search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadambur raju"

    • நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை.
    • விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிநகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள். பட்டியலிட அண்ணாமலை தயாரா?. பா.ஜ.க. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை இதுவரை ஒன்றை கூட தீர்க்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது.

    நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்.எல்.சி. நிலம் எடுப்பு தொடர்பாக மத்திய அரசு பாராமுகம் காட்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும். விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த விளம்பரம் தமிழகத்தில் எடுபடாது. அதே போல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் இந்திராகாந்தி, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.


    தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. நாங்கள் தற்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அ.தி.மு.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அகிலாண்டபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்ட பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், கிளைச் செயலாளர்கள் பன்னீர்குளம் முத்துப்பாண்டி, இசக்கிதுரை, சத்திரப்பட்டி ஞானசாமி, அகிலாண்டபுரம் லெனின், சின்னத்துரை, மாடசாமி, கரிசல்குளம் ராதாகிருஷ்ணன், சாலைப்புதூர் மகாராஜன், சிவஞானபுரம் மாடசாமி மற்றும் கடம்பூர் துரை, விஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 96-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது.
    • அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை.

    கோவில்பட்டி:

    பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி தர்மத்தினை மீறி செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எரித்தனர்.

    இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று.

    அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர். அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள்.

    கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.

    இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம். ஒன்றிய அரசு என்று கூறும் தி.மு.க.விற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை. அ.தி.மு.க. வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள்.

    இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர்.

    96-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    • கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவுடைதங்கம் (வயது 75). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவி இறந்து விட்டார்.

    ஆவுடைதங்கத்தின் தங்கை பத்மாவதி (65). இவருக்கு திருமணமான சில ஆண்டுகளிலே கணவன் இறந்து விட்டார். இதன் காரணமாக ஆவுடைதங்கம் தனது தங்கை பத்மாவதியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

    இதனை தொடா்ந்து விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆவுடைதங்கம், பத்மாவதி ஆகியோருக்கு புத்தாடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்களை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பதற்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பும் வர உள்ளது. அதன் பிறகு இப்பிரச்சனைகள் எல்லாம் நிறைவு பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று நிலைநிறுத்தப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் சென்று கனிமொழி எம்.பி. பேசி வந்தார். அப்போதைய அ.தி.மு.க. அரசு பாரபட்சம் பார்க்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம். அந்த ஒரு சம்பவத்தை வைத்து 2021-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மையக் கருத்தாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்தனர்.

    சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது.
    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

    தூத்துக்குடி :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே அவர் பேசியுள்ளார். அவர் இருக்கும் போதுதான் உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. ஆகவே தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

    அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொன்ன மாதிரி பா.ஜ.க. தனக்கு மரியாதை தருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

    டி.டி.வி. தினகரன், சசிகலா என யாருடன் வேண்டுமானாலும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அது அவரது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருவது தீப்பெட்டி தொழில்.
    • சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்

    கோவில்பட்டி:

    தென் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருவது தீப்பெட்டி தொழில். நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இதில் 90சதவீதம் பேர் பெண்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். மூலப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பல்வேறு நிலைகளை தீப்பெட்டி தொழில் சந்தித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ரூ10-க்கு விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, முன்னாள் அமைச்சரும், எம்.எல். ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.

    மேலும் சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்தார்.

    அப்போது தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நேஷனல் சிறு தீப்ங உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் கோபா ல்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ், சாத்தூர் சங்க கிளை தலைவர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழுவின் மையக் கருத்தாக இருந்தது ஒற்றைத்தலைமை தான்.
    • எப்போது பொதுக்குழு கூட்டினாலும் பொதுக்குழுவின் மையக்கருத்து ஒற்றை தலைமை தான். மெஜரிட்டி இருந்தால் ஓ.பி.எஸ். நிரூபித்துக்கொள்ளலாம்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், தற்பேதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழுவின் மையக் கருத்தாக இருந்தது ஒற்றைத்தலைமை தான்.நீதிமன்ற தீர்ப்புகள் மாறுபட்ட தீர்ப்பாக வரலாம். அதனை இறுதி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.எங்களுடைய கொள்கை இனிமேல் ஒற்றை தலைமை தான்.

    தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வது அல்லது பொதுக்குழு கூட்டுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.எப்போது பொதுக்குழு கூட்டினாலும் பொதுக்குழுவின் மையக்கருத்து ஒற்றை தலைமை தான். மெஜரிட்டி இருந்தால் ஓ.பி.எஸ். நிரூபித்துக்கொள்ளலாம்.

    பொதுக்குழுவில் ஒற்றை தலைமைக்கு போட்டி போடுவதை விட்டு நீதிமன்றம் சென்றது உகந்தது கிடையாது.கட்சிகள் பற்றி நீதிமன்றம் கருத்து சொல்ல முடியும், சில தீர்ப்புகளை சொல்லமுடியும். ஆனால் அது நிரந்தரம் கிடையாது.

