என் மலர்
நீங்கள் தேடியது "Karthik Naren"
துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மாஃபியா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
`தடம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்', `சாஹோ' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்' மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.
குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
`அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் பிரச்சனா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
`துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக `நாடக மேடை' என்ற படத்தை இயக்குவதாக அறிவத்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது.
இந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் முன்னதாக அஞ்சாதே, முரண் உள்ளிட்ட படங்களில் வில்லத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரவம் என்ற இணைய தொடரில் நடித்து வருகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார். #Shriya #ShriyaSaran
நடிகை ஸ்ரேயா தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு...
நரகாசூரன் படத்தில் நடித்த அனுபவம்?
இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. இதுவரைக்கும் இதுபோன்ற கதையில் நடித்ததில்லை. படக்குழுவினர் அனைவரும் இப்படத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணி டீம் ஒர்க்காக வேலை பார்த்தோம்.
இயக்குனர் கார்த்திக் நரேன் பற்றி?
மிகவும் திறமையானவர். அவருடைய கதை, மற்றும் சொன்ன விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் பார்வையில் அவர் நினைக்கிறதை செய்து முடிப்பார். புதுமையான இயக்குனர். திரைக்கதையை திறமையாக திட்டமிட்டு அதை வரை படமாக வரைந்து இயக்கி இருக்கிறார். இவர் எனக்கான இடத்தை கொடுத்தார்.

நரகாசூரன் எதை சொல்ல வருகிறது?
இப்படம் திரில்லர் படம். ஆனால், திரில்லர் மட்டும் சொல்ல வரவில்லை. இதில் காதல், மாயகதை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.
இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம்?
இதில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் போல் அனைவரும் உணர்வீர்கள். என் நண்பர் ஒருவர் சோகமாக இருக்கும்போது, நான் பேசினால் அவர்கள் சிரித்து விடுவார்கள். அதுபோல், தான் இந்த கீதாவின் கதாபாத்திரம். கதையை படிக்கும் போது என்னையே பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தேன்.
இளம் இயக்குனர் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?
நிறைய அறிமுக இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குனர் படத்திலும் நடித்திருக்கிறேன். புதுமுகம், அனுபவம் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் கதை, திரைக்கதை எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதில் கார்த்திக் நரேன் கதை எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.
பெண் இயக்குனர்கள் பற்றி?
நிறைய பெண்கள் திரையில் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைக்கு பின்னாலும் அவர்கள் வர வேண்டும். பெண் விநியோகஸ்தர், பெண் கேமராமேன், இயக்குனர்கள் வர வேண்டும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் எப்போது பார்க்கலாம்?
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல படம், கெட்ட படம் அவ்வளவுதான். வலிமை மற்றும் புத்திசாலித்தனம் எனக்கு முக்கியம்.
அடுத்தடுத்த படங்கள்?
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Naragasooran
கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.
இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

தற்போது பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிம்புவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிம்பு அடுத்ததாக இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #STR34 #KarthikNaren
வெங்கட் பிரபுவுடனான சந்திப்புக்கு பிறகு, சிம்பு சமீபத்தில் `துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்தித்திருக்கிறார்.
சிம்பு - கார்த்திக் நரேன் இடையேயான சந்திப்பின் போது கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றை கூறியிருப்பதாகவும், சிம்பு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக `நாடகமேடை' படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். `நாடகமேடை' படத்தின் பணிகள் தாமதமாகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் முதலில் சிம்புவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிம்பு இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என அடுத்தடுத்து சிம்பு பிசியாக இருப்பதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனவே சிம்புவின் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' விரைவில் ரிலீசாக இருக்கிறது. #STR34 #KarthikNaren