search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanged himself"

    • போலீஸ் விசாரணை
    • வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீசர் லைன் பகுதியை சேர்ந்தவர் செந்தில், அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சத்யா (வயது 39). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    மாலையில் செந்தில் வீட்டுக்கு வந்த போது மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒழுங்காக படிக்குமாறு பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பலவநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜீவரத்தினம் (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஜீவரத்தினம் சரிவர படிப்பில் நாட்டம் செலுத்தவில்லை. ஒழுங்காக படிக்குமாறு அவரது பெற்றோர் ஜீவரத்தினத்தை கண்டித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஜீவரத்தினத்தின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜீவரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு வந்த பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவரத்தினம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மஞ்சகண்ணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (18) என்பவர் தங்கி பயின்று வந்தார்.
    • இவர் கடந்த 18-ந் தேதி கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாணவர் தற்கொலை

    வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மஞ்சகண்ணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (18) என்பவர் தங்கி பயின்று வந்தார்.

    இவர் கடந்த 18-ந் தேதி கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்மந்தமாக விஜயனின் தந்தை செல்வராசு வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விஜயனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு (வீடியோ பதிவுடன்) செய்யப்பட்டு 19-ந் தேதி அவரது தந்தை செல்வராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நடவடிக்கை

    இந்த வழக்கு சம்மந்தமாக இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முறையாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மாணவர் இறப்பு சம்பந்தமாக தவறான வதந்திகள் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

    வதந்திகள் பரப்புவோர் பற்றிய விவரங்கள் சமூக ஊடக பிரிவினர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 3 மாதமே ஆன கை குழந்தை உள்ளது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு காலனி பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் ரஜினி (வயது28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு சரளா (22) என்கிற மனைவியும், 3 மாதமே ஆன கை குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

    குழந்தையின் தொடர் அழுகை சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் மயங்கிய நிலையில் இருந்த சரளாவை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
    • உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, ரங்கநாதர் நகர் பகுதியை சேர்ந்த மார்கபந்து (வயது 39) கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    நேற்று தீடீரென வீட்டில்புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலாஜா அரசு மருத்து வமனையில் பிரேத பரிசோதனை
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை: 

    வாலாஜா சுவர்ண செட்டி தெருவை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45) இவர் வாலாஜாவில் சூப்பர் மார்க்கெட் உள்பட பல்வேறு தொழில்கள், வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அமர்நாத் தனது கடையில் உள்ள அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட அமர்நாத்திற்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

    • பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.
    • மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபி (வயது 51) இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.

    இவரது 2-வது மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபி மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் புதுவை பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று காலை வெகு நேரமாகியும் கோபி தங்கி இருந்த அறை திறக்கப்பட வில்லை.இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் கோபி தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகள் இறந்த வேதனையில் கோபி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் நானேய்யா கிழக்கு பாகாட்டியா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பஸ்வான் (22). இவர் காஞ்சிக்கோயில் அருகே உள்ள எருக்காட்டு வலசு பகுதியில் உள்ள மஞ்சள் தூள் தயாரிக்கும் மில்லில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அவரது மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றவர் மில்லின் மதில் சுவர் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிக்கோவில் போலீசார் ரமேஷ் பஸ்வானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆ னந்த் (42). இவரது மனைவி பிரேமா (32). இவர்கள் அதேபகுதியில் கடந்த 13 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன் ஆனந்துக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக ஆனந்த மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மனைவி பிரேமா அவரிடம் மருத்துவமனைக்கு போகலாம் என கேட்டதற்கு வேண்டாம் என ஆனந்த் கூறிவிட்டார்.

    இந்த நிலை யில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வழக்கம் போல ஓட்டலை பூட்டி விட்டு அங்கேயே கணவன்-மனைவி 2 பேரும் படுத்து தூங்கியுள்ளனர்.

    தொடர்ந்து அதிகாலை 4.30 மணிய ளவில் பிரேமா கண் விழி த்து பார்த்தபோது அருகில் ஆனந்த் இல்லாததால் பக்கத்து அறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலை மை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஆனந்த் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடன்‌பிரச்னை காரணமா?
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மனைவி கீதா (வயது 45). இவர் சிப்காட் மலைமேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கீதா தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருந்ததாகவும், மேலும் கடனை கட்ட முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இதனால் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவலறிந்த சிப்காட் போலீசார் கீதா கடன்பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருப்பதியில் பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தமிழரசன் (21). இவர் செய்யாறு கன்னியம்மன் கோவில் தெருவில் பாட்டி வீட்டில் தங்கி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி வந்தார்.

    சென்னைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனது நண்பருக்கு போன் செய்து எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் தூக்கு போட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செய்யாறில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நண்பர்கள் தமிழரசன் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தமிழரசன் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    உடல் நலம் சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் வீட்டில் சந்தோஷ் நேற்று தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைக் கண்ட தாயார் சரஸ்வதி அவரை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×