search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassment"

    • ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மங்களூரில் இருந்து இந்த ரெயில் காலை 8 மணியளவில் புறப்படும். அதேபோன்று சம்பவத்தன்றும் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்தனர். மங்களூர் பண்ட்வால் பகுதியை சேர்ந்த ஜாஜிஸ் (வயது45) என்பவரும் பயணம் செய்தார். இவர் கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார்.

    அந்த ரெயில் காஞ்சங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது, பொதுப்பெட்டியில் பயணம் செய்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாதிரியார் ஜாஜிஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

    இதுகுறித்து அந்த பெண், தன்னுடன் பயணித்த கணவரிடம் தெரிவித்தார். அதுபற்றி கேட்டபோது பாதிரியார் அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து பாதிரியாரை சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணின் கணவர் பிடித்தார். பின்பு கண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.
    • போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 56 வயதான பள்ளி முதல்வர், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    மேலும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என மாணவிகளை மிரட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அதோடு, இதுபற்றி வெளியே கூறினாலும் உங்களை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.

    இதனையும் தனக்கு சாதகமாக்கி கொண்ட பள்ளி முதல்வர் ஏராளமான மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சிலர் இதுபற்றி தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநில மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

    பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்ததது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி முதல்வரின் பாலியல் தொல்லைகள் அம்பலமானது.

    பின்னர் போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி ரேணு பாட்டியா கூறியதாவது:-

    60 மாணவிகளிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது. இதில் 50 மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவிகள் பள்ளி முதல்வரின் தவறான நடத்தை பற்றி எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி எனும் குடியிருப்பு உள்ளது
    • இரு இளைஞர்கள் அவர் மகளை தங்களுடன் ஆடுமாறு துன்புறுத்தினர்

    டெல்லி தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி, ஃபரிதாபாத் (Faridabad).

    இங்குள்ள செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி (Princess Park Society) எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 52 வயதான பிரேம் மேத்தா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியர்கள் கொண்டாடும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு டாண்டியா ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கொண்டாட்டத்தில் பிரேம் மேத்தாவின் மகளும் பங்கேற்றார்.

    அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள். இதனால் பிரேம் மேத்தாவின் மகள் செய்வதறியாது திகைத்தார்.

    இதை கண்ட பிரேம் மேத்தா, தகாத செயலில் ஈடுபட்ட அந்த இரண்டு இளைஞர்களிடம் சென்று கோபமாக பேசினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியது.

    மோதல் முற்றியதில், அந்த இருவரும் பிரேம் மேத்தாவை கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.

    உடனடியாக அங்கிருப்பவர்கள் உதவியுடன் அவர் மகளும், குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேத்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடி வந்த ஒரு குடும்பம், இரு இளைஞர்களின் அக்கிரமத்தால் சோகத்தில் மூழ்கிய செய்து அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    • உடனடியாக அவரது கணவருக்கு போன் செய்த மனைவி கடன் வசூலிக்க நபர் ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே கொடூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வீட்டுக்கு தனியார் வாகன கடன் வசூலிக்க டிப்டாப் உடை அணிந்து வாலிபர் ஒருவர் சென்றார்.

    அங்கு கட்டிட தொழிலாளி மனைவியிடம் உங்களது கணவர் வாகனம் வாங்கி இருப்பதாகவும் அதற்காக மாதத் தவணை கட்டவில்லை என கூறியுள்ளார்.

    அதற்கு தொழிலாளியின் மனைவி அப்படி ஏதும் வாகனம் வாங்க வில்லையே என கூறியுள்ளார். உடனடியாக அவரது கணவருக்கு போன் செய்த மனைவி கடன் வசூலிக்க நபர் ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அப்படி ஏதும் கடன் வாங்கவில்லை உடனே வீட்டுக்கு வருவதாக அவர் தனது மனைவியிடம் கூறினார். அப்போது டிப்டாப் வாலிபருக்கும் தொழிலாளியின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் வீட்டின் வெளியே விளையாட கொண்டிருந்த தொழிலாளியின் மகள் 8 வயது மகள் அவரது அம்மாவிடம் இதே வாலிபர் ஆடையை கலைந்து பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த தொழிலாளியின் மனைவி அக்கம் பக்கத்தினரை அழைப்பதற்குள் ஆசாமி அங்கிருந்து பைக்கில் வேகமாக சென்று விட்டார். அந்த ஊர் வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற பொழுது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப்-டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தப்பட்டது.
    • அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது25). இவர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சீனுவுக்கும், எனக்கும் கடந்த 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 23 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொ ருட்கள் ெகாடுக்கப்பட்ன.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக சீனுவின் பெற்றோர் செல்லதுரை-மகாராணி ஆகியோர் துன்புறுத்துகின்றனர். இதனை கணவர் கண்டு கொள்வதில்லை. மேலும் மாமனார் தவறான உள்நோக்கத்துடன் நடக்க முயல்கின்றார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சீனு, அவரது பெற்றோர் ஆகிய 3 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது.

