search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day"

    • எதிர்காலத்தில் மாணவிகளின் பங்கு மேலோங்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உதவும் வகையில் தங்கள் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் இசபெல்லா வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் சிறுமலர் தலைமை உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கவுன்சிலர் மேற்கு மாவட்ட தி.மு.க பொருளாளர்விஜயன் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    அதில் எதிர்காலத்தில் மாணவிகளின் பங்கு மேலோங்க வேண்டும் மற்றும் நாட்டிற்கு உதவும் வகையில் தங்கள் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட கவுன்சிலர் லலிதா மோகன்,வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன்,சில்வார்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள் சுந்தரம்,ஒன்றிய துணைத் தலைவர் ராமதாஸ், வி.டி.பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன்,திண்டுக்கல் மாவட்ட அறநிலையத்துறை குழு உறுப்பினர் பாக்யராஜ்,வி.டி.பட்டிஊராட்சி துணைத் தலைவர் முத்துகுமார்,ஊராட்சி செயலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக கல்லூரியின் பேராசிரியர் முகமது ஆரிபா நன்றி கூறினார்.

    • இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சென்னை, ஓட்டல் இந்தியன் பேலஸ், உரிமையாளர், அல்ஹாஜ் செய்யது இப்ராகிம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி தேசிய மாணவர்படை மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். இளையான்குடி, ஹாஜி இஸ்மாயில் கனி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் ராமநாதன் பேசினார். நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் ஜகாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழத்துறை உதவிபேராசிரியர்அப்துல் ரஹீம் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலபணிதிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், ஹாஜி சிராஜூதீன், சுயநிதி பாடபிரிவு இயக்குனர் சபீனுல்லாஹ்கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை, இளையான்குடியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • திருப்புவனம் அரசுமகளிர் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கொடிஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சுந்தரபுரம் தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வைகைஆற்று பாலம் முன்பு உள்ள அரசு ஓய்வூதிய சங்கம் ஆகிய இடங்களில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கொடி ஏற்றினார்.

    நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி நகர்மன்ற அலுவலகம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, ஆகிய இடங்களில் தேசிய கொடிஏற்றினார். வட்டாச்சியர் அலுவ லகத்தில் தாசில்தார் ராஜா, துணைகண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. கண்ணன் பாபாமெட்ரிக்கு லேசன் பள்ளியில் பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.

    திருப்புவனம் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், அரசுமேல்நிலை பள்ளி, பழையூர் அரசு தொடக்க பள்ளி ஆகிய இடங்களில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தேசிய கொடியை ஏற்றினார்.

    செயல் அலுவலர் ஜெயராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் நஜீமுதின் கொடிஏற்றினார்.

    செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், மேலநெட்டூர் சொர்ணவாரீசுவரர் சாந்தநாயகி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    • வாடிப்பட்டியில் மரபு வழி விளையாட்டு போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
    • சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் காலம் மாற்றத்தால் மறக்கப் பட்டு வரும் மரபு வழி விளையாட்டுகள் அறிமுக விழாவும் மற்றும் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு பச்சை குதிரை, 7-கல், கிட்டிப்புல் போன்ற விளை யாட்டுகளும், மாணவிகளுக்கு பாண்டியாட்டம் (நொண்டி), கிச்சுகிச்சு தாம்பூலம் மற்றும் பல்லாங்குழி ஆகிய விளை யாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் சந்திரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பரம சிவம், உணவுப்பொருள் பாது காப்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரபு அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு தமிழ் மரபு அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினார். மரபு விளையாட்டுகள் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை பாப்பா விளக்கி பேசினார்.

    இப்போட்டியின் நடுவர்க ளாக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் வெற்றியாளர் களை தேர்வு செய்தனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணக்குமார், மோசஸ், நஜ்மூதீன், பேராசிரியை.இறைவாணி, முத்துக்குமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

    • பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
    • விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    ஊட்டி

    ஊட்டி நஞ்சநாடு, கப்பத்தொரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் 77வது சுதந்திரதின விழா நடந்தது. அப்போது பள்ளி முதல்வர் ரங்கநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ,மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ராமகிருஷ்ணா பள்ளியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பாடவேளை உருவாக்கி, அதன்மூலம் மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, பொது அறிவு, கட்டுரை, ஓவியம் மற்றும் கைத்தொழில் ஆகியவை கற்று தரப்படுகி ன்றன. இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்க ளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா ஆலோசனைப்படி அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிற்பட்டோர் கணக்கெடுப்பு எவ்வளவு காலத்தில் முடிவு பெற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்கு றுதிகள் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. பிற்பட்டோர் கணக்கெடுப்பு எவ்வளவு காலத்தில் முடிவு பெற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

    பஞ்சாலைகள் குறித்து அரசின் கொள்கை நிலை என்ன.? ஜவுளி பூங்கா குறித்து எந்த தகவலும் புதுவை யிலிருந்து வரவி ல்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது பற்றி தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். 100 நாட்களுக்கு மேலாக போராடும் புதுவை அரசின் சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பளம் குறித்து எந்தக் கருத்தையும் முதல்-அமைச்சர் தெரிவிக்கவில்லை.

