search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lloyd Austin"

    • அமெரிக்க அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது
    • ஐரோப்பிய நாடுகளை உக்ரைனுக்கு உதவ கேட்டு கொண்டார் ஆஸ்டின்

    2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் மற்றும் கட்டிட சேதங்கள் நடந்து, போர் தொடங்கி அடுத்த மாதத்துடன் 2 வருடங்கள் ஆக உள்ள நிலையிலும், போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது.

    அமெரிக்க அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனிடம் தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

    நேற்று ரஷியா, உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்; பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.


    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    2022ல் இந்த கூட்டமைப்பை அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் (70) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வரும் ஆஸ்டின், தனது வீட்டில் இருந்தபடியே "வீடியோ கான்ஃப்ரன்சிங்" வழியாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம், "போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவால் இனி நிதியுதவி அளிக்க இயலாது. உக்ரைனுக்கு உயிர் காக்கும் ராணுவ வான்வழி தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப உபகரணங்களை தந்து உதவவும், நிதியுதவி வழங்கவும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டு கொள்கிறேன்" என தனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தார்.

    அமெரிக்க உதவி கேள்விக்குறி ஆனதால், ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்ய போகின்றன என உக்ரைன் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

    • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
    • இதில் பங்கேற்க அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று டெல்லி வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

    இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரை வரவேற்றார்.

    • அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது

    இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை இஸ்ரேல் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பென்சில்வேனியா மாநில பிலடெல்பியாவில் பேசும் போது குறிப்பிட்டதாவது:

    இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர். பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறி அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய உள்ளது என நம்பிக்கை தெரிவித்தேன்.

    இவ்வாறு பைடன் கூறியுள்ளார்.

    • அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் இந்தியா வந்துள்ளார்.
    • லாயிட் ஆஸ்டினுடன் ராஜ்நாத் சிங் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு நேற்று வந்தார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அவரை முறைப்படி வரவேற்றார்.

    இதுதொடர்பாக அமெரிக்க மந்திரி லாய்ட் ஆஸ்டின் தனது டுவிட்டர் பதிவில், 'பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்துள்ளேன்' என பதிவிட்டிருந்தார். அவருக்கு டெல்லியில் முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா மற்றும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புக்கான தொடக்க நடவடிக்கைகள் மற்றும் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்பாட்டு ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சிகளை தொடருவது குறித்து பேசப்பட்டது.

    இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், டெல்லியில் எனது நண்பர் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்திட்ட விருப்பங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தோ- பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விஷயங்களை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

    • உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 59 கோடியைக் கடந்துள்ளது.
    • அமெரிக்காவில் கொரோனாவால் 9 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வாஷிங்டன்:

    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

    இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

    ×