என் மலர்

  நீங்கள் தேடியது "immunity"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும்.
  • உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும்.

  பருவகால உணவு என்பது அந்தந்த பகுதிகளில், அந்தந்த காலகட்டத்தில் விளையும் உணவு வகைகளாகும். அப்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சுவையானதாகவும், புத்துணர்ச்சியுடனும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாகவும் அவை இருக்கும். சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும். ஆனால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவைகளாக இருக்கலாம்.

  உள்ளூர் பழங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  அந்தந்த பருவ காலத்தில் உள்ளூரில் விளையும் பழங்கள் நன்கு பழுத்து, அதிக சுவை தரும். இயற்கையான சூழலில் சரியான விளைச்சலில் அறுவடை செய்யப்படுவதால் ஊட்டச்சத்தும் மிகுந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், ஆரஞ்சு பழத்தின் சுவை கோடையிலும், குளிர்காலத்திலும் மாறுபட்டு தெரியும். அதற்கு பருவகாலநிலைதான் காரணம்.

  உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும். அவைகளை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது சுவையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அவற்றை அறுவடை செய்த உடனே உட்கொள்ளும்போது வைட்டமின் சி, போலேட், கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் நிரம்பி இருக்கும். அதிக நாட்கள் சேகரித்துவைத்து சாப்பிட்டால், ஊட்டச்சத்தின் அளவும், தரமும் குறைந்துபோய்விடும். மேலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பருவகால பழங்கள் பிரஷ்ஷாகவும், தரமானதாகவும் இருக்கும். வெளியூர்-வெளிநாடுகளில் இருந்து வரவைக்கப்படும் பழங்கள் தரம் மற்றும் சுவை குறைந்தே காணப்படும்.

  உள்நாட்டு பருவகால பழங்கள், காய்கறிகள் அந்த சீதோஷ்ணநிலைக்கு ஈடுகொடுத்து நன்றாக வளரக்கூடியவை. அதனால் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதிருக்காது. பெரும்பாலான உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சை கொல்லி களின் தாக்கம் நிறையவே இருக்கிறது. அவற்றை அகற்றுவது கடினம். பருவகால உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் ரசாயனங்கள், அசுத்தமான பொருட்கள் சேருவதை கட்டுப்படுத்த முடியும்.

  விவசாயிகள் பருவ காலத்தில் குறிப்பிட்ட பயிர்களை அதிகமாக விளைவிக்கும்போது விவசாயத்திற்கான செலவு குறைகிறது. அறுவடைக்கு பிறகு உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படும்போது போக்குவரத்து செலவு குறைகிறது. அதனால் விலைமலிவாக கிடைக்கும். உள்ளூரில் விளையும் உணவுப்பொருட்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் உடலுக்கு உகந்ததாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக அமையும். அனைத்து வயதினரும் சாப்பிடு வதற்கு உகந்ததாகவும் இருக்கும். சிட்ரஸ், வைட்டமின் சி அதிகம் கொண்ட உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கோடை காலத்தில் போதுமான அளவு உட்கொண்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது.
  • சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முட்டைகோஸ் உதவியாக இருக்கும்.

  நம் உணவோடு சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..!

  முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

  உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

  இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
  • ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

  கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. முன்கள பணியாளர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. இது உடலில் கொரோனா நோய்க்கு எதிரான ஆற்றலை பெருக்குகிறது.

  அதே நேரத்தில் நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதுவும் இயற்கையான தடுப்பூசி போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

  புரதங்கள்: இது ஆன்டிபாடி பண்புகளை கொண்டது. நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தக்கூடியது. பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் அதிகளவு உள்ளடங்கி இருக்கிறது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் தரமான புரதங்கள் காணப்படுகின்றன.

  வைட்டமின் ஏ: இந்த சத்து நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் செல்களை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பால், முட்டை, கேரட், குடைமிளகாய், ஆரஞ்சு, தக்காளி மற்றும் அடர் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: பாக்டீரியாவை அழிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியது. நொய்த்தொற்றுகளால் ஏற்படும் அழற்சியிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. மீன்,மீன் எண்ணெய், ஆளி விதை, ஆளி விதை எண்ணெய், அக்ரூட், சோயா எண்ணெய், எள், பாதாம் போன்றவற்றில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

  வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின்களுள் இது முக்கியமானது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைரஸ் உடலுக்குள் நுழைவதை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், பசலை கீரை, அடர் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படும்.

  துத்தநாகம்: உடலில் துத்தநாகம் குறைந்தால் நோய் எதிர்ப்பு செல் களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். எள், பருப்பு வகைகளில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது.

