search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganguly"

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். ஆனால் தீவிர பயிற்சி மேற்கொள்ளவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் முக்கிய போட்டி தொடர்களில் விளையாடவில்லை. இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ளார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு ரிஷப் பண்ட் சென்றார். அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்த நிலையில் டெல்லி அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி கூறும்போது, "ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் விளையாடுவார். தற்போது அவர் பயிற்சி செய்யமாட்டார். வீரர்கள் ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் இருப்பதால் அவருடன் அணியை பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15.3 ஓவரில் 165 ரன்கள் குவித்தனர்
    • இந்தியா 17 ஓவரில் 179 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று புளோரிடாவில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில்- ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    15.3 ஓவரில் இந்த ஜோடி 165 ரன்கள் குவித்தது. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 179 இலக்கை 17 ஓவரிலேயே எட்டியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய சுப்மான் கில் அதிரடி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    இந்த நிலையில் அப்போதைய சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று இந்த ஜோடியால் ஆக முடியும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் சமமான திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய வகையில், ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்ய முடியும். அதற்கான வழியை அவர்கள் தேடுவது அவசியம். அவ்வாறு செய்தால், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். அவர்கள் சச்சின் டெண்டுல்கர்- கங்குலி போன்று சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.

    அவர்கள் ஆட்டத்தின் சில பிரச்சனைகளை அவர்கள் கண்டுபிடித்து, அதை சரியான முறையில் செய்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனாக அமையும்'' என்றார்.

    • டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை.
    • விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    மும்பை:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 68 போட்டியில் தலைமையேற்று 40 வெற்றி, 11 டிராவுடன் 4-வது சிறந்த கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் திடீரென கேப்டன்சியை விலகியது ஏன் என்றும், பிசிசிஐ தலைவர் கங்குலி உடனான மோதலால் மட்டுமே விராட் கோலி பதவி விலகினார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும். அதேபோல் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.

    அந்த நேரத்தில் இந்திய அணிக்கு உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு இருந்தது. அதனால் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
    • ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் நியமிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிப்பு.
    • கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.

    திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா கங்குலியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து சாஹா தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தங்களின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு திரிபுரா சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
    • சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 54-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய' ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 16.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சை சூர்யகுமார் யாதவ் நாலாபுறமும் பறக்க விட்டார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 (35) ரன்கள் எடுத்தார்.

    இந்த நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் தான். அவர் கம்ப்யூட்டரில் பேட் செய்வது போல் தெரிகிறது.

    என தெரிவித்துள்ளார்.

    • 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஜர் பின்னி இடம் பெற்றார்.
    • பி.சி.சி.ஐ. செயலாளர் பதவிக்கு மீண்டும் ஜெய்ஷா போட்டியிட முடிவு.

    மும்பை:

    பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் அந்த பதவிகளுக்கான தேர்தல் பணிளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை 13 ஆம் தேதி நடைபெறு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். என்றும் அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்த முறை கங்குலி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் செயலாளர் பதவிக்கு மீண்டும்  போட்டியிட ஜெய்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் கங்குலி போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ரோஜர் பின்னியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளரான ரோஜர் பின்னி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றவர். பின்னி தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் அலுவலக பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    • 20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை.
    • உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

    உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகி இருந்தார்.

    முதுகுவலி காயம் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆட இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பும்ரா விலகியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களில் ஒருவர் இடம் பெறுவார் என்று கருதப்படுகிறது. இதற்காக முகமது ஷமி, தீபக் சாஹர் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ரா விளையாட இன்னும் வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா வெளியேறவில்லை. அவர் இன்னும் நீடிக்கிறார். பும்ராவின் நிலை குறித்து இன்னும் 2 அல்லது 3 நாட் களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்கள். 13-ந்தேதி வரை இந்திய அணி பெர்த் நகரில் இருக்கும்.

    உலகக்கோப்பை போட்டியின் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதி மோதுகிறது. அதற்கு முன்பு 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. அக்டோபர் 17-ந்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ந்தேதி நியூசிலாந்துடனும் இந்தியா விளையாடுகிறது.

    • நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
    • நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்

    புதுடெல்லி:

    மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.

    இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும்.

    மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடினோம்.
    • நான் விளையாடியதை விட அதிக போட்டிகளில் அவர் விளையாடுவார் .

    ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் காங்குலி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். அவர் (கோலி) என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம், நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம் .

    நான் எனது தலைமுறையில் விளையாடினேன். அநேகமாக. நான் விளையாடியதை விட அதிகமாக போட்டிகள் அவர் விளையாடுவார் . தற்போது, ​​நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் உலக ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    கொல்கத்தா:

    லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

    மேலும் இர்பான் பதான், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத், பார்த்தீவ் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்ற அனுபவ வீரர்களும் ஆகியோரும் இந்திய மகாராஜா அணிக்காக விளையாட உள்ளனர்.

    கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங் மற்றும் ஜோகிந்தர் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் மகராஜா அணிக்காக விளையாடுகின்றனர். இந்த தொடரின் ஆணையராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவி சாஸ்திரியும், கங்குலியும் இணைந்துள்ளனர்.

    உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்திய மகாராஜா அணி விவரம்:-

    கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜோகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி

    உலக ஜெயிண்ட்ஸ் அணி விவரம்:-

    இயன் மார்கன்(கேப்டன்), சிம்மன்ஸ், கிப்ஸ், காலிஸ், ஜெயசூர்யா, மாட் பிராயர், நாதன் மெக்குல்லம், ஜாண்டி ரூட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெயின், மசகார்ட்சா, முர்த்தசா, அஸ்கார் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கேவின் ஓ பிரெயின், தினேஷ் ராம்டின்

    • ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.
    • 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். டெலிவிஷன் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரத்து 390 கோடிக்கு விற்பனையானது. ஏலம் முடிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த தகவலை தெரிவித்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஒளிபரப்பு ஒப்பந்தம், 20 ஓவர் உலக கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவார்கள் என நினைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மெகா ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த இது அரிய வாய்ப்பாகும். இன்னும் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு உதவும். கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான திட்டமிடல் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டு. இது நுணுக்கமாக கையாளப்பட்டது. இந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துக்காகவும், பெருமைக்காகவும் ஆடுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியை விட சர்வதேச போட்டிகளில் தான் மதிப்பு அதிகம். ஐ.பி.எல். போட்டியால் இரு நாடுகள் இடையேயான தொடர் பாதிக்காது. அதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படுகிறது. ஜூனியர் கிரிக்கெட்டுக்கு நாங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்போம். இளம் வீரர்களை தொடர்ந்து உருவாக்குவோம்.

    ஐ.பி.எல். போட்டியால் வீரர்களுக்கு சோர்வு இருப்பதாக கருதவில்லை. 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வாய்ப்பு உள்ள வீரர்களுடன் விளையாட தொடங்குவோம்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

    ×