என் மலர்

  நீங்கள் தேடியது "Kannamanayakkanur"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதான ரோட்டில் மதுக்கடை செயல்பட்டால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
  • மதுக்கடை அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், கோவிலும் உள்ளது.

  உடுமலை :

  உடுமலை கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை தொடங்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து, கண்ணமநாயக்கனூர், ஆண்டியகவுண்டனூர் கிராம மக்கள் சார்பில் திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து கல்லாபுரம் செல்லும் ரோட்டில், கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரதான ரோட்டில் மதுக்கடை செயல்பட்டால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அப்பகுதியில்விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவ்வழியாகவே நாள்தோறும் சென்று வர வேண்டும்.

  கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. புதிதாக மதுக்கடை துவங்க திட்டமிடப்பட்ட இடத்துக்கு அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், கோவிலும் உள்ளது. அருகிலேயே கல்லாபுரம் பிரதான ரோடு அமைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

  எனவே கிராம மக்கள் வாழ்வாதாரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில், புதிதாக டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கூடாது.இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இரு கிராம மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

  ×