    காங்கயம்,:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதாக உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தாங்களாகவே முன்வந்து அவர்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தினசரி கூண்டு இருக்கும் பகுதிக்கு வரும் சிறுத்தை உள்ளே ஆடுகளை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து விட்டு செல்கிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க விடாமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் மலையடிவார பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றை சுற்றிலும் சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்தது. இந்த கால்தடம் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது வனத்துறையினருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது.
    • பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் உள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக இரவில் மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வரும் அவர் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் செல்போன்களில் ஆபாச வீடியோக்களை காட்டியும் தனது காம இச்சைக்கு இணங்க மாணவிகளை அவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

    இதனால் மாணவிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதிக்கு வந்த சின்மயமூர்த்தி, தனது அறைக்கு வரவழைத்த ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சல் போட்டபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். சம்பவம் பற்றி சக மாணவிகளிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டதும் சக மாணவிகள் சிங்கப்பெண்களாக வெகுண்டெழுந்தனர். கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்மய மூர்த்தி தனது அறையை மூட முயன்றார்.

    இருப்பினும் மாணவிகள் கதவை இடித்து தள்ளிச் சென்றனர். உள்ளே இருந்த அவரை தடியால் தாக்கினர். அவர் தான் தவறு செய்யவில்லை என கூறினார். அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதபடி தன்னிடம் அவர் தகாத செயலில் ஈடுபட்டார் என கூறினார். உடனே சுற்றி நின்ற மாணவிகள் தடியால் அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதற்கிடையே சம்பவம் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரியவந்தது. உடனே அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்திக்கு தர்மஅடி கொடுத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சின்மயமூர்த்தி, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையை தனது காமவலையில் வீழ்த்தியதும், அவருடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அந்த வீடியோக்களை காட்டி மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், தனது ஆசைக்கு இணங்கவில்லை எனில் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாகவும், டி.சி. (மாற்றுச்சான்றிதழ்) கொடுத்து அனுப்பிவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

    இதனால் மாணவிகள் பயந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் 14 ஆயிரம் அப்பாவி பெண்களை விபசாரத்தில் தள்ளியது அம்பலம்
    • ஒவ்வொரு ‘வாட்ஸ் அப்’ குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    நகரி :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 'ஹைடெக்' விபசாரம் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்கானாவின் பேகம் பேட்டையை சேர்ந்தவர் முகமது சல்மான்கான் என்கிற சமீர். இவர் முதலில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார்.

    அப்போது விபசார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஓட்டலில் தங்குவதை கவனித்த அவர், சுலபமாக பணம் சம்பாதிக்க இது சிறந்த வழி என முடிவு செய்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் உள்ள சமீருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஆர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து சோமாஜி கூடா பகுதியை மையமாக கொண்டு விபசார விடுதி நடத்த ஆரம்பித்தனர். இவர்களோடு மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வேறு வேறு மாநிலங்களில் 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம் இதை நடத்தி வந்தனர்.

    ஒவ்வொரு 'வாட்ஸ் அப்' குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 190 இளம்பெண்களுடன் விபசார விடுதிகளை நடத்தியுள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள இவர்களது ஹைடெக் விபசார தொழில் வெளிச்சத்துக்கு வந்தது. வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை 'வாட்ஸ்அப்' குழு மூலமாக அனுப்பி வைப்பார்கள். அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    கால் சென்டர் ஊழியர்கள் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் விபசார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள்.

    அந்த பணத்தில் 30 சதவீதம் விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள். எஞ்சிய 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள்.

    விபசாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களோடு தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷிய நாட்டு பெண்களையும் வைத்து கூட இவர்கள் விபசாரம் நடத்தியுள்ளனர்.

    வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது அந்த தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது.மேலும் அந்த சிறுமி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றதாகவும் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அந்த 14-வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த சிறுமி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவர் சிறுமியை பலாத்காரம் செய்ததில் கருவுற்றதும் தெரியவந்துள்ளது. மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மோகன்லால் (வயது 32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை சென்ட்ரல் ரெயில்வே போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு விரைவு ரெயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வந்த மோகன்லாலை ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.

    போக்சசோ ட்டத்தின்கீழ் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மோகன்லால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருப்பூரில் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் ராஜேந்திரனை சிறையில் அடைத்தனர்.
    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    பெண்களுக்கு எதிராக குடும்பத்தினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்கு கொண்டு வரப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,481 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவான மாநிலமாக டெல்லி விளங்குகிறது. அங்கு 65,481 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தகவல் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையை மேற்கோள்காட்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக 38,381 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 37,876 வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கேரளா (20,826), மத்தியப் பிரதேசம் (16,384), மகாராஷ்டிரா (16,168), அசாம் (12,739), கர்நாடகா (11,407), மேற்கு வங்காளம் (9,858), ஹரியானா (7,715) போன்ற மாநிலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை கையாள்வதற்கு 6 ஆயிரத்து 289 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அடிப்படை கட்டமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

    ×