search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himanta Biswa Sarma"

    • தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கில் நிலையில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம்.
    • தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

    மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

    தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்கிறார்.

    இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தகவலை அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    நாளை மாலை 4 மணிக்கு தேஸ்பூர் விமான நிலையம் வந்து இறங்குகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக காஸிரங்கா செல்கிறார். அங்கு தங்கும் பிரதமர் மோடி, 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு காஸிரங்கா தேசிய பூங்கா செல்கிறார். அங்கு இரண்டு மணி நேரம் இயற்கை சூழல் கொண்ட பூங்காவை சுற்றிப் பார்க்கிறார். காஸிரங்காவில் இருந்து அருணாச்சல பிரதேசம் செல்கிறார்.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1.30 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்ஹாத் திரும்புகிறார்.

    திக்போய் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சுத்திகரிப்பு நிலையம் 768 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் 510 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கவுகாத்தி சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பராயுனி முதல் கவுகாத்தி வரையிலான 3992 கோடி ரூபாய் மதிப்பிலான பைப்லைன் திட்டத்தை திறந்து வைக்கிறார்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்கிறார். சிவசாகர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஜோர்ஹாட்டில் உள்ள மெலெங் மெத்தேலி போதரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
    • அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • 500 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நேற்று) ராமரை பற்றி பேச நல்ல நாள்.
    • ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா? என்றார் அசாம் முதல்வர்.

    ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநிலத்தில் பல்வேறு தடங்கல் ஏற்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாதான் காரணம் எனவும் விமர்சனம் செய்துள்ளது. தடங்கல் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை அசாமில் உள்ள கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். நான் என்ன குற்றம் செய்தேன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

    ராகுல் காந்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா, "ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா?. 500 ஆண்டுகள் கழித்து ராமரை பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ராவணனை பற்றி பேச வேண்டாம்" என்றார்.

    நடைபயணம் தொடர்பாக காங்கிரஸ்க்கும், ஹிமாந்தா பிஸ்வா சர்மவுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது ராகுல் காந்தியை ராவணன் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா மறைமுக தாக்கியுள்ளார்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.
    • இந்த யாத்திரையால் ஊழல் முதல் மந்திரி ஹிமந்தா பீதி அடைந்துள்ளார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.

    அசாமின் லக்கிம்பூருக்குச் சென்றபோது யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. குண்டர்களால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பேனர் கிழிப்பு போன்ற வெட்கக்கேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. முயற்சிக்கிறது. மக்களின் குரலை நசுக்கி. அதன்மூலம் ஜனநாயகத்தை சிதைக்கிறது. அசாம் பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல் மற்றும் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என பதிவிட்டுள்ளார்.


    • காங்கிரஸில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றார்.
    • தற்போது அமித் ஷா கட்டளையின்படி அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்.

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

    தற்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரான பத்ருதீன் அஜ்மல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்கள் வாக்குகளை பெற்ற ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தற்போது அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது:-

    டாக்டர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றீர்கள். தற்போது அமித் ஷாவின் கட்டளைக்கு இணங்க முஸ்லீம்களுக்கு எதிராக அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    முஸ்லீம் சமூகம் சர்மாவுக்கு பெரும் வாக்கு வங்கியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பாக அவர் அதை இழக்கக் கூடாது. இருண்டு வருடம் காத்திருங்கள், ஹிமாந்தா மற்றும் யோகி ஆகிய நாத் ஆகிய இருவரும் பிரதமர் மந்திரிக்கான போட்டியில் இருப்பார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபயணத்தின்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்.
    • பதிலடியாக ஹிமாந்தா சர்மா சோனியா காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் செய்து வருகிறார்.

    நடைபயணத்தின்போது அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வர் என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை ராகுல் காந்தி குறிப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிக ஊழல் செய்ய முடியுமா? என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில், "காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்திலிருந்து வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் நான் ஒரு வரமாகவே கருதுகிறேன். ஏனென்றால், மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலை இது எனக்கு அளிக்கிறது.

    ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிகமாக ஊழல் செய்ய முடியுமா?. போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் கியாஸ் துயரச் சம்பவம், ஆண்டர்சன் தப்பித்தல், 2ஜி ஊழல், சுரங்க ஊழல். இன்னும் ஏராளம் (பட்டியல் நீளம். சென்று கொண்டே இருக்கும்)" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஊழலில் ஈடுபடுவது எப்படி? என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவால் பாடம் எடுக்க முடியும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசாம் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி வரை 17 மாவட்டங்களில் 833 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.

    • அரசியல் கட்சி தலைவர்கள்தான் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்
    • வடகிழக்கு மாநிலங்களில் 2014-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

    மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரும் வகையில் முக்கியத்துவம் பெற்றது.

