டை வணங்குகிறோம். நாட்டு மக்களை வணங்குகிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் ஒருமைப்பாட்டு விழுமியங்களை வணங்குகிறோம்.

  மூவண்ணக் கொடிக்கு முன்பு-அணி அணியாக அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

  75 ஆண்டுகளாக விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்.

  தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல-இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன்.

  ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதன் மூலம், 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.

  இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக்கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

  இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன்.
  • நம்முடைய கலைஞரின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் நடராஜன்.

  சென்னை:

  சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் உருவப்படத்தைத் திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற மரியாதைக்குரிய சட்ட அறிஞர், மூத்த வழக்கறிஞர் என். நடராஜனுடைய நினைவுகளைப் போற்றக்கூடிய நிகழ்ச்சியாக இந்த படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  கடந்த ஆண்டு நடராஜன் மறைந்தபோது, நம்முடைய சண்முகசுந்தரம் குறிப்பிட்டதைப் போல உடனடியாக அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடைய உடலுக்கு மரியாதை செய்து, நான் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன்.

  இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன். நம்முடைய கலைஞரின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் அவர்.

  அவருடைய இழப்பு என்பது வழக்கறிஞர்களுக்கு நீதித்துறைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. எங்களைப் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புதான் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

  தி.மு.க.வுக்கு குறிப்பாக தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஜெயின் கமிஷன் மூலமாக அந்த சோதனை வந்த நேரத்தில், தன்னுடைய வாதங்களின் மூலமாக காத்தவர் நம்முடைய நடராஜன் என்பதை யாரும் மறந்திடமுடியாது. நாங்கள் நிச்சயமாக எங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது.

  அதைப்போல, 1996-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்து ஊழல்கள் தொடர்பாக, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று முடிவெடுத்தபோது, சீரிய ஆலோசனைகளைச் சொன்னவரும் நடராஜன் தான்.

  தனது அறிவுக்கூர்மையாலும், வாதத்திறமையாலும் நீதிமன்றங்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த நடராஜனின் புகழ் என்றும் நிலைத்து நீடிக்கும்.

  இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.