என் மலர்

  நீங்கள் தேடியது "Kamaraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
  • விழாவில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி முள்ளக் காட்டில் காமராஜர் மக்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர் தலைமை தாங்கினார். மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், கோவில் தர்மகர்த்தாக்கள் சேகர், சின்னராஜ், காமராஜ் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  காமராஜர் மக்கள் சங்கத் தலைவர் கோகுல், செயலாளர் லிங்க பிரதீஷ், பொருளாளர் சரவணன், ரத்ததான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ்,செல்லத்துரை, ராபர்ட் ஜெயபால்,சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் கூட்டாக வரவேற்றனர்.

  சிறப்பு விருந்தினராக போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு கலந்துகொண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் 55 இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

  தொடர்ந்து முள்ளக்காடு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 250 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், முகேஷ் சண்முக வேல், மகாராஜன், பொன்ராம் மற்றும் காமராஜர் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெட்சண மாற நாடார் சங்கத்தினர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
  • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

  மதுரை

  திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க மதுரை கிளையில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

  இதில் தெட்சண மாற நாடார் சங்க துணைத்தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன் தலைமையில் நிர்வாக சபை இயக்குநர்கள் பி.எஸ்.கனிராஜ், எஸ்.ஏ. சிவபாலன், ஆர். தங்கவேல், எஸ்.கே. செல்லபாண்டி, ஆயுட்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காமராஜர் ஆட்சி சாதனை புகைப்படம் திறக்கப்பட்டது.
  • இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  மதுரை

  பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பாக மதுரை மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி. வரதராஜன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  இதையொட்டி காமராஜர் ஆட்சி காலத்தில் நடத்திய சாதனை நிகழ்வுகளை விளக்கும் வகையில் அவரது புகைப்படங்களை, மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ் திறந்து வைத்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
  • ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ரெயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் ெரயில்வேபீடர் ரோட்டில் உள்ள ராஜபாளையம் கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன் விழாவிற்கு தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினார்.நாடார் தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் செயலர் விஜயராஜன் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். உறவின்முறை செயலாளர் வெற்றி செல்வன், நாடார் நர்சரி மற்றும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலர் ஆத்தியப்பன், பொருளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், உதவி செயலாளர் நாகரத்தினம், இணை தலைவர் மதிபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் சிறப்பு அழைப்பாள ர்களாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, நாடார் மகாஜனசங்க விருதுநகர் மாவட்ட துணைதலைவர் ஆதிநாராயணகுமார் கலந்து கொண்டு பேசினார்கள்.

  பிளஸ்-2 மாணவி நிவேதாதேவி தன்னலமற்ற பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்று சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். உறவின் முறை நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

  இலக்கிய மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் உதவி தலைமையாசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

  முன்னதாக பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள், தேசிய மாணவர்படை,நாட்டு நலபணிதிட்டம்,பாரத சாரண-சாரணியக்கம், இளஞ்செ ஞ்சிலுவை சங்க உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு ஊர்வலம் நடைபெற்றது.

  ஊர்வலத்தின் போது பழைய பேருந்துநிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு உறவின்முறை நிர்வாகஸ்தர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் காந்திசிலை ரவுண்டானா, பழைய பேருந்துநிலையம், ெரயில்வேபீடர்ரோடு வழியாக பள்ளியை சென்றடைந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோழவந்தான் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  சோழவந்தான்

  மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருந்தலைவர் காமராஜ ரின் 120-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகடை வீதியில் உள்ள அவரது சிலைக்கு, நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் பி.ராஜகுரு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் அழகர்சாமி, ஜெயராஜ், சீனி வாசன், துரைபாண்டி யன், ஜெயசேகர், பாண்டி யராஜன், ஐஸ்ஜெயராஜ், மீனா, காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைதலைவர் லதாகண்ணன், வார்டு உறுபினர்கள் குருசாமி, சத்யபிரகாஷ், முத்துலட்சுமி சதீஸ் மற்றும் பேட்டை பெரியசாமி, பேரூர் செயலாளர் முனியாண்டி, வார்டு செயலாளர் நாகேந்திரன் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர் விரும்பராஜன் தலைமையில் பேரூர் செயலாளர்கள் திரவியம், வாடிப்பட்டி மதன், மதுரை தெற்கு மாவட்ட துணைசெயலாளர் வீரமாரிபாண்டியன், மாவட்ட விவசாய அணி முள்ளைசக்தி மற்றும் வழக்கறிஞர் காசிநாதன், மீனாட்சிசுந்தரம் ஜெயராமன், தவமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

  இதே போல நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி. பி. போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
  • காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர்.