    இந்த நிலையில் அரசியல்வாதிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், மணிப்பூரில் உள்ளவர்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது குறை கூறவில்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் இப்படி நடக்கிறது என்று யாரும் கூறவில்லை. முன்பெல்லாம் என்ன நடந்தாலும் பழி டெல்லிக்கு வந்திருக்கும். இப்போது இது எங்கள் மோதல். இதற்கும் டெல்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

    இந்த மோதல் மே மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல பகுதியில் இருந்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்கிறாரக்ள். ஆனால், மணிப்பூரில் இருந்து யாரும் பிரதமர் மோடியை குறைகூறவில்லை.

    2014-ல் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெதுவான வளர்ச்சி இருந்தது. இணைப்பு அடிப்படையில் தற்போது திடீரென பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கு மேல் இருந்த ஹிமாந்த பிஸ்வா 2015-ல் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தை காட்டிலும் குறைவாகத்தான் மணிப்பூரில் நடந்துள்ளது
    • ஒட்டுமொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இந்த வீடியோ சம்பவம் குறித்து முன்னதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த வீடியோ பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதில் ஒரு அரசியல் விஷயம் உள்ளடங்கியுள்ளது.

    வீடியோ தேதியை பொருட்படுத்தாமல் இந்த சம்பவம் கட்டாயம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஒட்டு மொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது.

    மணிப்பூரில் நடந்தது வருத்தமான சம்பவம்தான். ஆனால் இது தினந்தோறும் மணிப்பூரில் நடப்பதுபோல் ஒரு எண்ணம் கொடுக்கப்படுகிறது.

    மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு எதிராக மணிப்பூரை எடுத்துக் கொண்டால், மணிப்பூரில் மிகவும் குறைவான சம்பவங்கள்தான் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் டுவிட்டர பக்கத்தில் இந்தியா வார்த்தையை நீக்கியுள்ளார்

    கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகள், கூட்டணிக்கு I.N.D.I.A. (இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி) பெயர் வைத்துள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணியை இந்தியா என்று அழைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் என்றாலே இந்தியா...!!! இந்தியா என்றாலே எதிர்க்கட்சிகள் கூட்டணி...!!! என சூழ்நிலை தோன்றுகிறது. இதுகுறித்து விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, டுவிட்டரின் முகப்பு பக்கத்தில் இருந்து INDIA என்ற வார்த்தை நீக்கிவிட்டார். அதற்குப் பதிலாக BHARAT என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார். பா.ஜனதாவினர் எப்போதுமே பாரத் என்ற வார்த்தையை உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அசாம் மாநில முதல்வர் என்பதை தற்போது பாரத்தின் அசாம் மாநில முதல்வர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நமது நாகரிக மோதல் இந்தியாவையும், பாரத்தையும் மையமாக கொண்டது. பிரிட்டீஷ் இந்தியா என பெயர் வைத்தது. காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபடவேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போரிட்டார்கள். நாம் அதற்காக தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.

    பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு டிஜிட்டல் இந்தியா, மேன் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா என பெயரிட்டுள்ளார். அவருக்கு தங்களுடைய பரிந்துரைகளை தெரிவிக்குமாறு, ஹிமாந்தா பிஸ்மா சர்மாவுக்கு காங்கிரஸ் பதில் கூறியுள்ளது.

    • இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் என அசாம் முதல் மந்திரி தெரிவித்தார்.
    • இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி ராணுவத்தினர் எந்த இடத்திலும் சோதனை நடத்துவதுடன் யாரையும் வாரன்ட் இன்றி கைது செய்யலாம்.

    இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கூறுகையில், மக்களின் கோரிக்கையின்படி மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இந்தாண்டு நவம்பர் இறுதிக்குள் திரும்ப பெறப்படும். மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு பதிலாக அசாம் போலீஸ் பட்டாலியன் செயல்படுவார்கள். எனினும், சட்டத்தின்படி மத்திய ஆயுத போலீஸ் படைகளும் இருப்பார்கள் என தெரிவித்தார்.

    • அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் ஷாருக் கான் யார்? என கேட்டிருந்தார்.
    • நேற்று அதிகாலை 2 மணிக்கு அவரை நடிகர் ஷாருக் கான் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    கவுகாத்தி:

    நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.

    அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றனர். இதேபோல், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    இதுபற்றி அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார்.

    மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல. ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நேற்று அதிகாலை அசாம் முதல் மந்திரிக்கு தொலைபேசி மணி அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் நடிகர் ஷாருக் கான் அவரிடம் பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி பிஸ்வா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்துப் பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம்.
    • காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் மட்டுமே உள்ளது.

    தெக்ரி கர்வால்:

    காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

    மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும், காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பாஜக விமர்சித்துள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியுள்ளதாவது:

    முதல் நாளிலிருந்தே நான் கூறியதை சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தி உள்ளார். அதிகாரம் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. காங்கிரசில் நடைபெற்ற தலைவர் தேர்தல், கட்சியில் ஜனநாயகம் மற்றும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக சிலர் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம். கார்கேவை ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×