search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Safety Awareness"

    • தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
    • பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    பாரம்பரிய உணவே பண்பாட்டின் அடையாளம் உள்ளிட்ட தலைப்பில் பேச்சுப்போட்டி, சரியான உணவு, சுகமான வாழ்வு என்ற தலைப்பில் கவிதைப்போட்டி மேலும் சொற்றொடர் முழக்கப்போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இதில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பத்மபிரியா மற்றும் ஹரிபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு, தர நிர்ணய துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
    • இதில் பாரம்பரிய உணவு தயாரிக்கும் உபகரணங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள்களின் தரங்களை விளக்கும் வண்ணம் இந்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயத்துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைமுன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், டி.எஸ்.பி.சீனிவாசன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய மண்டல இயக்குனர் ஷானு ஜேக்கப், மாநிலத் துணை இயக்குனர் கண்ணன், நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், கொடைக்கானல் ரோட்டரி கிளப் தலைவர் கார்த்திக், இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் பாஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரையண்ட் பூங்காவில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கோட்டாட்சியர் முருகேசன், ஆணையாளர் நாராயணன், நகர்மன்ற தலைவர் செல்லத்துரை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    பிரையண்ட் பூங்காவில் இருந்து ஏரிச்சாலை வழியாக 7 ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில்விழிப்புணர்வு ஊர்வலம் நிறைவு பெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கில் இந்திய, தமிழக பாரம்பரிய உணவு வகைகள், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கும் பழங்காலபாத்திர பண்டங்கள் காட்சிப்படுத்த ப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் பாதுகாப்பான உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுப் பொருட்களை உண்பது அதன் தரங்களை அறிவது போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

    விழுப்புரத்தில் கோடைகால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி மையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கோடைகால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு கண்காட்சி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    அரசு உத்தரவின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலத்தில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், கலப்பட உணவுப்பொருட்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளவும், கலப்பட உணவு பொருட்களை உட்கொள்வதால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் அலுவலக வேலை நாட்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்த மையம் செயல்படும்.

    இங்கு தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பான கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விவர சீட்டில் கவனிக்க வேண்டியவை பற்றிய விவரங்கள் அடங்கிய பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் உணவில் கலப்படங்களை கண்டறிய மேற்கொள்ள வேண்டிய விரைவு சோதனைகள் குறித்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. உணவுப்பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்தும், உணவுப்பொருட்கள் வாங்கும்போது கண்டறியப்படும் குறைகளை ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தெரிவிப்பதற்கும் இந்த மையத்தில் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், எம்.பி.க்கள் ராஜேந்திரன், ஏழுமலை, சக்கரபாணி எம்.எல்.ஏ., விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, உதவி கலெக்டர் (பயிற்சி) வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×