search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jamabandhi"

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எஸ்.டி பிரிவிற்கு மாற்றி அதற்கான சாதிசான்றும் வழங்கியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு தினத்தை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்தரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி, பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார், தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை மற்றும் ரவி, வேளாண் துறை உதவி இயக்குனர் சரவணன், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் உள்பட வருவாய்த்துறை தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ரூ 1.33 கோடி மதிப்பில் 317 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை தையல் எந்திரம் வேளாண் உபகரண கருவிகள் முதியோர் உதவித்தொகை மற்றும் இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர்களுக்கு எஸ்.டி பிரிவுக்கான வகுப்பு சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:-

    தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை பார்த்து திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கின்றனர். எல்லோருக்கும் எல்லா உதவிகளும் கிடைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கு நிகரான உதவி கூட சாதாரண கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொள்கையாக உள்ளது. மரக்காணம் பகுதியில் தற்போது பறவைகள் சரணாலயம், பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை, மீனவர்கள் நலம் கருதி மீன்பிடி துறைமுகம் மற்றும் மீனவர் கிராமங்களில் மீன் தளம் போன்றவை பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நரிக்குறவர் மக்கள் தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எஸ்.டி பிரிவிற்கு மாற்றி அதற்கான சாதிசான்றும் வழங்கியுள்ளார். இதேபோல் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையை நவீன முறையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரியை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோட்டாட்சியர் புஷண் குமார் தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்
    • 3 நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 396 மனுக்கள் பெறப்பட்டது.

    குன்னூர்,

    குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் புஷண் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கேத்தி, அதிகரட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர்.

    முன்னதாக குன்னூர் கோட்டாட்சியர் புஷண் குமார் தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

    3 நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 396 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குன்னூர் கோட்டாட்சியர் புஷண் குமார் தெரிவித்தார். அவருடன் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அரியலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணபட்டது
    • 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில், 68 கிராமங்களுக்கு நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 1,082 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 552 மனுக்கள் விசாரணை செய்து தீர்வு காண அனுப்பப்பட்டுள்ளது. தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பசுபதி, வருவாய் ஆய்வாளர்கள் முருகன், கவிதா, வனிதா, விஜயா, வசந்தா, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார், சீனிவாசன், ராஜ்குமார், ராயர், தலைமையிடத்து நிலஅளவை பிரிவு அலுவலர் வெற்றிசெல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஜமாபந்தி நிறைவு பெற்றதை தொடர்ந்து, விவசாயிகள் மாநாடு நடைபெற்றது, ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பொதுமக்களிடமிருந்து 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் 1432 ம் பசலி ஆண்டுக்கான தீர்வாய கணக்கு ஜமாபந்தி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலராக புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) மாரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கோட்ட கலால் அலுவலர் ஜெயபாரதி, கலால் அலுவலக மேலாளர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் மலையூர் சரகத்திற்கு உட்பட்ட வட்டங்களுக்கும், இரண்டாம் நாள் கறம்பக்குடி சரகத்திற்கு உட்பட்ட வட்டங்களுக்கும் நடைபெற்றது.

    அப்போது பொது மக்களிடமிருந்து 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜமாபந்தி அலுவலர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஜமாபந்தி நிறைவு நாளான குடிகள் மாநாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 72 பேருக்கு பட்டாக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 12 பேருக்கு இ பட்டா மற்றும் 2 பேருக்கு புலப்பட நகல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சிய ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ரவிக்குமார், துணை வட்டாட்சியர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஜமாபந்தி நிகழ்ச்சியில் 751 மனுக்கள் பெறப்பட்டு அதில் 319 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    துறையூர்,


    திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் மாதவன் தலைமை வகித்தார். வருவாய் வட்டாட்சியர் வனஜா முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் 751 மனுக்கள் பெறப்பட்டு அதில் 319 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 398 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர்கள் முருகன், பழனிவேல், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அகிலா, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர்கள் முத்து, செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வன், வட்டத் துணை ஆய்வாளர் ஸ்ரீராம்குமார் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் நேரடி விசாரணை மேற்கொண்டார்
    • மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நாளில் தா.பழூர் உள்வட்டம், இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்த நல்லூர் உட்பட), தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய 15 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    இவர்களுக்கு அன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் மீதமுள்ள 260 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் துறை துணை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூரில் ஜமாபந்தி நடந்தது.
    • சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.

    முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டம் மற்றும் தெற்கு உள்வட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் தீர்வாய தணிக்கையின் போது வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் சுரேஷ், வட்ட செயலாளர் பூ முருகன், வட்ட பொருளாளர் அய்யப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறையினர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
    • வருகிற 22-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனும் வருவாய் கணக்குத் தீர்வாயம் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகலெட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி கோட்ட்டாசியர் அர்ச்சனா பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    94வருவாய் கிராமங்களை கொண்ட சீர்காழி வட்டத்தில் முதல் நாள் ஓலையாம்புத்தூர், புத்தூர், மாதிரவேளூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.

    இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைளுக்காக 82மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    • வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆதனூர், கருப்பம்புலம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் புஷ்பவனம், தேத்தாக்குடி வடக்கு, செம்போடை, குரவப்புலம், ஆதனூர், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

    இதில் ஆதரவற்ற விதவை சான்று கோரி விண்ணப்பித்திருந்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ரேகா தேவி என்பவருக்கு உடனடியாக ஆதரவற்ற விதவை சான்றை கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் வழங்கினார்.

    அப்போது தாசில்தார் ஜெயசீலன், வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவியரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 55 கோரிக்கை மனு பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஜமாபந்தி முகாமில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 55 கோரிக்கை மனு பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் நீதியியல் உமாரம்யா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் (சபா.தி) சுமதி, வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், துணை தாசில்தார் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு: 302 பயனாளிகளுக்கு ரூ.1. 31 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
    • மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சி வட்டத்தில் 1431-ம் பசலி ஜமாபந்தி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

    மேற்படி ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று செஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனி வரவேற்றார்.

    இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் 71 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணை, 14 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 43 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 20 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டை, 45 நபர்களுக்கு பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை மற்றும் 9 பயனாளிகளுக்கு விவசாயத் துறை தோட்டக்கலை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், தனி தாசில்தார் நெகருன்னிசா, துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், கீதா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யம் ஆர்.டி.ஓ பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டார்.
    • ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில்கடந்த 7ஆம் தேதி முதல்வேதாரண்யம் ஆர்.டி.ஓ. பெளலின் தலைமையில்ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஜமாபந்தியில் நேற்று வரை 244மனுக்கள் பெறப்பட்டு அதற்கான உடனடி திர்வும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் தாணிக்கோட்டகம் ,வாய்மேடு, தென்னடார் பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது இதில் 55 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுமுதியோர் உதவித்தொகை வழங்க ப்பட்டது.வழக்கமாக கோட்டாட்சி யர்கள் பொதுமக்களிடம் மனுக்களை நாற்காலியில் அமர்ந்தபடி தான் வாங்கி வருவது வழக்கம் ஆனால் வேதாரணியம் கோட்டாட்சியர் பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்ப ளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று

    கொண்டு பெற்றுக் கொண்டு இருக்கும் போது தென்னடார் ஊராட்சி மனுக்கள் பெறும் நேரம் வந்தது அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல்நிலை சரி இல்லாமல் நடந்து வந்தார்இதை பார்த்த கோட்டாட்சியர் பெளலின் உடனடியாக அவரை நாற்காலியில் அமரச் செய்தார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அமர மறுத்து விட்டார் பிறகுகோட்டாட்சியர் பெளலின் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல் நிலையை கருத்தில் கொண்டுவற்புறுத்தி அவரை தனது அருகே நாற்காலியில் அமரச் செய்தார்.

    பிறகுதான் தான் நின்று கொண்டே பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார் ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மனுக்களை பெற்றுகிராம நிர்வாக அலுவலரைவீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் இந்த மனிதாபிமான செயலை வருவாய்த்துறை ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்ஜமாபந்தி முகாமில் தாசில்தார் ரவிச்ச ந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேதையன் மண்டலதுணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.

    ×