search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MKStalin"

    • தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள் - மோடி
    • உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? - மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    மோடியின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,

    "பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு மிகவும் மோசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சை நாடியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்.

    பிரதமர் மோடியின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காதை மூடிக்கொண்ட தேர்தல் ஆணையம், வெட்கமின்றி நடுநிலைமையை கைவிட்டுள்ளது

    இந்தியா கூட்டணி உறுதியளித்த சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான நீண்ட கால ஒரு தீர்வாகும். பிரதமர் மோடி அதை திரித்து, சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரிய பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

    பாஜகவின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நமது உறுதிப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    • தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும்

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.

    விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.

    தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இத்துட் ஹோடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,

    "தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும்.

    சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • சேப்பாக்கம் மைதானம்போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.

    விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.

    தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • பாராளுமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
    • மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார் என தி.மு.க. தெரிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதன்படி, திருச்சி, பெரம்பலூரில் 22-ம் தேதியும், தஞ்சை, நாகையில் 23-ம் தேதியும், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் 25ம் தேதியும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 26-ம் தேதியும், தென்காசி, விருதுநகரில் 27-ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்.

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் 29-ம் தேதியும், சேலம், கள்ளக்குறிச்சியில் 30-ம் தேதியும், ஈரோடு, நாமக்கல் 31-ம் தேதியும், வேலூர், அரக்கோணம் 2ம் தேதியும், ஆரணி, திருவண்ணாமலை 3ம் தேதியும், கடலூர், விழுப்புரம் 5-ம் தேதியும், சிதம்பரம், மயிலாடுதுறை 6-ம் தேதியும், புதுச்சேரி 7-ம் தேதியும், மதுரை, சிவகங்கை 9-ம் தேதியும், தேனி, திண்டுக்கல் 10-ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பூர், நீலகிரி 12-ம் தேதியும், கோவை, பொள்ளாச்சி 13-ம் தேதியும், திருவள்ளூர், வடசென்னை 15-ம் தேதியும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூதுர் 16-ம் தேதியும், தென் சென்னை, மத்திய சென்னை 17-ம் தேதியும் பிரசாரம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.

    • குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது
    • இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது.

    அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

    அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு.
    • 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது திருவோணம் தாலுகா.

    தஞ்சாவூரில் புதிய தாலுகாவாக திருவோணம் உருவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.

    திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்கள் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு செல்ல வேண்டி இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வஙெ்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாகிறது.

    • சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘ கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்
    • மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர்.

     2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல் படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று "சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ' கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்" என அறிவித்தார்கள்.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விருதானது ரூ.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் கொண்டுள்ளது. வி.என்.சாமி பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றவர். இவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். 9-6-1931 அன்று பிறந்தவர்: 92 ஆண்டுகள் நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர்.

    தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணி நாளிதழில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக உயர்ந்து 1989ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

    பல்வேறு நூல்களைப் படைத்துள்ள வி.என்.சாமி அவர்கள் எழுதிய "புகழ்பெற்ற கடற்போர்கள்" என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தமிழ்நாட்டின் வால்ட்விட்மன் என்று வி.என்.சாமி அவர்களைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமருக்கு பிடிக்கவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க. மாநில முதல் மந்திரிகளுக்கும் ஏற்படும்.

    மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை.

    மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையைப் பறித்தார். இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

    முந்தைய காலத்தில் பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை.

    மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய கேரள முதல் மந்திரியை டெல்லி வந்து போராட்டம் நடத்த பா.ஜ.க. அரசு வைத்துள்ளது.

    கூட்டாட்சி தத்துவத்தை பேணிக் காப்பதற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.

    • தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் முதலமைச்சர்.

    தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • விசிக சார்பில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
    • இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று மாலை மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் வெள்ளி விழா, திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என மும்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவை முழுமையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. ஒன்றியங்களில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்த கூடாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது. இது தான் நம் இலக்கு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற நடைமுறை இருக்காது, ஜனநாயகம் இருக்காது, ஏன் மாநிலங்களே இருக்காது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அங்கு தேர்தல் கிடையாது, அரசியல் கட்சி தலைவர்களுக்கு வீட்டு சிறை. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம்" எனக் கூறினார்

    • முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சாரநாத் நகர், தைக்கால் தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த புதிய பஸ் சேவையை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் உடன் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், கும்பகோணம் போக்குவரத்து கோட்ட மேளாலர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்புசாமி, கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    ×