  மதுக்கூர்:

  முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனா காவி புலிப்படை, தமிழக இந்து பரிவார் சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு அவருடைய ்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

  சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி பி போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார். காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர். அவருடைய அரசியல் பொது வாழ்க்கையில் தூய்மையாக இருந்தவர்.

  அவருடைய காலகட்டங்களிலே இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்காமல் மதிய உணவு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி கல்வியை கற்க சொன்னவர்.

  இன்று கல்வி வியாபாரம் ரீதியாக செயல்படுகிறது உடனடியாக தனியார் பள்ளிகளில் வசூல் செய்யக்கூடிய அதிக அளவு தொகை குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஜாதி அடிப்படையில் கணக்கெடுக்காமல் இந்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் காமராஜரின் புகழ் என்றும் எப்போதும் அவருடைய கல்வி, ஏழை எளிய மக்களுடைய சார்ந்து அவருடைய நினைவினை போற்றுகிறோம் வணங்குகிறோம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் போட்டிகள் நடந்தன.
  • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  மதுரை

  மதுரை நாடார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

  இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் திருவுடப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

  பள்ளித் துணைத்தலைவர் பாஸ்கரன் பள்ளி பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச் செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர்-விழா அமைப்பாளர் முத்துசெல்வம் காமராஜ பிறந்த நாள் விழா போட்டிகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.

  இந்த விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, நாடகப்போட்டி, குழு நடனம் மற்றும் ரங்கோலிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 46 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பொது அறிவு வினா கேட்கப்பட்டு உடன் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தினை உணர்த்தும் வண்ணம் மதிய உணவு வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்ட நாடார் சங்கம் சார்பில் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா, சங்கத்தின் 28-வது ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது.

  விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

  தமிழகத்தை ஆண்ட காமராஜர் மக்களின் மனதை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சி காலத்தில் தான் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டது. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திய காமராஜர் தற்போதும் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.

  பட்டதாரி இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் கல்வி அறிவை உயர்த்த காரணமாக இருந்தவர் கமராஜர். மேலும் இங்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். இதனால் தமிழகமே விவசாய பூமியாக செழிக்கும். ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மக்களின் மன நிலையை அறிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

  இந்த காலத்து இளைஞர்களுக்கு செல்போன் மட்டுமே உறவாக உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்க வேண்டும். இளைஞர்கள் தங்களின் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் நாம் முன்வந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமராஜர் பிறந்தநாளை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இலவச இ-சேவை மையமும் தொடங்கப்பட்டது.
  தஞ்சாவூர்:

  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்துக்கு மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ராஜ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் குணசேகரன், கோட்ட தலைவர் கதர்வெங்கடேசன், துணைத்தலைவர்கள் முருகன், வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் முருகேசன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், டி.பி.எம்.ராஜூ, பாரத்மோகன், பூக்கடை குணசேகரன், சாந்தாராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர துணைத்தலைவர் செந்தில்நா.பழனிவேல் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அலாவுதீன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், முன்னாள் கவுன்சிலர் குலோத்துங்கன், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் ஆரோக் கிய சாமி, மாவட்ட பிரதிநிதி செல்வம், மாநகர பிரதிநிதி செல்வராஜ், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அபிஷேக்மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளையும் வழங்கினர். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச இ-சேவை மையமும் தொடங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வயலூர் ராமநாதன், வர்த்தக பிரிவு தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் பூபதி, மணிவண்ணன், ராம்பிரசாத், திருஞானம், தர்மராஜன், அய்யாறு, சேட்டு, அருண், சதா.வெங்கட் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச்செயலாளர் யாதவ்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

  தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சியில் உள்ள மாருதிநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள்விழா அடைக்கலசாமி தலைமையில் முருகரெத்தினவேல், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சாகுல்அமீது, சுலோச்சனா, மனோகரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் போட்டோவிஜயன், நிர்வாகிகள் பாஸ்கரன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.
  உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.

