search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infinix Smart 6 Plus"

    • இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மிராக்கிள் பிளாக் மற்றும் டிரான்குவில் சீ ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமானதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் அடுத்த வெர்ஷனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் மாடலை தற்போது இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்போன் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீனில் இரண்டு பிளாஷ்கள் இடம்பெற்றூ உள்ளன. பின்புறம் டூயல் ரியர் கேமரா செட் அப் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி கைரேகை சென்சாரும் பின்புறமே உள்ளது.


    டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.82 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் உள்ளது. ஹீலியோ ஜி25 புராசஸரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்.பி டூயல் ரியர் கேமராவும் 5எம்.பி செல்ஃபி கேமராவும் இடம்பெற்று உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் லான்ச் ஆகி உள்ளது. மிராக்கிள் பிளாக் மற்றும் டிரான்குவில் சீ ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிற இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களும், டிசைன் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன.
    • இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமானதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் அடுத்த வெர்ஷனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் தயாராகி உள்ளது.


    இதற்கான மைக்ரோசைட்டும் ப்ளிப்கார்ட்டில் நேரலைக்கு வந்துள்ளது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும், டிசைன் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீனில் இரண்டு பிளாஷ்கள் இடம்பெற்றூ உள்ளன.

    பின்புறம் டூயல் ரியர் கேமரா செட் அப் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி கைரேகை சென்சாரும் பின்புறமே உள்ளது. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.82 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் உள்ளது. புராசஸர் மற்றும் கேமரா விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 29-ந் தேதி இந்தியாவில் லான்ச் ஆக உள்ளது.

    ×