search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horticulture"

    • தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சி

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக ஊராட்சி தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சியை மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் இளவரசன் திட்டத்தை பற்றி விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பாசன கமிட்டி செயலாளர் காளிதாஸ், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், வட்டார தோட்டக்கலை அலுவலர் சூர்யா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரடியாக விவசாயிகளின் வயலில் தோட்டக்கலை துணை இயக்குனர் சு.சசிகலா ஆய்வு செய்து தோட்டக்கலை புதிய தொழில்நுட்பம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாசர், மரூர், முட்டியம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு, சீர்பாத நல்லூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியம் வழங்கப்பட்டு தற்போது உற்பத்தி செய்து வரும் காளான் வளர்ப்பு குடில், கடுவனூர் கிராமத்தில் புதிய பரப்பு விரிவாக்கம், பழப்பயிர் இனத்தின் கீழ் பாக்கு நடவு செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக பப்பாளி, வாழை நடவு தோட்டத்தினையும், உயர்ரக தோட்டக்கலை தொழில்நுட்ப சாகுபடி இனத்தின் கீழ் துறையின் மூலம் பிளாஸ்டிக் நிலப் போர்வை மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூடலூர், மருர், சீர்பாதநல்லூர் ஆகிய கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் தமிழக அரசின் மூலம் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் திட்ட இனத்தின் வாரியாக பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகள் மற்றும் அக்கிராம பொறுப்பு அலுவலரிடம் அடுத்த கட்ட பணிகளான தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு செம்மைப்படுத்தும் நோக்கில் விருப்பமுள்ள தகுதியான விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் விரும்பும் சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உரிய ஆவணங்கள் இணையத்தில் பதிவு மற்றும் பணி ஆணை வழங்கி சொட்டுநீர் பாசன வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து விவசாயிகளுக்கு நீண்ட காலம் வருமானம் தரக்கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, பாலா, தேக்கு உள்ளிட்ட ஏனைய பல்லாண்டு பழ பயிர்கள் மற்றும் மர பயிர்களை நடவுப் பணிகள் , பயிர் பராமரிப்பு பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளுமாறு மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட மானியங்கள் பயன்பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது ரிஷிவந்தியம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை துணை அலுவலர் சிவனேசன் தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜேஷ், சீனிவாசன், வேலன் வேளாண்மை உதவி அலுவலர் நசுருல்லா, அப்பாஸ் கிராம பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
    • உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்

    கடலூர்:

    பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.

    • முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
    • விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

    • 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமணம் தொகைக்கான ஆணை வழங்கினர்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய்துறை அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூகநலத்துறை தாசில்தார் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

    முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி எடுத்து கூறினர்.

    தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 52 பயனாளிகளுக்கு இறப்பு, முதியோர் உதவி தொகை, திருமணம் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி, 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உபகரணங்கள் உள்பட 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் கால்நடை மருத்துவர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ. கனேசன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன.
    • பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.

    குடிமங்கலம் :

    காய்கறி மற்றும் பழத்தோட்டங்களில் தேனீ வளர்த்தால் 30 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலை த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது :- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன. இந்த விபரம் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.தேனீக்கள் காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளில் உள்ள பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.

    பல்வேறு மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது மகரந்த கலப்பு ஏற்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் தேனீ பெட்டி வைத்து தேனீ வளர்ப்பது நல்லது.இதன் மூலம் தோட்டப்பயிர்களின் மகசூல் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்தோடு தேன் மூலமும் வருமானம் கிடைக்கும்.தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்க்கும் பெட்டி, மானிய விலையில் வழங்கப்படு கிறது. தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு 1000 தேனீ பெட்டிகள் வழங்கப்ப ட்டன. இந்த ஆண்டு இரண்டாயிரம் தேனீ பெட்டிகள், தேன் பூச்சியுடன் வழங்கப்படுகிறது. தேனை பிரித்து எடுக்கும் கருவியும் மானியத்தில் பெறலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். தேவையான உதவியும், ஆலோசனையும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இந்தக் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களைக் கொண்டு கிரெயின்ஸ்
    (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்று அடைவதை உறுதிப்படுத்த முடியும்.

    ஒற்றைசாரா வலை தளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.

    விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.

    வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

    இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல், ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கொண்ட ஆவணங்களை சம்பந்த ப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 பேர் கொண்ட குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • தங்கள் தேவைகளை அறிந்து கொள்ள உதவுவதாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூரில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலைத்துறை சார்ந்த மாணவிகள் தோட்டக்கலை அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக கிராமப்புறத்தில் சமூக வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவி மௌனிகா தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த சமூக வரைபடம் என்பது அந்த பகுதி மக்களையே ஈடுபடுத்தி அவர்களே தங்கள் பகுதியை பற்றி தெரிந்து,தங்கள் தேவைகளை அறிந்து கொள்ள உதவுவதாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.

    • சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில், சில பகுதிகளில் தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தக்காளியில் வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் தக்காளி பயிரிட்ட ஒரு சில தோட்டங்களில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்பட்ட செடிகளில் தண்டு, இலைகள், மற்றும் பழங்களில் கோடுகள் ஏற்பட்டு இருக்கும். இலைகளில் கருப்பு வட்ட புள்ளிகள் தோன்றி அந்த இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறும். பழங்களில் வட்ட வட்ட புள்ளிகள் ஏற்படும். பழுத்த பழங்களின் கழுத்துப்பகுதி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். செடியில் உள்ள பேன் மூலம் வாடல் நோய்க்கான வைரஸ் பரவுகின்றது. நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை பிடுங்கி அழித்து விட வேண்டும். தக்காளி விதைப்பதற்கு முன் நிலத்தை சுற்றி மக்காச்சோளம், கம்பு ஆகிய பயிர்களை நடவு செய்யலாம். 'இமிடா குளோரைடு' அல்லது ஊடுருவும் பூச்சிக்கொல்லிகளை பரிந்துரையின் பேரில் தெளித்து வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.
    • அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா புதுக்குடி கிராமத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆணைப்படியும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தல்படியும் 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.

    இதையடுத்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இதனை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலருமான விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மாங்கன்று வழங்கினார்.

    தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் இந்த குழுவுக்கு அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, தோட்டக்கலை அலுவலர் சோபியா, உதவி ேதாட்டக்கலை அலுவலர் ரகுபதி, கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
    • திருச்சுழி விவசாயிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அருப்புக்கோட்டை

    உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்தினை அதிகரிக்க சுற்று வட்டார கிராமங்களான கட்டங்குடி, சின்ன கட்டங்குடி, குறிஞ்சங்குளம், புலியூரான், செம்பட்டி, ஆலடிபட்டி மற்றும் இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மாரீஸ்வரி, தோட்டக்கலை அலுவலர் கண்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அகல்யா, முத்து மங்காள், விமல் ராஜ், கலைவாணி, சிவபிரியா, வேளாண் விற்பனை மற்றும் வணிக வரி துறை அலுவலர்கள் ரியாஸ், கோகிலா கலந்து கொண்டனர்.

    • தற்போது உழவர் சந்தையில் மொத்தம் 71 கடைகள் உள்ளது. இவற்றில் 58 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீதம் உள்ள 13 கடைகள் அமைக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குன்னூர் உணவு பதப்படுத்தும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை தஞ்சாவூர் வட்டார உதவி இயக்குநர் முத்தமிழ்ச்செல்வி உழவர் சந்தையில் சார்பில் ஆய்வு செய்து டான்ஹோடா விற்பனை நிலையம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-தஞ்சை உழவர் சந்தையில் விரைவில் தோட்டக்கலை சார்பில் டான்ஹோடா விற்பனை நிலையம் அமைய உள்ளது.

    இந்த விற்பனை நிலையத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பாலித்தீன் பைகள், மண்புழு உரங்கள், உயிர் உரங்கள், காய்கறி விதை பொட்டலங்கள், அழகு செடிகள் வளர்ப்பதற்கான தொங்கும் கூடைகள், செடிகளை வெட்டுவதற்கான கத்தரிக்கோல் மற்றும் தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள குன்னூர் உணவு பதப்படுத்தும் நிலையத்தில் தயாரித்த ஜாம், ஜெல்லி, ஸ்குவாஸ் மற்றும் ஊறுகாய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உழவர் சந்தையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் உழவர் சந்தையை சுற்றியுள்ள காய்கறி சாகுபடி செய்யும் கிராமங்களில் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்கள் இணைந்து விவசாயிகளிடையே கலந்துரையாடி உழவர் சந்தை குறித்தும் தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறி, தோட்டக்கலை விளைபொருட்களை சந்தைபடுத்துவதற்கு உழவர் சந்தையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது உழவர் சந்தையில் மொத்தம் 71 கடைகள் உள்ளது. இவற்றில் 58 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மீதம் உள்ள 13 கடைகள் அமைக்க விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் தோட்டக்கலை உதவி அலுவலர் குடியரசன், வேளாண் விற்பனை துறையின் வேளாண்மை உதவி அலுவலர்கள் அமரேசன், மோனிஷா ஆகியோர் விவசாயிகளிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சந்தைபடுத்தவும் உழவர் சந்தையில் கடைகள் அமைக்கவும் அடையாள அட்டை வழங்கினர்.

    ×