search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Java Island"

    • 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
    • சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜகார்த்தா:

    கடந்த மாதம் 21ந் தேதி இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜாவா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


    மேற்கு ஜாவா மற்றும் மத்திய ஜாவா மாகாணங்களுக்கு இடையே உள்ள பஞ்சார் நகருக்கு தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கத்தில் பெருமளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

     ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என தெரிய வந்து உள்ளது. 151 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதியில் 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

    • நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    • ஜாவா நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்துக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது.

    நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    முதல் கட்டமாக 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது. நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தோனேசியாவின் ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய செய்தியைக் கேட்டு வருத்தம் அடைந்தேன். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா இந்தோனேசியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன.

    மதிய நிலவரப்படி 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்தார். நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×