search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "False Case"

    • பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் செக்காங்க ண்ணி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பென்னி(வயது 49). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன்கு மார். இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த மாதம்(ஆகஸ்டு) 11-ந் தேதி வெளியே வந்தார்.

    இந்த நிலையில் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்போன் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

    தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஜான் பென்னி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் பிரவீன் குமாருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்து ள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜான் பென்னி தனது மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்எண்ணைய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதனைக கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜான்பென்னியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான் பென்னி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கான அனுமதியை ரத்து செய்ய க்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆதரவு தெரி வித்திருந்தனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் ஈசன் உள்ளிட்டோர் மீது போலீ சார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனுப்பட்டி கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்ட குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக விவசாயிகள்- பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 10 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 10 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட தினமே தனசேகரின் மனைவி ஜான்சி மற்றும் உறவினர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தனசேகரனின் மனைவி ஜான்சி கணவர் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் தனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    • வல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வரும் நஸ்ருதீன் என்பவர் மீது தொடர் பொய் வழக்கு வடலூர் போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இதனை விசாரணை நடத்தி காவல் நிலைய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேலும் முஸ்லிம் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் காவல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்டக் காவலாளியை கைது செய்தனர்.
    • கிராம மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்டக் காவலாளியை கைது செய்தனர்.

    மேலும் 20 பேரை தேடி வருவதாகவும் அறிவித்தனர். ஆனால் வனத்துறையில் நிலவும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், வனவிலங்குகள் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வந்ததன் காழ்புணர்ச்சி காரணமாக வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன் கரடி வேட்டை நடந்ததாக பொய் வழக்கு பதிவு செய்து, துன்புறுத்தி வருவதாக கீழவடகரை கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுபற்றி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீழவடகரை கிராம மக்கள் சார்பில் வனத்துறை துணை இயக்குனரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் லெட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல், ஒன்றிய துணை செயலாளர் லெனின் முருகானந்தம், பொருளாளர் அயூப்கான், மாநில குழு உறுப்பினர் வேலாயுதம், சுப்பையா, ஐயாகுட்டி, ஜவஹர், கோசிமின், ராமசுப்பு, சுரேஷ், ஸ்ரீதர், வேல்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சுந்தர் மற்றும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கை குழந்தையுடன் வந்த பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் பொய் வழக்கு பதிவு செய்யும் வனத்துறை இயக்குனர் ரமேஷ்வரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், துணை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    அத்துடன் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு களக்காடு போலீசார் கடும் கெடுபிடி செய்ததாகவும் புகார் தெரிவித்தனர். கீழவடகரையில் வனத்துறையின் கிராம வனக்குழு செயல்பட்டு வருகிறது.

    இந்த வனக்குழு தலைவர் பாலன் மற்றும் கிராம மக்கள் வனப்பகுதியில் காட்டு தீ விபத்துகள் ஏற்பட்ட போது, அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனக்குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதனால் கடந்த 2019-2020 ஆண்டில் சிறந்த வனக்குழுவாக கீழவடகரை கிராம வனக்குழு தேர்வு செய்யப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் விருது வழங்கியுள்ளனர்.

    தற்போது அந்த குழுவின் தலைவர் பாலன் மற்றும் கீழவடகரை கிராம மக்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் அந்த விருதுடன் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×