search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.

    இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.

    இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது.
    • பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து காணப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரிக்கு அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவண குமார் மேற்பார்வையில் பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து பாண்டி, தலைமை காவலர் சேகர், ஆனந்த், அல்டஸ் பிவின் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பேட்டை கண்டியப்பேரி குளத்து கரை பகுதியில் சிலர் சந்தேகப்படும்படியாக நிற்பதாகவும், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அடிக்கடி சென்று வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மீண்டும் வந்த அதே காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உடனே போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது. ஆனால் போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது அதில் 2 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஏராளமான பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த கும்பல் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனி தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பேச்சிமுத்து (வயது 27), தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரது மகன் மதன் செல்வம் (22), தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த துரை என்பவரது மகன் முருகன் (20), அதே பகுதியை சேர்ந்த இசக்கி என்பவரது மகன் இசக்கி ராஜா (23), பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் அஜித்குமார் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? எங்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர்? இதுவரை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
    • உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் திருவள்ளுவர் காலனி 63-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது வீட்டில் நேற்று இரவு 2 மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது. இதில் பால்கனி பகுதி தீப்பிடித்து எரிந்தது.

    இது தொடர்பாக கே.கே. நகர் போலீசில் சதீஷ் புகார் அளித்தார். அதில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்பீடு ஹரீஸ் என்பவர் தனக்கு இன்ஸ்டாகிராமில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவர்தான் மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி வீட்டின் பால்கனியில் வீசி சென்ற ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சதீஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    சதீசும், ஹரீசும் நண்பர்களாக இருந்து பிரிந்துள்ளனர். இருவருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    முதலில் நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் பிரிந்துள்ளனர். சதீசின் கூட்டாளியான கிச்சா என்பவர் கடந்த ஜூன் மாதம் ஹரீசை தாக்கி காயப்படுத்தி உள்ளார். பின்னர் கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

    இதன் பிறகு ஹரீஸ், சதீசை அழைத்து நீ சொல்லித்தான் கிச்சா என்னை தாக்கினார். தற்போது உன்னுடன் யாரும் இல்லை. உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்து மண்ணெண்ணெய் பாட்டில்களும் ஹரீஸ் வீசி இருப்பது தெரிய வந்துள்ளது.

    18 வயதே ஆகும் ஹரீஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு இருக்கும் நிலையில் 19 வயது சதீஷ் மீது 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தூத்துக்குடியில் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விசாரணையில் விக்னேஸ்வரன் என்ற விக்கி விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி யில் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் காருடன் சந்தே கத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 33) என்பதும், அவர் விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா பதுக்கிய காரையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து சோதனை நடத்தினர்.
    • அதில் அவரிடம் 2 ½ கிலோ கஞ்சா இருப்பதும், அதனை அவர் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுப வர்களை உடனடி யாக கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி இன்று தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையில் நகர தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து சோதனை நடத்தினர்.

    அதில் அவரிடம் 2 ½ கிலோ கஞ்சா இருப்பதும், அதனை அவர் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தெர்மல், முத்துநகரை சேர்ந்த பெரியநாயகம்

    ( வயது 48) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • புதூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.
    • முகைதீன்,வசந்தகுமார் ஆகியோர் முருகனிடம் கஞ்சா வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் புதூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் களக்காடு நடுத்தெருவை சேர்ந்த முகைதீன் (25), கடம்போடுவாழ்வை சேர்ந்த வசந்தகுமார் (20) என்பதும், இவர்கள் களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முருகன் (60) என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4,650 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 21-ந்தேதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் செல்வராஜ் என்ற செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர்.
    • கலெக்டர் லட்சுமிபதி, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை அருகில் கடந்த மாதம் 21-ந் தேதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பாரதிநகரை சேர்ந்த பெருமாள் மகன்களான செல்வராஜ் என்ற செல்லக்குட்டி (வயது28) மற்றும் சின்னதம்பி (26) ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இவ்வழக்கில் செல்லக்குட்டி மற்றும் சின்னதம்பி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் எஸ்.பி. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் கலெக்டர் லட்சுமிபதி, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 156 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது ராஜபாண்டி, கண்ண பெருமாள், கர்லின் மற்றும் ஷானவாஸ் ஆகிய 4 பேரும் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கஞ்சா பதுக்கல்

    அதில் அவர்கள் தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த ராஜபாண்டி (வயது24), அழகேசபுரம் பகுதியை சேர்ந்த கண்ண பெருமாள் (24), காந்திநகரை சேர்ந்த கர்லின் (24) மற்றும் நெல்லை பேட்டை, காமராஜ் நகரை சேர்ந்த ஷானவாஷ் (23) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ராஜபாண்டி, கண்ண பெருமாள், கர்லின் மற்றும் ஷானவாஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிட மிருந்த 1,200 கிராம் அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ராஜபாண்டி மீது ஏற்கனவே சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் என 12 வழக்கு களும், கண்ண பெருமாள் மீது 2 வழக்குகளும், கர்லின் மீது ஒரு திருட்டு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்கு களும் உள்ளது என போலீ சார் தெரிவித்துள்ளனர்.

    • சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

    நெல்லை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதனால் சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையிலான போலீசார் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அதனையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், அந்த நபர் கீழ சுரண்டை மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்த திருமலைக்குமார் என்பவரது மகன் நவீன்(வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது கஞ்சா விற்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வடக்கு கதிரவன் காலனி பகுதியில் 2 வாலிபர்கள் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த காலனியில் வசித்து வரும் அரவிந்த்(வயது 26), அருண்குமார்(20) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    • திருப்பாதிரிப்புலியூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசாருக்கு கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீ சார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த வாலி பர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் கே.என். பேட்டை யை சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாஜி கணேசனை கைது செய்தனர்.

    • பட்டர்புரம் விலக்கில் நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர்.
    • கஞ்சா விற்பனை செய்த ரீகன், உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் விலக்கில் ஒரு கும்பல் லாரியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக நாங்குநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர். அதில் லாரியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழியை சேர்ந்த ரீகன், தூத்துக்குடி ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த ராஜதுரை, மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்ற லெப்ட் செல்வம், கோபி, சிவசுப்பு என்ற சிவா, தூத்துக்குடி லீவிபுரத்தை சேர்ந்த முத்து, நாங்குநேரியை சேர்ந்த இசக்கிபாண்டி, கல்யாணி, தென்னிமலையை சேர்ந்த இசக்கிப்பாண்டி, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த பாவன்பவிகானா, ராமுடூ, மேலப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அனிதா ஆகிய 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ எடையுள்ள கஞ்சாவும், லாரியும் பறிமுதல் செய்யப் பட்டது.

    ×