search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaguar Land Rover"

    • இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலின் விலை ரூ. 2 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்.யு.வி.-யின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 4.4 லிட்டர் வி8 என்ஜின் 626 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 290 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.


     

    சக்திவாய்ந்த என்ஜின் மட்டுமின்றி, இந்த எஸ்.யு.வி. மாடலின் லோயர் பாடி ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்பன் ஃபைபர் டிப் கொண்ட குவாட் டெயில்பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கேபின் பகுதியில் SV சார்ந்த பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட் சீட்கள், கார்பன் ஃபைபர் பேக் உள்ளது.

    இதில் உள்ள பேக்ரெஸ்ட் மற்றும் கியர் லீவர்களில் இலுமினேட் செய்யப்பட்ட SV லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரேன்ஜ் ரோவர் SV மாடல் லம்போர்கினி உருஸ், ஆடி RSQ8 மற்றும் ஆஸ்டன் மார்டின் DBX போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • 60 சதவீத விற்பனை எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்க வேண்டும் என ஜாகுவார் லேன்ட் ரோவர் இலக்கு.
    • எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்கள் பிரிட்டனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

    ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு நவம்பர் மாதம் துவங்கும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த தசாப்தத்தின் இறுதியில் ஜாகுவார் மாடல்களில் இருந்து 100 சதவீதமும், லேன்ட் ரோவரில் இருந்து 60 சதவீத விற்பனை எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்க வேண்டும் என்று ஜாகுவார் லேன்ட் ரோவர் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. ரி-இமாஜின் யுக்தியின் கீழ் ஜாகுவார் நிறுவனம் 2025-ம் வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக முடிவு செய்து இருக்கிறது.

     

    2030-ம் ஆண்டு லேன்ட் ரோவர் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற திட்டமிட்டுள்ளது. லேன்ட் ரோவர் பிரான்டின் முதல் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அனைத்து எலெக்ட்ரிக் லேன்ட் ரோவர் மாடல்களும் புதிதாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.

    வரும் ஆண்டுகளில், இதே பிளாட்ஃபார்ம் மற்ற ஜாகுவார் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளன. அனைத்து எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல்களும் பிரிட்டனில் உள்ள வால்வெர்ஹாம்ப்டன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதே ஆலையில் எலெக்ட்ரிக் டிரைவ் யூனிட்கள் மற்றும் பேட்டரி பேக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    அடுத்த ஆண்டு சர்வதேச விற்பனை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இவை முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன. அதன் படி இந்திய பயனர்களும், சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்கிட முடியும்.

    • ஜாகுவார் நிறுவனத்திற்கு என பிரத்யேக லோகோ ஒன்று இருந்ததே இல்லை.
    • லேண்ட் ரோவர் பிராண்டு தொடர்ந்து நிறுவனத்தின் டி.என்.ஏ.-வில் மிகமுக்கிய அங்கமாக தொடரும்.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் பெயர் ஜெ.எல்.ஆர். (JLR) என்று மாற்றப்படுகிறது. புதிய லோகோ மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் JLR என்ற எழுத்துக்கள் மினிமலிஸ்ட் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இது ஜெ.எல்.ஆர். வாகனங்கள் மற்றும் விற்பனை மையங்களின் ஸ்டைலிங்கை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ஜாகுவார் நிறுவனத்திற்கென பிரத்யேக லோகோ ஒன்று இருந்ததே இல்லை. மாறாக ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளுக்கென தனி லோகோக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. இவை எந்த கார்களிலும் இடம்பெறவில்லை.

    புதிய லோகோவை அறிமுகம் செய்த ஜெ.எல்.ஆர்., "லேண்ட் ரோவர் பிராண்டு தொடர்ந்து நிறுவனத்தின் டி.என்.ஏ.-வில் மிகமுக்கிய அங்கமாக தொடரும். நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஓவல் வடிவ பேட்ஜ், வாகனங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும்," என்று தெரிவித்து இருக்கிறது.

    டிஃபெண்டர், ரேன்ஜ் ரோவர் மற்றும் டிஸ்கவரி மாடல்களுக்கு டிரஸ்ட் மார்க்-ஆக (TrustMark) லேண்ட் ரோவர் உருவெடுக்கும் என்று மூத்த அதிகாரியான கெரி மெக்கோவென் தெரிவித்துள்ளார்.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 19 லேண்ட் ரோவர் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் இலவசமாக சரிசெய்து தரப்பட இருக்கின்றன.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களின் கிராஷ் சென்சார் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யவில்லை எனில் மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது. 

    இதனால் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன. 

     ரேன்ஜ் ரோவர்

    இந்த கோளாறு காரணமாக காரின் முன்புற கிராஷ் சென்சார் செயலிழக்கலாம். இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்களும் சரியாக இயங்காமல் போகும். முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் ஏர்பேக் சரியாக செயல்படாது. இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தி விடும்.

    இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் தற்போது கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது. 
    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது.



    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் லேண்ட் ரோவர் ஸ்போர்ட் எஸ்.யு.வி. காரை புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த என்ஜின் எஸ். எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. உள்ளிட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ட்ரிம்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 292.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடலுக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய என்ஜினுடன் அறிமுகமாகி இருக்கும் 2019 மாடல் மேலும் அதிகளவு வாடிக்கையாளர்களை கவரும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்தார்.



    என்ஜின் தவிர இந்த மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த வாகனத்தில் எல்.இ.டி. டி.ஆர்.எல்., முன்புறம் கருப்பு நிற கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கேரக்டர் லைன் பொனெட் முதல் காரின் பின்புறம் வரை வழங்கப்படுகிறது.

    இத்துடன் பானரோமிக் சன்-ரூஃப், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் இன்டராக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே (ஹெச்.யு.டி.) மற்றும் ஜாகுவாரின் டச் ப்ரோ டுயோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தவிர ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 254.79 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. புதிய கார் விலை இந்தியாவில் ரூ.86.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×