search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grandmother"

    • டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

    அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


    இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

    அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

    • சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

    சென்னை:

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி தலையில் காயத்துடன் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மயங்கி கிடந்தததாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்துக்கு தையல் போடப்பட்டு சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதில் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவரது முகவரி, குடும்பத்தினர், சொந்த ஊர் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லை.

    அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

    அதற்கு மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வந்த போது திடீரென ஒரு நாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைகள் அவ ருக்கு அளிக்கப்பட்டு பாதிப்பு குணப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சாந்தி, முதுநிலை மருத்துவர் டாக்டர் பிரவீண் குமார், டாக்டர் குடியரசு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனிடையே, அவரது விவரங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து மூதாட்டியின் உறவினர்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டோம்.

    அதன் பயனாக, அவரின் பேத்தி தேன்மொழி அதைப் பார்த்து மருத்துவமனைக்கு வந்தார். அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக அவர் அப்போது கூறினார்.

    இதையடுத்து, அந்த மூதாட்டியை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தன் நிலை மறந்த மூதாட்டிக்கு மனித நேயத்தோடு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • மாதம் ரூ.10 லட்சம் வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
    • பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லாட்டரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லாட்டரி சீட்டில் மெகா பம்பர் பரிசாக ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.37 லட்சம்) வீதம் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்ற வகையில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது.

    இது தொடர்பான இ-மெயில் அவருக்கு வந்துள்ளது. முதலில் அந்த மெயிலை பார்த்த போது அவர் 10 பவுண்டுகள் மட்டுமே பரிசு வந்ததாக நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த மெயிலை வாசித்த போது தான் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த அதிர்ஷ்டத்தை தன்னால் நம்ப முடியவில்லை என கருதிய அவர் தனது மருமகனிடம் மெயிலை காட்டி பரிசு விழுந்ததை உறுதி செய்தார். மேலும் நேஷனல் லாட்டரியில் இருந்தும் அதிகாரபூர்வமாக அவருக்கு பரிசு விழுந்ததை உறுதிபடுத்திய டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்து டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் கூறுகையில், இந்த பரிசை பற்றி நினைக்கும் போதெல்லாம் விசித்திரமாக தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை நான் பெறுவேன். இது எனக்கு 100 வயது வரை இருப்பதற்கான காரணத்தை அளிக்கிறது. இந்த பரிசு தொகை மூலம் பழமையான எங்கள் வீட்டை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    • ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள அம்மாக்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி பெரம்பாயி (வயது 78). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது பேரன் சூர்யா (25) என்பவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பெரம்பாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • மூதாட்டியிடம் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு அருகே உள்ள புலவன்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தா (வயது 75).

    இவர் சம்பவத்தன்று தனது சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியிடம் தஞ்சாவூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்டனர்.

    பின்னர் சிறது நேரத்தில் மூதாட்டி யிடம் இருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இது குறித்து வசந்தா பாப்பாநாடு போலீசில் புகார் அளி த்தார்.

    அதன் பேரில் பாப்பா நாடு இன்ஸ்பெ க்டர் இள ங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்க ளை தேடி வருகி ன்றனர். 

    • பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
    • கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சரோஜா என்ற மூதாட்டியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மனநலம் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு முடி சுத்தம் செய்து குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, தொடர்ந்து மனநல சிகிச்சை அளித்து, நல்ல உணவளித்து வருகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    மகளிர் உதவி மைய அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் இவர்களின் ஆலோசனைப்படி திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே வீதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்த முகவரி சொல்ல தெரியாத 63 வயது மதிக்கத்தக்க சரோஜா என்ற மூதாட்டியை சமூக நலத்துறை ஓஎஸ்சி நிர்வாகி சுமிதா மற்றும் பணியாளர்கள், திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உதவியுடன் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கு சரிவர ஒத்துழைப்பு செய்ய மறுத்த சரோஜாவை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு கொண்டு வந்து மனநல சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிப்பதற்காக ஓ.எஸ்.சி நிர்வாகி சுமிதா, தலைமை காவலர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராஜகணேஷ் ஆகியோர் சேர்த்தனர்.

    நம்பிக்கை மனநல காப்பக சமூகப் பணியாளர் சுபா, பணியாளர்கள் சரவணன், கோகிலா, செவிலியர் சுதா ஆகியோர் அவரை ஆசுவாசப்படுத்தி குளிக்க வைத்து மனநல சிகிச்சைக்காக சேர்த்து க்கொண்டனர் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு முடி சுத்தம் செய்து குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, தொடர்ந்து மனநல சிகிச்சை அளித்து, நல்ல உணவளித்து வருகிறோம். சில நாட்கள் கழித்து அவரின் முகவரியை கண்டறிந்து கண்டுபிடித்து அவர்களது வீட்டாருடன் சேர்ப்போம் என்றார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூர் சர்க்கரைபாளையம் பழனி தெருவை சேர்ந்தவர் ஜோதி (70).

    இவர் கடந்த 2 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு ஜோதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் மூதாட்டி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பண்டார இடும்பமுதலியார் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 58).

    இவருடைய சகோதரி ராஜேஸ்வரி (60). கணவனை இழந்த ராஜேஷ்வரி கடந்த 17 வருடமாக தம்பி செல்வகுமாரின் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து செல்வகுமார் தாரமங்கலம் போலீசில் தனது சகோதரியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    சம்மட்டிபுரம், ஸ்ரீராம் நகர், முல்லை தெருவை சேர்ந்த மாடசாமி மனைவி முத்துலட்சுமி (70), மனநலம் பாதித்தவர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயமடைந்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்தவர்  பாலம்மாள் (வயது 62). இவர் இளையான்குடி அருகே சாலையில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் படுகாயமடைந்த மூதாட்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

    இந்த விபத்து குறித்து இளையான்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் வீடு புகுந்து நகையை பறித்து சென்றார்.
    சாத்தான்குளம்:

     சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் தவமணி, கூலி தொழிலாளி. இவரது  மனைவி தாமரை புஷ்பம்(வயது 65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். 

    கணவன், மனைவி மட்டும் கிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் தாமரை புஷ்பம்  வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது வீட்டின் பின்புற வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் தாமரை புஷ்பம்  அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்தான்.

    அதிர்ச்சியடைந்த தாமரை புஷ்பம் திருடன்... திருடன்... என்று சத்தம் போடவே மர்ம நபர் நகையை பறித்துக் கொண்டு  ஓடிவிட்டான்.  இதுகுறித்து தாமரை புஷ்பம் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து  விசாரனை நடத்தி நகையை பறித்து கொண்டு ஓடிய மர்ம நபரை தேடி வருகிறார்.
    ×