    கட்சியை வழி நடத்துவது கட்சி நிர்வாகிகள் தான். ஒற்றைத்தலைமை அது பொதுச்செயலாளர் என்ற கருத்தில் மாற்றமில்லை. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். இருவரும் சேர்ந்து பொதுக்குழு கூட்டுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள்.
    • ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., இன்று தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    யார் யாருடன் (டி.டி.வி.-பா.ஜ.க) இணைந்தாலும் அ.தி.மு.க. தனித்தன்மையுடன் இருக்கும். எங்களுடைய நிலைப்பாட்டில் எங்கள் பயணம் சீராக செல்லும்.

    அ.தி.மு.க. தலைமை ஏற்று டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணி வர விரும்பினால் அதை தலைமை தான் முடிவு செய்யும். தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை.

    இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊர் தோறும் கிராம சபை கூட்டம் நடத்தினர். ஆனால் தற்பொழுது அப்படி எதுவும் செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் கூட கிராம சபை கூட்டத்திற்கு செல்வதில்லை. தாழ்த்தப்பட்ட, பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுவது ஜனநாயகத்திற்கு அவமதிப்பு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவ்வாறு செய்பவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள். ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை. அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ் கூறுவதால் அவருக்கு தான் காலம் வீணாகி வருகிறது.

    அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்.-க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. அதனை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதனை எதிர்கட்சியாக நாங்கள் சுட்டிகாட்டுவோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் அனிதா என்ற மாணவி இறப்பினை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. அனிதா இறப்பு என்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஆனால் இன்றைக்கு 11 மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

    அவர்களை போன்று இறப்பினை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். மக்கள் பிரச்சினைகளை தினந்தோறும் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிகளை குவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #kadamburraju #admk

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் நல திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் மணிராஜ் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு காயல்பட்டினத்தில் 5 இடங்களில் ரூ. 90 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டியும், ரூ 1.90 கோடி செலவிலான சாலை பணிகள், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பயோகேஸ் திட்டம், நகராட்சியில் சேவை குறைபாடுகள் மற்றும் ஆலோசனை பதிவு மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    காலத்திற்கேற்ப மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை உணர்ந்து நிறைவேற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக இந்த ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நோன்பு காலங்களில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தையும், ஹஜ் மானியம் அளிக்கப்படும் திட்டத்தையும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயல்படுத்தினார். ஜெயலலிதா வழியில் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, தாசில்தார் தில்லைபாண்டி , சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், பொறியாளர் சுரேஷ், நகராட்சியின் முன்னாள் தலைவர்கள் வாவு செய்யது அப்துர்ரகுமான், வகீதா, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் அபுல்ஹஸன் கலாமி, வாவு சுலைமான், அமானுல்லா, நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது இப்ராகிம், பேரவை செயலாளர் அன்வர், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்ற நிலைபாட்டில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. இதுபற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குளம்பிப்போய் உள்ளார். அவர் அந்த தீர்ப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் வலுவான மெகா கூட்டணியாக அமைந்து வெற்றிகளை குவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kadamburraju #admk

    தேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும் என கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ சவால் விடுத்துள்ளார். #kadamburraju #kamal #parliamentelection

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு அறிவித்த பட்ஜெட் மணம் கொண்டது என டி.டி.வி. தினகரன் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வீடியோ பைரசியை ஒழிக்க முடியும்.

    திராவிட இயக்கங்களை பற்றி கருத்துக் கூற நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. திராவிட இயக்கத்தின் வரலாறு, பாரம்பரியத்தை அறியாதவர். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறினார்.

    தேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யாரை ஊரை விட்டு போகிறார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும். கமல்ஹாசன் நிலை இல்லாத கருத்து கொண்டவர்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #kadamburraju #kamal #parliamentelection

    சட்டசபையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது. எனவே, தமிழக அரசை குறை கூற வைகோவுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #MinisterKadamburRaju #ADMK #Vaiko
    கோவில்பட்டி :

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    புயல் நிவாரண நிதியை பெறுவதற்கு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாது. இந்திய நாட்டில் தமிழகமும் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணரும்.

    சட்டசபையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது. ஆனால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசு பற்றி குறை கூறிவருகிறார். அவருக்கு தமிழக அரசை பற்றி குறை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தபோது, இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவரைப் போல் நேரத்திற்கு தகுந்தார் போன்று மாற்றி பேச முடியாது.



    ஒரு வழக்கில் உண்மை தன்மை இல்லை என்றாலோ, போதிய ஆதாரம் இல்லை என்றாலோ அந்த வழக்கை காவல் துறையினர் திரும்ப பெறுவது வழக்கம். அதேபோன்று ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வழக்கை ரத்து செய்து இருக்கலாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரை பசுமை தீர்ப்பாயம் அனுப்பிய குழு வழங்கிய அறிக்கையில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அ.தி.மு.க.வை பொருத்தவரை தேர்தல் வரும்போது வியூகம் அமைத்து அதனை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #ADMK #Vaiko
    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அனுப்பி வைத்தார். #ADMK #kadamburRaju
    மதுரை:

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
    ×