  புரோபயாடிக்குகள்: புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை துரிதப்படுத்தலாம். சில வகை நோய்த்தொற்று களின் அபாயத்தையும் குறைக்கலாம். தயிர், பாலாடைக்கட்டியில் புரோபயாடிக் அதிகம் காணப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும்.
  • எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

  உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச் சத்து மிக மிக முக்கியம். உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக உடல் அசதி, முடி கொட்டுதல் போன்ற குறைபாடுகள் வரலாம். இவைகளில் இருந்து தப்பிக்க, இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். அந்தவகையில், எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

  1. பேரீச்சம்பழம்

  பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

  2. மாதுளை

  மாதுளை இரும்புச் சத்து நிறைந்த, சிறந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

  3. அத்திப்பழம்

  உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது. அத்திப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

  4. கொய்யாப்பழம்

  பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம். நமது ஊர் பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யாப்பழம். இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் காயாக இருக்கும் கொய்யாவிற்கு, ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தியும் உண்டு.

  5. உலர்திராட்சை

  உலர்திராட்சை மற்றும் இதர பழ வகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை உண்டு வந்தால் தேவையான அளவு இரும்புச் சத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சையினை உட்கொண்டு வாருங்கள்.

  6. ஆப்ரிகாட்

  ஆப்ரிகாட் பழவகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-16, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

  7. மாம்பழம்

  முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம். இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உண்டு வந்தால் ரத்தசோகை, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் சரும அழகினை மேம்படுத்த உதவும்.

  8. தர்பூசணி பழம்

  தர்பூசணி பழத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக் கின்றது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் இளமையுடன் காட்சி அளிக்கலாம்.

  இரும்புச் சத்தின் அவசியம்

  எலும்புகள் வலுவாக இருக்க, இரும்புச் சத்து அவசியம். உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன.
  • கிவி பழத்தில் வைட்டமின் “ஈ ” சக்தி நிறைந்திருக்கிறது.

  கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் கிவி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

  சரும நலம் கிவி பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் கிவி பழங்களை பழமாகவோ அல்லது சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

  கிவி பழத்தில் வைட்டமின் "ஈ " சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

  இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். கிவி பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். நரம்புகளில் ரத்தம் கட்டி கொள்ளாமல் செய்கிற சக்தி கிவி பழத்திற்கு உண்டு.

  பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. கிவி பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் கிவி பழம் தடுக்கிறது.

  கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் கிவிபழம் பேருதவி புரிகிறது.

  நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. கிவிபழம் சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.

  அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கிவி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

  ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கிவி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் "எ" மற்றும் "ஈ" சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை பார்க்கலாம்.

  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளின் பட்டியல்:

  ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கும். இவற்றில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மிளகையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

  மழை காலத்தில் வழக்கமான டீ, காபியை தவிர்த்துவிட்டு இஞ்சி டீ பருகுவது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதோடு காய்ச்சல், மார்பு சளி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும். இஞ்சியை சமையலிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

  நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் பூண்டுவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அது அதிகரிக்க செய்யும். ரத்த அழுத்தம், தமனிகளின் செயல்பாடுகளை சீராக பராமரிக்கும் தன்மையும் பூண்டுவுக்கு உண்டு.

  முட்டை கோஸ், கீரை போன்ற பச்சைக்காய்கறிகளில் வைட்டமின் சி, இ மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. பிராக்கோலி, பீன்ஸ், புடலங்காய், பட்டாணி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பப்பெற்றவை. அவைகளை தவறாமல் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  தயிர், மோர், லசி போன்ற பால் பொருட்கள் எளிதில் ஜீரணமாக உதவி புரிபவை. அவை குடலுக்கு நலம் சேர்ப்பவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய் தொற்றுகள், வீக்கம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கும் தன்மை கொண்டவை. வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துபவை.

  மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களும் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் கொண்டவை. ரோஸ்மேரி, துளசி, ஓமம் போன்ற மூலிகைகள் காய்ச்சல் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவை.

  மூலிகை டீ பருகி வருவதும் நல்லது. அது நோய்கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவும்.

  சளி முதல் புற்றுநோய் வரை அனைத்துவிதமான வியாதிகளிலும் இருந்து உடல் நலனை பாதுகாப்பதில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

  இரும்பு சத்து குறைபாடு கொண்டவர்கள் சிவப்பு குடமிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் நோய் எதிர்ப்பு நிறைந்துள்ளது.
  ×