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்கும் திட்டங்கள் பற்றி வாய்திறக்க வில்லை. பெருகி வரக்கூடிய திருட்டு, கொலை, கொள்ளை, போதை பொருள்கள் நடமாட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை. ரேசன் கடைகளை திறப்போம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கட்டை புதுப்பிக்க எதிர்ப்பு எழுந்து ள்ள நிலையில் அது குறித்தும் முதல்-அமைச்சர் தெரிவிக்க வில்லை. ஒட்டு மொ த்தத்தில் முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரை மாநில மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இவ்வாறு நாரார கலைநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • 259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
    • 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    சென்னை:

    சென்னை 1,2 மற்றும் 3 -ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள்(அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதந்திர தின விடுமுறை நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை) சட்டம் 1958-ன் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள 324 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 257 கடைகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதேபோல் 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    இதையடுத்து மொத்தம் 465 நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் கூறுகையில், தேசிய விடுமுறை தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காத 465 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜித் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சிக்குட்பட்ட காராம்போடை கிராமத்தில் சுதந்திரதினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் சூரியகலா தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    நாடு முழுவதும் சுதந்திர திருநாள் அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உயிர்தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ள னர். அதனடிப்படையில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம் ஆகியவைகளில் வளர்ச்சி பெற்று, நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டி ருக்கிறோம்.

    ஒவ்வொரு கிராமங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நடை பெற்று வரும் பணிகள், வரவு-செலவு கணக்குகள் ஆகியவைக் குறித்து பொது மக்கள் கண்காணிப்பது ஒவ்வொருவரின் கடமை யாகும். மேலும், 15-வது நிதிக்குழு மான்யம், ஊரக சொந்த நிதி ஆகியவைகளை கிராமங்களின் வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது கல்வியாகும். அதனை மாணவர்களுக்கு அளித்திடும் வகையில் தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இடைநிற்றலின்றி பள்ளிக்கு அனுப்பி, உயர்படிப்புகளை பயில்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவ டிக்கைகள் அனைவரின் பங்கு இருந்திடல் வேண்டும்.

    மேலும் கிராமப் பறங்களில் கழிப்பறைகளை மட்டுமே முறையாகப் பயன்படுத்தி, சுகாதா ரத்தினை பொதுமக்கள் பேணிக்காத்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு பெருந் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான்- உசிலம்பட்டியில் சுதந்திர தினவிழா, கிராமசபை கூட்டம் நடந்தது.
    • கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவி கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெய ராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார பணி ஆய்வாளர் முருகா னந்தம், வார்டு கவுன்சிலர் கள் வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் லதா கண்ணன் இனிப்பு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    நைனார் தொழுகை பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. எம்.வி.எம். கலைவாணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மருது பாண்டியன் தேசியகொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி ஆகி யோர் கலந்து கொண்டனர். அதேபோல் கல்வி இயக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கி னார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சி தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உழவர் உணவகத்தில் சேது தலைமையில் மன்னாடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஜெய்மா நர்சரி பள்ளியின் தாளாளர் கீதா, இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    முன்னாள் வர்த்த சங்க தலைவர் ஸ்ரீராமுலு அறக்கட்டளை சார்பாக 77-வது ுதந்திர தின விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் தலைமையில் முன்னாள் சேர்மன் முருகேசன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் பால முருகன் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் வரு வாய் அலுவலர் சதீஷ், தலைவர் ரம்யா நம்பிராஜன், கிராம நிர்வாக அலுவலர் முபாரக், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலு வலகத்தில் 77-வது சுதந்திர தின விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் தென் மொழி, நகராட்சி மேலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் சசிகலா, நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அஜித்பாண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மெய்யனம் பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவு, செலவு கணக்குகள் குறித்து பேசினார். இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    • நாடு முழுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

     

    மீடியா95 பழனிராஜா மற்றும் குரூப் அட்மின் மோகன் ராகவன் தலைமையில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    அடையார் ஆனந்தபவனின் நிர்வாக இயக்குநர் திரு. வெங்கடேஷ் ராஜா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார்.
    • இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

    உடுமலை:

    உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். டாக்டர் பாலகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

    தொடர்ந்து உடுமலை பாரத ஸ்டேட் வங்கியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார். வங்கி முதன்மை மேலாளர் ராபின்சன் தேசிய கொடி ஏற்றி வைத்து முன்னாள் ராணுவ நல சங்க அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் ,வங்கி பாதுகாவலர்கள் மதன் கோவிந்தராஜ், செல்வராஜ், நந்தகோ பால்,விஜயகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    1971 ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டு வெற்றியடைந்ததற்காக இந்திய அரசாங்கம் அழகிரிசாமி மற்றும் முத்துக்காளை அழகுராஜ், சந்திரசேகர் ஆகியோருக்கு இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர்களுக்கு வங்கி சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நாயப் சுபேதார் நடராஜ் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தனர். இதில் டிரஸ்டிகள் கணேசன், பாலமுருகன், முன்னாள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி ,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சத்யம் பாபு ,சைனிக் பள்ளி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் கொடியேற்றினர். இதில் பணி நிறைவு நூலகர் கணேசன், நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ருத்தரப்பா நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடந்த கொடியேற்று விழாவில் நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்து ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர் சக்தி ,செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சுபேதார், மேஜர் கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
    • பரிமள ரங்கநாதர் கோவிலில் சமபந்தி விருந்தை வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.

    மயிலாடுதுறையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, பஞ்ச அரங்கதலங்களில் பிரசித்தி பெற்ற திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தினை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்து உணவு அருந்தினார்.

    இதில் நகரசபை தலைவர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து உண்டனர்.

    ×