  காமராஜர் வாழ்ந்த விதத்தை, இப்பொழுது நினைத்தால் நம்ப முடியாத ஓர் அதிசயக் கனவு போல் கண் சிமிட்டுகிறது. காந்தியத்தைக் காதலித்து, காந்தியத்தையே கைப்பிடித்து, காந்தியத்திற்காகவே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளில் கண்மூடிய ‘அத்வைதி’ காமராஜர்.

  காமராஜரை நம் மக்கள் ஏன் வணக்கத்திற்குரிய தலைவராக வழிபடுகிறார்கள்? அவருடைய வரலாறு படைத்த ஒன்பதாண்டு ஆட்சிச் சாதனைகளுக்காகவா? ஊழலின் நிழல்படாத உயரிய நிர்வாகத்தை அவர் உருவாக்கித் தந்ததற்காகவா?

  அறியாமை இருட்டில் அழுந்திக் கிடந்த பாமரர்களின் இதயத்தில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காகவா? ஆறுகள் ஓடும் இடங்களில் எல்லாம் அணைகளை எழுப்பி விவசாயத்தை வளர்த்ததற்காகவா? தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தலைநிமிரச் செய்ததற்காகவா?

  இவையெல்லாம் அவருடைய தனிப்பெரும் ஆட்சி சாதனைகள்தான். ஆனால் எளிமையும், உண்மையும், நேர்மையும் நிறைந்த அவருடைய தன்னலமற்ற வாழ்க்கைதான் என்றும் வணக்கத்திற்குரியது.

  காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக 1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்ற பின்பும் சென்னை திருமலைப்பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வசித்தார்.

  அவருடைய அன்னையார், “நீ இருக்கும் வீட்டில் ஒரு மூலையில் உனக்கு எந்தச் சிரமமும் தராமல் உன் முகத்தைப் பார்த்தபடி எஞ்சிய காலத்தைக் கழித்து விடுகிறேன்” என்று கண்ணீர் ததும்பச் சொன்ன போதும் அவருடைய கோரிக்கையை மறுதலித்துவிட்டவர் காமராஜர்.

  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இரா.கிருஷ்ணசாமி நாயுடுவிடம், “தந்தையில்லாப் பிள்ளையாய் என் தாயார் எவ்வளவு சிரமப்பட்டு என்னை வளர்த்தார்கள் என்பதை நானறிவேன். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால் அவரைப் பார்க்க அடிக்கடி பத்து பேர் வருவார்கள். அத்தையைப் பார்க்க வந்தேன், ஆத்தாவைப் பார்க்க வந்தேன் என்பார்கள். ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, முதல்-அமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான், அம்மா ஊரிலேயே இருக்கட்டும் என்கிறேன். அவர்கள் தேவைக்குத்தான் மாதம் ரூ.130 அனுப்பி வைக்கிறேனே” என்று சொன்னவர் காமராஜர்.

  முற்றும் துறந்த ஆதி சங்கரரும், பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு, தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொது வாழ்க்கைத் தூய்மைக்காகத் தள்ளி வைத்த அதிசயமான தலைவர் காமராஜர்.

  காமராஜர் தன் அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். தலித்துகளின் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரன் என்பவர் அந்த ஏழு அமைச்சர்களில் ஒருவர். சமூக நீதியைச் செயற்படுத்துவதற்காக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காமராஜர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சரிடம் அறநிலைத்துறையை அளித்தார்.

