search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day Celebration"

    • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

    மதுரை

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    "தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.

    மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

    • கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஆத்தி, கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், பிச்சை, முருகவள்ளி மலைராஜ், குஞ்சரம் முருகன் பங்கேற்றனர்.

    சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தேசிய கொடியை ஏற்றினார்.

    கடலாடி இதம்பாடல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மங்களசாமி, கடுகு சந்தை ஊராட்சி காளி முத்து, செஞ்சடைநாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ். வாகைக் குளம் ஊராட்சி தலைவர் ஜெய லட்சுமி வடமலை, எஸ். தரைக்குடி ஊராட்சித் தலைவர் முனியசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

    பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், காணிக்கூரில் ஊராட்சி தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், கண்டிலான் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம், ஏ.புனவாசலில் ராஜேந்திரன் ஆகியோர் கொடியேற்றினர்.

    பெரியகுளம் ஊராட்சி முத்துமாரி, பொதிகுளம் கிராமத்தில் லட்சுமி திரு வாப்பு, கொத்தங்குளம் ஊராட்சி கணேசன், மாரியூர் ஊராட்சி கன்னி யம்மாள் சண்முகவேல், நரிப்பையூர் ஊராட்சி நாராயணன், கன்னிராஜபுரம் ஊராட்சி சுப்பிரமணியன், செவல்பட்டி ஊராட்சி சொரிமுத்து ஆகியோர் கொடியேற்றினர்.

    கொக்கரசன் கோட்டை ஊராட்சி அப்பணசாமி, எஸ்.கீரந்தை ஊராட்சி பாலகிருஷ்ணன், பீ.கீரந்தை ஊராட்சி ஆனந்தம்மாள் அற்புதராஜ், கடலாடி ஊராட்சி ராஜமாணிக்கம் லிங்கம், மூக்கையூர் ஊராட்சி தொம்மை, டி.வேப்பங்குளம் ஊராட்சியில் முருகன், மேலச்செல்வனூர் ஊராட்சி மகரஜோதி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியேற்றினர்.

    வாலிநோக்கம் ஊராட்சி பீர்முகம்மது, சிக்கல் ஊராட்சி பரக்கத் ஆயிஷா சைபுதீன், கருங் குளம் ஊராட்சி காளிதாஸ், ஓரி வயல் ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    • கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.

    திருவாரூர்:

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது.

    தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

    பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளியின் 38-ம் ஆண்டின் விளையாட்டு விழா வினையும் கொண்டாடும் பொருட்டு 38 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
    • ஒலிம்பிக் கொடியை ஏற்றி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 38-ம் ஆண்டிற்கான விளையாட்டு பெருவிழாவினை பள்ளியின் ப்ளூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அரேனா ஏற்பாடு செய்திருந்தது.

    விழாவில் இந்திய நாட்டின் 76-ம் ஆண்டு சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் விதமாகவும், பள்ளியின் 38-ம் ஆண்டின் விளையாட்டு விழா வினையும் கொண்டாடும் பொருட்டு 38 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் 38 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி

    னார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் புளு ஸ்டார்ஸ் பள்ளியின் கொடியை ஏற்றினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பளு தூக்கும் போட்டியில் ஆசிய விருது பெற்ற யோகேஷ் கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

    விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விளை யாட்டின் அவசியத்தையும் அதன் பயனையும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

    • தனது உரையில் இந்திய நீதித்துறையை மோடி புகழ்ந்து பேசினார்
    • தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

    இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    2014ல் முதல் முறை பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி இவ்வருடம் 10-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடியேற்றம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உரையை கேட்டனர்.

    அப்போது பேசிய பிரதமர் மாநில மொழியில் பாடத்திட்டங்களை அமைப்பது குறித்து தனது அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் இந்திய நீதித்துறையை புகழ்ந்து பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:

    "மாநில மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தீர்ப்புகளில் உள்ள செயலாக்க பாகம் (operating part) இனி மாநில மொழிகளிலும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக, இந்த பணியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை கேட்டதும் விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மனம் நெகிழ்ந்து மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நோக்கி கும்பிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