  “ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை அமைச்சராக்கிவிட்டால் எந்த நாலாஞ் சாதியை உள்ளே விடமாட்டோம்னு சொன்னார்களோ, அதே நாலாஞ் சாதிக்காரருக்குப் பரிவட்டம் கட்டிப் பூரண கும்ப மரியாதையுடன் அவர்கள் பணிவோடு கோவிலுக்குள் அழைத்துப் போவார்கள் என்றுதான் பரமேஸ்வரனை நான் இந்து அறநிலைத்துறைக்கு அமைச்சராக்கினேன்” என்று காமராஜர் வாய்வேதம் பேசாமல் சமூக நீதிக்குச் செயல் வடிவம் தந்த தலைவர்.

  ஒரு நாள் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் காமராஜரைச் சந்தித்த போது, ‘உங்கள் ஆட்சிச் சாதனைகளை என்றும் மக்கள் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு நியூஸ் ரீல் எடுத்தால் நல்லது’ என்றார்.

  ‘நாம் ரோடு போட்டோம். அதன் மேல்தான் மக்கள் நடக்கிறார்கள். பள்ளிக்கூடம் கட்டினோம். அதில்தான் அவர்களுடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில்தான் விவசாயம் செய்கிறார்கள். இதில் வேறு, விளம்பரப் படம் எதற்கு வீண் செலவு?” என்று கவிஞரின் கருத்தை மறுத்தார் கர்மவீரர்.

  “மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதுமய்யா! தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறார் போல் நல்ல செய்திப் படம் எடுத்து விடலாம்” என்று கவிஞர் சொன்னதும், “அடப்பாவி படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் ‘நியூஸ் ரீல்’ எடுக்கச் சொல்கிறாயா? முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு” என்று கொதித்தார் அந்தக் கருப்புக் காந்தி. அப்படி ஒரு தலைவரை இப்பொழுது பார்க்க முடியுமா?

  விருதுநகரில் சுலோச்சன நாடார் தெருவில் உள்ள சாதாரண வீட்டில் தான் காமராஜரின் தாயும் தங்கையும் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில் குடிநீர்க் குழாய் இல்லை. அடுத்த தெருவில் இருந்த ‘முனிசிபாலிடி’ குழாயில் வரிசையில் நின்று தான் காமராஜரின் தங்கை நாகம்மை தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

  உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மஜீத் இந்த நிலையை அறிந்து காமராஜர் வீட்டில் குழாய் இணைப்புக்கு வழிசெய்துவிட்டுக் கோட்டைக்குத் திரும்பினார்.

  இதைக் கேள்வியுற்ற காமராஜர் அமைச்சர் மஜீத்தை அழைத்து, “என் வீட்டுக் குழாய் இணைப்புக்கு முறைப்படி நான் முனிசிபாலிடியிடம் விண்ணப்பம் கொடுத்தேனா? அதற்கு 18 ரூபாய் கட்டணம் கட்டினேனா? எப்படி வந்தது குழாய் இணைப்பு? உங்களை நான் நாட்டைப் பார்க்கச் சொன்னேனா, என் வீட்டைப் பார்க்கச் சொன்னேனா? 24 மணி நேரத்திற்குள் அந்தக் குழாய் இணைப்பு துண்டிக்கப்படவேண்டும். பதவியைப் பயன்படுத்தி அவரவர் வீட்டு வேலையைப் பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்” என்று கடும் கோபத்துடன் கண்டித்தார்.

  உடனே குழாய் இணைப்பு அறுபட்டது. மீண்டும் முதல்வரின் தங்கை குடத்துடன் அடுத்த தெருவில் தண்ணீருக்காக வரிசையில் நின்றார். பெருந்தலைவரின் வாழ்க்கை முறை இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

  நாட்டு விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்; பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்; ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர்; நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்; ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்; ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசின் தலைவர்; இரண்டு முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழர். இத்தனை பெருமைகளுக்குப் பின்பும் தனிவாழ்வில் அந்த பெருந்தலைவனுக்கு மிஞ்சியது 60 ரூபாய்; பத்து கதர் வேட்டி சட்டை.

  காமராஜர் கண் மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்திய காரை கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.

  இன்று (ஜூலை 15-ந் தேதி) காமராஜர் பிறந்த தினம். 
  ×