    "ஜனவரி 26 குடியரசு தினத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தொடக்க நாளான ஜனவரி 28-ஐ கொண்டாடும் விதமாகவும் இந்த வருடம் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதுவரை 9,423 தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் உட்பட 14 மொழிகள் அடங்கும். உச்ச நீதிமன்றம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட 35,000 தீர்ப்புகளும் விரைவில் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததனால் 99 சதவீத குடிமக்களுக்கு அவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மோடியின் பாராட்டும், அதற்கு தலைமை நீதிபதியின் நன்றி தெரிவித்தலும் காண்போரை பெருமையடைய செய்தது. இது சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது
    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வெளியே வர நேரமாகி விடும் என தெரிவித்தார்

    இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் உள்ள ராஜ் காட் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கு பிறகு புது டெல்லியில் உள்ள புகழ் பெற்ற செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒரு நீண்ட உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளிகளுக்கு வழக்கம் போல் முன் வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், கார்கே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. பிரதமர் உரையாற்றி கொண்டிருக்கும் போது கார்கேயின் இருக்கை காலியாக இருந்த காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து கார்கே ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    "எனக்கு கண் பார்வை பிரச்சனை இருக்கிறது. அதனால் சுதந்திர தின விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டேன். மேலும் எனது வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் நான் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டி இருந்தது. நான் செங்கோட்டைக்கு வந்திருந்தால், அங்கு பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சபாநாயகர் அகியோர் வெளியே சென்ற பிறகுதான் நான் வெளியே வந்திருக்க முடியும். அதற்கு பிறகு நான் காங்கிரஸ் கட்சி அலுவகத்திற்கு வந்து கொடி ஏற்றி வைத்திருக்க முடியாது. இந்த காரணங்களால் நான் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை."

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று, முதல் முறையாக அக்கட்சி அலுவலகத்தில் கார்கே இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • 142 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றுவதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை படத்தில் காணலாம்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 142 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றுவதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை படத்தில் காணலாம்.

    • நகர மன்ற தலைவர் தேசியக்கொடியை ஏற்றினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பொறியாளர் வே.சம்பத், மேலாளர் சுகந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    தேசியக்கொடியை நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஏற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருண்முரளி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமலுவிஜயன் எம்எல்ஏ கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளூர்ரவி, ஏகாம்பரம், நகர மன்ற உறுப்பினர்கள் அரசு, கோவிந்தராஜ், மனோஜ், பாபு, நவீன்சங்கர், ஜாவித்அகமது, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

    மதுரை

    மதுரையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் சுந்தரமகாலிங்கம், பாக்கியம் செல்லதுரை, ஜோதி, ராஜலெட்சுமி, நச்சம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரியில் கூடுதல் வளாகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    மனோகரா நடுநிலைப்பள்ளி

    மதுரை மனோகரா நடுநிலைப்பள்ளியில் குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மதுரை அறம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் பால் ஜெயக்குமார் வரவேற்றார். அறம் அரிமா சங்க தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். கவுன்சிலர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். இதில் தலைவர் காளிதாஸ், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மகேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முத்தமிழ் மன்றம்

    மதுரை ஹார்விபட்டி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. தேசிய கொடியை மன்றத்தின் நிறுவன தலைவர் முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன் ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகிகள் மாரியப்பன், நாகேந்திரன், கணபதி, மோகன், சங்கர், ஸ்டெல்லா, சுடலை முத்து, குமார், செல்வராஜ், ராஜேஷ், ஹரிகிருஷ்ணன், நாகராஜ், அஞ்சு, நாகராஜ், பாண்டியராஜன், மணிகண்டன், குணசேகரன், தங்கவேலு, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனை வருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

    • பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.

    வட்டாட்சியர் அலுவ லகத்தில் ரவி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி முத்தரசன், நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கொடி ஏற்றினார். நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா, போகலூர் ஒன்றிய தலைவர் சத்யாகுண சேக ரன், பரமக்குடி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.
    • பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டையில் 15-ந் தேதி, காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

    விழா மேடையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.க. தலைவர் தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார். டாக்டர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார் முன்னதாக, காலை 8.45 மணிக்கு 76வது சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

    இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

    பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும். இடத்துக்கு முதலமைச் சர் சென்று தேசியக் கொடியையேற்றி வைத்து தேசியக் கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

    • மேயர் சுஜாதா தேசிய கொடி ஏற்றினார்
    • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    வேலூர்

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநகராட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர்கள் புஷ்பலதா வன்னிய ராஜா, நரேந்திரன், யூசுப் கான், மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ் சங்கர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சுதந்திர தின விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் மாநகராட்சி அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    மேலும் மாநகராட்சி வளாகம் முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்டல குழு தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    ×